• நாம் விரும்புகிறவற்றை அல்ல. மாறாகக் கடவுள் விரும்புகிறவற்றையே அவருக்குச் செய்வோம்.
• மாதா நம்மை விட அருள் கொஞ்சம் மிகுதியாகப் பெற்றவர்கள் அல்ல! மாறாக அவர்கள் அருள் நிறைந்தவர்கள். அவர்கள் மட்டுமே அருள் நிறைந்தவர்கள்.
• பாவசங்கீர்த்தனத்தை அலட்சியம் செய்பவன் கண்களைத் திறந்து கொண்டு நரகத்தில் குதிக் கிறான்.
• மாதாவைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறாயா? ஜெபமாலை ஜெபிப்பதை விடச் சிறந்த வழி இல்லை .
• ஒவ்வொரு நாளும் நற்கருணை முன்பு 153 மணி ஜெபமாலை ஜெபிக்க விரும்புகிறேன் - பாப்பரசர் 23 ஆம் அருளப்பர்.
• அக்டோபர் மாதத்தில் திவ்விய நற்கருணை ஸ்தாபிக்கப்பட்டு ஜெபமாலை சொல்லப்பட வேண்டும் - பாப்பரசர் 13ஆம் சிங்கராயர்.
• ஒவ்வொரு அருள்நிறை மந்திரத்துக்கும் 2000 நாள் பலன் உண்டு. அப்படியானால் ஒரு முழு ஜெபமாலைக் கான பலன் எவ்வளவு பெரியது!
• விண்ணகத்தில் இருப்பதை விடச் சிறந்த நேரம் ஒருவன் நற்கருணை உட்கொண்ட பிறகு உள்ள நேரமே. ஒருபோதும் அந்த நேரத்தை வீணடித்து விடாதீர்கள். கடவுளோடு பேசுவதை விட்டுவிட்டு வேறு காரியங் களில் ஈடுபடாதீர்கள். அந்த நேரத்தில் மனிதர்களைப் பாராட்டாதீர்கள்.
• வுல்காத்தா வேதாகமம் அதிகாரப்பூர்வமானது; தப்பறைகள் இல்லாதது, போதிக்கவும், திருவழிபாட் டுக்கும் ஏற்றது (திரிதெந்தின் சங்கம், பாப்பரசர்கள் 15ம் ஆசீர்வாதப்பர், 13ம் சிங்கராயர், 12ம் பத்திநாதர்.)
• தேவாலயம் இறைவனின் வீடு; அதைப் பொது நிகழ்ச்சிகளுக்கான மண்டபம் போல் ஆக்காதிருப்போம்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
சிந்தனைக்குச் சில
Posted by
Christopher