81. திருச்சபை ஆவதென்ன?
பரிசுத்த பாப்பாண்டவரோடும். அவருக்குக் கீழப்பட்ட மேற்றிராணி மார்களோடும் ஒன்றித்திருக்கிற விசுவாசிகளின் சபையே திருச்சபையாம்.
82. திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறவர் யார்?
யேசுநாதர் சுவாமிதான்.
83. அவர் தமக்குப் பதிலாக கண்கண்ட தலைவராக யாரை ஸ்தாபித்தார்?
புனித இராயப்பரை ஸ்தாபித்தார்.
84. புனித இராயப்பருக்கு என்ன விசேஷ வரம் கொடுத்தார்?
அவர் வேதசத்தியங்களைப் போதிக்கையில் வழுவாமை என்னும் வரத்தையும், மற்ற அப்போஸ்தலர்கள் மேல் தலைவர் என்னும் பட்டத்தையும் கொடுத்தார்.
85. புனித இராயப்பருக்குப் பதிலாகத் திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறவர் யார்?
பரிசுத்த பாப்பாண்டவர்.
86. பரிசுத்த பாப்பாண்டவர் யார்?
புனித இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற ரோமாபுரி ஆயரே பரிசுத்த பாப்பாண்டவர்.
87.மற்ற அப்போஸ்தலர்களுக்குப் பதிலாயிருக்கிறவர்கள் யார்?
மேற்றிராணிமார்கள்.
88. யேசுநாதர் எத்தனை திருச்சபையை ஸ்தாபித்தார்?
கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஸ்தாபித்தார்.