51. சொல்லிக்காட்டின தன்மையோடு திருச்சபை யில் வழங்கின உத்தம முறைமை வழுவாமல் வணங்கப் பட்ட சுரூபங்களால் நமக்கு வரும் நன்மைகளை நாம் இங்கே ஒழுங்குடன் கூட்டி, விரிவாய் உரைப்பது நமக்குக் கருத்தல்ல, இயலுங் கருமமும் அல்ல. சேசுநாதர், தேவ மாதா, மற்ற மோக்ஷவாசிகள் இவர்களைக் காட்டின சுரூ பங்களைப் பத்தியோடு பார்த்தோமானால் அதுகளே இருண்ட இடத்தில் எரிந்த பல பெருந் தீபங்களைப் போலப், பாவ இருள் சூழ்ந்து பூவுலகில் ஒளியாய் விளங்கி னதாகவும், அதுகளே தளர்ந்த வயதில் ஊன்று கோல் போலப், பலம் இல்லாத நமக்கு உறுதியாய் அறத்திலே தளர்ந்த நடையைத் தாங்கினதாகவும், அதுகளே கண் மறைந்தவருக்குக் கை தருங் கண் காட்டி போல, நல்ல றிவு இல்லாத நம்மை உணர்த்தின தாகவும், அதுகளே நீந் துபவருக்கு வருந் தவிப்பு ஆற்றும் தெப்பம்போல நடு வழியில் நாம் தவித்து நிற்காதபடிக்கு உதவியாய்த் தேற் றின தாகவும், அதுகளே நீர்ப்பெருக்கு ஆற்றின் துறை யைக் காட்டின அடையாளக் கோல்போல வான்கதி சேருஞ் செவ்வழி மாறாமல் காட்டினதாகவும், திருச்சபை யில் வழங்கின சுரூபங்கள் மனிதர் எளிதாய் மோக்ஷக்கரை ஏறுதற்கு உதவிய எத்தனங்களும், வழித்துணைகளும் ஆகு மென்று அவனவன் தன்னிடத்திலேயுங் கண்டுகொள் வான் அல்லோ.
எத்தனை முறை அவனவன் வணங்குஞ் சுரூபங்களைக் கண்டமாத்திரத்தில் தான் பாவியாயிருந்தாலும் பத்தி, நம் பிக்கை, விசுவாசம், பொறுமை, தாழ்ச்சி, தயை, கொடை, ஊக்கம், துணிவு, மனஸ்தாபம், மற்றும் உண்டாகிய சுகிர்த புண்ணியங்களை விளைவிக்கும் நினைவும் மனதிற் கிளம்பக் கண்டு, நினைத்த பாவங்களை விட்டுவிட்டு நன்னெறியில் உறுதியானான். இதுவுமன்றிச் சுரூப வணக்கத்தினால் ஆண்டவர் செய்த புதுமைகளை எழுதவேண்டுமாகில், எவ் வளவினாலும் அடங்காமல், எக்கலை வல்லவராலும் முடிக் கக் கூடாமல், எவருக்கும் எட்டாத கருமமாமே.
குருடருக்குக் கண்ணும், ஊமைகட்குப் பேச்சும், முடவருக்குக் காலுங் கையும், நோவாளிகட்கு ஆரோக்கிய மும், செத்தவருக்கு உயிருந் தந்து, பிடித்த பசாசுகளை ஓட்டி, வந்த குறைகளை நீக்கி, கேட்ட மன்றாட்டுகளை அருளி, வணங்கப்பட்ட சுரூபங்களைக் குறித்து உலகெங் கும் ஆண்டவர் ஓயாமல் செய்து கொண்டுவருகிற புதுமை களை நீங்களே அறிவீர்களொழிய நாமே விபரித்துச் சொல்லத்தக்கதல்ல. மாற்றப்படாத தம் முத்திரையாகிய புதுமைகளால் ஆண்டவர் சுரூப வணக்கந் தாமே கட்டளை யிட்ட முறையென்று ஒப்பித்த பின்பு, இன்னும் இதிலே சந்தேகப்பட ஞாயம் உண்டோ ? ஆகிலும் பதிதருக்கு வாயை முழுதும் அடைக்க வேண்டுமென்று சுரூபவணக் கப் பழமையை இங்கே ஒப்பிக்கக்கடவோம்.
