நம்மை மீட்க கொடுக்கப்பட்ட விலை ஆண்டவர் இயேசுவின் இரத்தம். பெரிய வெள்ளி அன்று நடைபெற்ற இப்பலி பெரிய வியாழனன்று இப்போது நாம் செய்யும் முறையில் நடைபெற்றது. இரண்டும் ஒன்றே!
உலகம் ஒவ்வொரு நாளும் அளவிட முடியாத பாவங்களைச் செய்யும் என்று அறிந்த இயேசு தமது தந்தையைச் சாந்தப்படுத்தி, உலகைக் காப்பாற்ற ஒவ்வொரு நாளும் இந்தப் பலி நடைபெறும்படி ஏற்பாடு செய்து அதைத் தன் சொந்தத் திருச்சபை கத்தோலிக்கத் திருச்சபையின் சொத்தாக் கினார்.
எனவே நாம் பூசைக்குச் செல்லும்போது பாவப்பரிகாரப் பலி, பிதாவைச் சாந்தப்படுத்தும் பலி என்ற உணர்வோடு செல்லவேண்டும். வரையற்ற மகிழ்ச்சி, ஆடம்பரம், பக்தி உணர்வற்ற இசை, கருத்தரங்கு போல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் கத்தோலிக்கர் வழியாக உலகு அனைத்திற்கும் அருள் பெற்றுத் தர வேண்டிய பலி அது. புனித வெள்ளி அன்று முதல் பலி நடைபெற் றாலும், அதில் நூற்றுக்கணக்கானோர் இருந்தாலும், மாதா உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பலன் பெறவில்லை; சாபத்தையே பெற்றுக் கொண் டார்கள்.
நாமும் பூசைக்குப் போய் அருளைப் பெற வேண்டும்; சாபத்தை அல்ல! திருப்பலி இல்லை என்றால் உலகம் என்றோ அழிந்திருக்கும்! மேலும் கடவுளோடு ஒரு மனிதன் மிக நெருங்கி இருக்கும் நேரம் நற்கருணை உட்கொண்ட பிறகு உள்ள நேரமே!
மாதாவுக்குப் பத்து மாதம் ஏசுவைச் சுமக்கக் கிடைத்த பேறு நமக்குச் சில நிமிடங்களாவது கிடைக்கும் நேரம்! மோட்சத்திலும் இந்தப் பாக்கியம் நமக்குக் கிடைக்காது. மனித வாழ்க்கையில் இதை விடச் சிறந்த நேரம் இல்லை .
அந்த நேரத்தை அறிக்கை, செய்திகள், பாராட்டு விழாக்கள் இவற்றில் வீணாக்கி விடாமல் இயேசுவோடு பேசுவோம், கொஞ்சுவோம்; அவருக்கு ஆறுதல் அளிப்போம்; நன்றி கூறுவோம் - குறைந்தது பத்து நிமிடங்களாவது இதைச் செய்வோம்!
இதைச் செய்யத் தவறினால் மோட்சத்தில் தம் மகிமையில் அவர் நம்மைச் சந்திக்க மாட்டார். நன்மை வாங்கிய பிறகு மனிதர்களைக் கோயிலுக்குள் பாராட்டும் வழக்கத்தை விட்டு விடுவோம்.
ஞாயிறு திருப்பலி கடவுளுக்கு நம் நன்றிக் கடன். அன்றைக்குத் தாமதம் செய்வது மற்றும் பூசைக்கு இடையில் வருவது நன்றி கெட்ட செயல்.
கேவலமான, கவர்ச்சிகரமான உடை அணியாது எச்சரிக்கையாயிருப்போம்.
வாழும்போது நாம் பங்கெடுக்கும் ஒரு பூசை இறந்தபின் நமக்காக ஒப்புக் கொடுக்கப்படும் பல பூசைகளை விடப் பயன் மிக்கது.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
திருப்பலி
Posted by
Christopher