குணபான்மையை அடைதல்

21. குணபான்மையை அடைவதற்குச் செய்ய வேண்டியது யாது? 

முதல் முதலாக அதை அடைய உண்மையான விருப்பம் இருக்க வேண்டும். இரண்டாவது நமது புத்தியையும் மனதையும் விசேஷ வகைகளில் பயிற்சிப்பது அவசியம்.

22. புத்தியை பயிற்சிப்பது எப்படி ?

(1) நல்லொழுக்கத்துக்கேற்ற கொள்கைகளைக் கற் றறிந்து அவற்றை மதித்து அடிக்கடி உபயோகிப்பதால்,

(2) சகலவிதமான துர் நினைவுகளையும், தீய கொள்கை களையும் அகற்றி, அவற்றை அருவருக்கவும், நீக்கவும் பழகுவதால்

(3) கடவுளைப்பற்றியும், அவர் மட்டில் நமக்குள்ள கடமைகளைப்பற்றியும் அடிக்கடி சிந்தித்து உண்மையாகவே நல்ல மனிதன் ஆவது எவ்வளவு அவசியமானது என்று உணர்வதால் - புத்தியைப் பயிற்சிக்கலாம்.

23. மனதைப் பயிற்சிப்பது எவ்விதம்?

நமது தினசரி காரியங்களில் ஊக்கமும் திடனும் காட்டி, ஏற்றதை எப்போதும் செய்து, செய்வதையும் கூடிய வரை செவ்வனே செய்து இன்பதுன்பம், விருப்பு வெறுப்பு இவற்றால் இடையூறு நேரிடாதபடி நம்மைத்தானே ஒறுத்து அடக்கி வருவதால் மனதைப் பயிற்சிக்கக்கூடும்.

இவ்விதமான தினசரி கிரிகைகளில் ஊக்கமும், திடனும். ஒழுங்கும் ஏற்பட்டால், நமது மிகமுக்கிய அலுவ லாகிய ஆன்ம விஷயம், வேத விஷயம். அறநெறி ஒழுக் கம் ஆகியவற்றில் இதே ஊக்கமும், திடனும் ஏற்படும் என்பது திண்ணம்

இந்த நடைமுறை வெற்றியடைய வேண்டுமாயின் அச்சத்தோடு, ஆர்வத்தோடு, உழைக்கவேண்டும். "கரணம் தப்பினால் மரணம்'' - என்னும் ஆன்றோர் வாக்கை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். செய்யும் காரியங்களைத் திருத்தமாகச் செய்ய வேண்டும். செய்வன திருத்தச்செய்'' என்பதையும் மறக்கக்கூடாது.


a ) சோதனைகள் வரும்போது நமது மனதை உபயோகிப்பது எவ்விதம்?

சோதனையை எதிர்த்து நின்று, 'நான் சம்மதியேன்" என்று உறுதியாகக் கூறலாம் ஆனால் அகே சமயங்களில் இது எளிதல்ல. சில சமயங்களில் சோதனைக் உட்பட்டு சம்மதிப்போம் என்று பயப்படவும் காரண முண்டு அந்த சமயங்களில் நமது சிந்தனையை (எண்ணம்) மாற்றுவது அதாவது, சோதனையின் நினைவை அகற்றி புலனகளும், கற்பனா சக்தியும் அதில் கவனம் கொள்ளாதபடி விலக்கி சோதனையை மறந்து போகும் வண்ணம் வேறு ஏதாவது காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

சில சாதாரண விஷயங்களில் சோதனையை எதிர்த்து நின்று, மன உறுதியால் அதை வெற்றிகொள்ள முயற்சித் தால் நமது குணபான்மைக்கு அதிக வலிமை உண்டாக லாம். ஆனால், சோதனை மிகவும் கடுமையாய் நம்மைத்தாக்கி, தோற்கடிக்கக் கூடுமாயிருந்தால் எதிர்த்து நிற்பதால் நமக்கு அபாயம் நேரிடும். ஆகையால் சோதனையை விட்டு ஓடிவிலகுவதே உத்தமம்.

b) இப்படி ஓடி விலக்கவேண்டிய சோதனைகள் எவை? 

இத்தகைய சோதனைகளில் முக்கியமானது ஆபாசமான சிற்றின்பச் சோதனை இது எப்போதும் ஆபத்துக்குரியது. இது நீடிக்கும் ஒவ்வொரு வினாடியும் ஆபத்து அதிகரிக்கிறது. ஒவ்வொருவனும் தனது அனுபவத்தால் அறிந்து கொள்ள வேண்டியது. சிலர் போசனப்பிரியம், குடிவெறியால் ஆபத்துக்குட்படலாம். சிலருக்குப் பந்தய ஆட்டம், சூதாடல் ஆபத்தாயிருக்கலாம். திருடத் தேடுவது சிலருக்கு மிகுந்த ஆபத்தைத்தருவதாக இருக்கலாம்.

விசுவாசத்திற்கும், பரிசுத்த கற்புக்கும் விரோதமான சோதனைகளுக்கு ஓடி ஒளிவதே உபாயம். இவ்விதம் ஓடி ஒளிவது கோமைத்தனம் அல்ல. ஏனெனில், சண்டையால் தோல்வி அடைவாய் என்று உறுதியாகத் தெரிந்திருந்தால் அதைவிட்டு விலகுவது கோழைத்தனமா?

"வீரத்தில் சிறந்தது விமரிசை"


நமது பலவீனத்தை அறிந்து எச்சரிக்கையாக இருப் பது கோழையின் குணமல்ல. அது விவேகம் ஆகும்.