கர்த்தர் பிறந்த 300 வருஷமட்டும் இருந்த இராயர் சத்திய வேதத்தைப் பகைத்த கொடுமையால் கலகக் கால மாகி, அதன் பின்பு ஆண்ட தைரிய இராயர் கொண்ட குஷ்ட வியாதி தீரப் பற்பல குழந்தைகளைக் கொன்று, அவர்கள் குருதியில் குளிக்க வேண்டுமென்றிருக்கையில், அர்ச். இராயப்பருஞ் சின்னப்பரும் இராயருக்குத் தோன்றி, ஒளிந்திருந்த அர்ச். சிலுவேஸ்திரி பாப்பென்பவரை அழைப்பித்து, அவர் கையால் ஞான தீட்சை பெற்றால் வியாகியும், பாவமுந் தீரும் என்றதனால், அவரை அழைப் பித்துக் கண்ட காட்சியைச் சொன்ன அளவில், அர்ச். பாப்பு தம்மிடத்திலிருந்த அர்ச். இராயப்பர் சின்னப்பர் சுரூபங்களைக் காட்டினமாத்திரத்தில் இவர்களே வந்து தோன்றினார்களென்று இராயர் மகிழ்ந்து சொல்லி, அது களை வணங்கிப் பெற்ற ஞான தீட்சையால் ஆரோக்கியம் அடைந்து, தாமே உரோமாபுரியிலே சேசுநாதர் சிலு வைக்கு ஒரு கோயிலையும், அர்ச். ஸ்நாபக அருளப்பருக் கும், அர்ச். இராயப்பருக்கும், சின்னப்பருக்கும் வேறே மூன்று கோயில்களையுங் கட்டுவித்து, அவர்களுடைய சுரூ பங்களை அங்கே பிரதிஷ்டை செய்து வைத்தாரென்று பூர்வ காலததிருந்தவர்கள் எழுதிவைத்தபடி இந்நாளிலே யும் அங்கே கண்டிருக்கிறோம்.
ஆகையால் பதிதர் தாமே சொன்னபடி முதல் 500 வருஷந் திருச்சபை வழுவாமல் நடந்த காலத்துஞ் சுரூபங் களை வைக்கவும், வணங்கவும் வழங்கின முறையாமே. மீள வும் அர்ச். ஸ்நாபக அருளப்பருக்குத் தைரிய இராயர் கட்டுவித்த கோயிலை , அர்சு . பாப்பு மந்திரிக்கும் போது சகலருங் காண அக்கோயில் சுவரின் மேலே சேசுநாதர் சுரூபம் புதுமையாகத் தோன்றி, இந்நாள் மட்டும் அங்கே காணவும், வணங்கவும்படுகிறது. சுரூப வணக்கம் அக்கி யானமாகில் ஆண்டவர் தாமே அக்கியானம் வளரும்படிக் குப் புதுமையாகச் சுரூபங்களைத் தோன்றும்படி செய்வானேன்?
