வணக்கத்துக்குரிய ஒரு குரு சொல்வதாவது: ''பாப்பரசர் 13-ம் சிங்கராயரின் பூசை ஒன்றில் பங்குபெற நான் ஒருமுறை அனுமதிக்கப்பட்டேன். பூசையைப் பற்றி நான் என் வாழ்வில் வாசித்த எந்த ஒரு புத்தகமும், நான் கேட்ட எந்த ஒரு பிரசங்கமும் அப்படிப்பட்ட ஒரு பாதிப்பை என் மனதில் அதற்கு முன் ஏற்படுத்தியதேயில்லை .
அந்த மகிழ்ச்சியான நாளுக்குப் பின் பதினைந்து வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்று வரை பரிசுத்த பிதாவின் அந்தப் பூசையை என்னால் மறக்கவே முடியவில்லை. அவரிடம் வெளிப்பட்ட பக்தியைக் கண்டு பாவிக்க நான் எவ்வளவோ முயன்றும், என் பூசைகளில் அத்தகைய பக்தியை என்னால் வெளிப்படுத்தமுடியவில்லை.
அப்போது பாப்பரசருக்கு எண்பத்தைந்து வயதாகி யிருந்தது. அவர் மிகவும் பலவீனமாக இருப்பது போல எனக்குத் தோன்றியது. மிகவும் குனிந்தபடிதான் அவர் சிற்றாலயத்திற்குள் பிரவேசித்தார். ஆனாலும் பலிபீடத்தை நோக்கிச் செல்கையில், அவர் ஒரு புதிய உயிராலும், ஒரு புதிய ஆற்றலாலும் நிரப்பப்பட்டார்.
தேவ பக்தியால் கிரகிக்கப்பட்ட நிலையில் அவர் திவ்விய பலிபூசையைத் தொடங்கினார். அவருடைய அடக்கவொடுக்கமும், அசைவுகளும், வார்த்தைகளை மெதுவாகவும், தெள்ளத் தெளிவாகவும் அவர் உச்சரித்த விதமும், கடவுளின் பிரசன்னத்தில் தாம் இருப்பதை அவர் உணர்ந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டின. தேவ வசீகர நேரத்தில், அவரது முகம் ஓர் அழகிய ஒளியால் ஒளிர்ந்தது, அவரது அற்புதமான கண்கள் சுடர் வீசின, அவரது பாவனை முழுவதுமே, சர்வ வல்லப சர்வேசுரனோடு உரையாடிக் கொண்டிருக்கிற ஒருவருடைய பாவனையாக இருந்தன.
மகா உத்தமமான வணக்கத்துடன் அவர் தம் கரங் களில் அப்பத்தை எடுத்து, தேவ வசீகர வார்த்தைகளை உச்சரித்தார். எப்பேர்ப்பட்ட அதிசயத்தைத் தாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் முழுவதுமாக உணர்ந் திருந்தார் என்பது அவருடைய தோற்றத்தில் தெளிவாக வெளிப்பட்டது.
அதன்பின் மோட்சத்தில் சர்வேசுரனுடைய சிம்மா சனத்திற்கு முன்பாக இருப்பவரைப் போல அவர் முழந்தா விட்டார். பின் எழுந்து தேவ அப்பத்தை உயர்த்தி, பரவசப் பட்டவராக அதை உற்றுநோக்கினார். அதன்பின் மெது வாக அதை இறக்கி, திருமேனித் துகிலில் அதை வைத்தார்.
மகா பரிசுத்த இரத்தத்தின் வசீகரத்தின் போதும், இதே மேலான உணர்வுகளையும், உயிருள்ள விசுவாசத் தையும் அவர் வெளிப்படுத்தினார்.
அந்நேரம் தொடங்கி, திவ்விய நன்மை அருந்துவது வரையில் ஒவ்வொரு கணமும் அவரது பக்தியார்வத்தை எங்களால் வெளிப்படையாகக் காண முடிந்தது.
ஆஞ்ஞஸ் தேயியின் போது அவர் கடவுளோடு நேருக்கு நேராகப் பேசுபவரைப் போலத் தோன்றினார்.
எத்தகைய நேசத்தோடு அவர் திவ்விய அப்பத்தை உட்கொண்டு, சேசுநாதருடைய திரு இரத்தத்தைப் பருகினார் என்பதை விளக்கிக் கூற எனக்குத் துணிவில்லை.
இவ்வளவிற்கும் பூசை மிக நீண்டதாக இருக்க வில்லை. இந்த முழு திருச்சடங்கும் எளிமையானதாக இருந்தது. ஆனாலும், நான் சொன்னது போல, இந்த ஐம்பது நீண்ட வருடங்களாக அது எப்போதும் என் கண்களுக்கு முன்பாக இருந்து வரும் அளவுக்கு அது என் மனதை வெகுவாகப் பாதிப்பதாக இருந்தது.''