52. ஆகிலும் அக்காலத்தில் மாத்திரஞ் சுரூபவணக்கம் வழங்கினது அல்ல. அப்போஸ்தலர்மார் நாளிலே துவக்கின தாக்கும். இந்த இராச்சியத்தில் முந்திச் சத்திய வேதத்தைப் போதிக்க வந்த அர்ச். தோமையார் கல்லிலே கொத்து வேலையாகக் கிளம்பச் செய்த சிலுவையை வணங் கிக் கொண்டிருந்தாரென்றும், அச்சிலுவைதானே இன் னுங் காஞ்சிபுரத்திற்குக் கிழக்கிலிருக்கும் பெரிய மலையின் உச்சிமேல் பெரும் விளக்காகத் தோன்றிக் காணப்படுகிற தல்லோ ? அச்சிலுவைதானே எத்தனை முறை எல்லாரும் அறியப் புதுமையாய்த் தண்ணீர் வேர்வையாகவும், இரத்த வேர்வையாகவும் வேர்த்ததும் அறிவோம். மீளவும் நான்கு சுவிசேஷங்களில் ஒன்றை எழுதின அர்ச். லூக்காஸென் பவர் தம் கையால் தேவமாதா சுரூபங்களைப் படமாக எழு தினதும், உருவமாகச் செய்ததும் நாமே கண்டிருக்கிறதல்லாதே புதுமைகள் மிகுதியால் எங்குஞ் சந்தேகமின்றி வழங்கின செய்தி அல்லோ,
மீளவும் அர்ச். பெரிய யாகப்பர், இஸ்பாஸிய இராச்சியத்தில் உபதேசஞ் சொல்லிக்கொண்டு சரகோசாவென் னும் மாநகரிடத்து வருகையில் உயிரோடிருந்த தேவமாதா எருசலேம் பட்டணத்தினின்று சம்மனசுகள் கையால் ஏந் தப்பட்டு, நெடுநாட் பிரயாணத்தை பத்து நாழிகையில் முடித்து, இராத் தியானத்திலிருந்த அர்ச். யாகப்பருக்குச் சூரியன் ஒளியினுங் கதிர் பரப்பித் தோன்றி, இங்கே எனக்கு ஒரு கோயிலை நீ கட்டுவிக்க ஆண்டவருக்குச் சித் தமாயிற்றென்று சொன்ன பின்பு, உலகில் வழங்காத மணி யால் சம்மனசுகள் செய்து அலங்கரித்த ஒரு சின்ன தூணும், அதன் மேல் தன் சுரூபத்தையுஞ் சம்மனசுக ளால் ஸ்தாபிக்கச் செய்து தந்தாளென்று பூர்வீக சாஸ்திரி கள் எழுகினார்கள். அப்படியே, அர்ச். யாகப்பர் அங்கே கட்டின கோயிலும், தேவமாதா தந்த தம் சுரூபமும் இந் நாள்வரைக்கும் வணங்கப்பட்டு, மட்டில்லாத புதுமை களால் விளங்கிவருகிறது. பதிதர் இதெல்லாம் பொய் யென்பார்களோ? நிந்தைக்கு அஞ்சாமல் பொய்யென்றா லும் பூர்வ காலத்திலிருந்த சாஸ்திரிகள் எழுதின செய்தி யாகையால் இதெல்லாம் பொய்யாகிய காலத்தில் உலகில் மெய் ஒன்றுமில்லை.
53. ஆகிலுஞ் சேசுநாதர் பிறக்குமுன்னே முதலாய் தேவமாதா சுரூபம் ஆண்டவருக்குப் பிரியமாக வணங்கப்பட்டதென்று ஒப்பித்தால் பதிதர் என்ன சொல்லுவார்கள். ஆனால் அக்காலத்தில் எழுதினவர்கள் சொன்னதைப் பார்க்கில், எகித்தார் பல இடத்தில் தேவமாதாவை திவ்விய குழந்தையோடு ஸ்தாபித்து வணங்கினதை விட்டுக் காலிய இராச்சியத்தில் சேசுநாதர் பிறக்கு முன்னே நூறு வருஷமாகச் சியராத்திர சென்னும் பட்ட ணத்தில் கோயிலைக் கட்டிக் கன்னி கெடாமற் பெறுவாளென்றும் பெயர் இட்டு ஒரு வடிவுள்ள உருவத்தை அதில் வைத்து வணங்கினார்கள்.
அவர்கள் அக்கியானிகளாயினுந் தேவமாதா சுரூபத் திற்குச் செய்த வணக்கம் ஆண்டவர் தமக்குப் பிரியமென்று காட்ட, அச்சுரூபததைக் குறித்து மன்றாடின துரையாகிய மெலங்கரியாக்கனுடைய செத்த மகனை எழுப்பித் தந்தார். இதையும் பல புதுமைகளையும் அறிந்து, அவர் கள் இராசாவாகிய பிறிஸ்குவென்பவன் தன் முடியையும், செங்கோலையும் அச்சுரூபத்தின் பாதத்தில் வைத்துத் தேவ மாதாவை அந்நாட்டிற்கு அரசியாகக் கொண்டான். இத் தன்மையில் ஆண்டவருக்குத் தோத்திரமாகவும், மனிதர் ஈடேற்றத்திற்கு உதவியாகவும் எக்காலத்திலும் வழங்கின சுரூப வணக்கத்தால் நமக்கு வரும் நன்மை விலக்கமாட் டாத பசாசு சுரூபவணக்கம் விலக்கப் பிரயாசப்பட்ட தென்று அறியக்கடவீர்கள்.
54. ஆகிலும் இந்நாட் பதிதர் இந்த அக்கிரமம் முடிக்கப் பசாகனால் தெரிந்து கொண்ட முதல் எத்தனங்க ளென்று தாம் தம்மைப் புகழத் தேவையில்லை. சொன்ன முறையில் சுரூப வணக்கம் எப்பொழுதுந் திருச்சபையில் வழங்கினதினால் அதன்மேல் பசாசு வைத்த பகையும் , லுத் தேர் காலத்தில் எண்ணூறு வருஷத்திற்கு முன்னே துவக்கின தாம்.
அதெப்படியென்றால் கர்த்தர் பிறந்த 300 வருஷத் திற்குப் பின்பு தைரிய இராயர் இந்தச் சத்திய வேதத்தில் உட்பட்டதினால் கிறீஸ்துவர்கள் மறைவின்றித திரிந்து, பசாசுக்கு வைத்திருந்த பொய்யான தேவர்கள் விக்கிரகங் களைத் தகர்த்து எறிந்ததினால் பசாசின் பகை அளவின்றி வளர்ந்து கிறிஸ்துவர்கள் வணங்கின சுரூபங்களைத் தானுந் தகர்த்துப் பழியை வாங்க எடுத்த உபாயம் ஏதெனில், கிறீஸ்துவர்கள் எங்கும் பெருங் கோயில்களைக் கட்டிப், பல சுரூபங்களுக்குள்ளே பாடுபட்ட கர்த்தர் சுரூபத்தை விசேஷமாய் எங்கும் ஸ்தாபித்து வணங்கிக்கொண்டு வருகையில் எவ்விடத்துஞ் சிதறி நின்ற யூதர்கள் தாமும் சிலு வையில் அறைந்தவரைப் பரம நாதராக வணங்கக் கண்ட தினால், மனதில், பகை கொண்ட தொழிய அச்சுரூபத்தைக் கண்ட யாவரும் யூதர்கள் செய்த அக்கிரமம் இதுவோ வென்று நிந்தித்ததினால் அவர்கள் மிகவும் வெட்கி நொந் கிருக்கையில், பசாசினால் ஏவப்பட்டு முன் எடுத்த மனுஷ சுபாவத்திலே சேசுநாதரைப் பகைத்துக் கொன்ற யூதர்கள் அவரைச் சுரூபத்திலேயும் நிந்தையாகப் பகைத்துச், சுரூ பங்களை வைத்து வணங்குவது அக்கியானமென்று சொல் லத்துவக்கினார்கள்.
நெடுநாள் அவர்கள் பகையால் பிதற்றின வார்த் தையை ஒருவரும் எண்ணாமல் மறுத்துக்கொண்டு வந்த பின்பு, கர்த்தர் பிறந்த 719-ம் ஆண்டிலே கொன்ஸ்தாண் டினொப்பொலியின் இராயனாய் ஆளாநின்று கிறீஸ்துவனாயி னும் நீதி முறையில் வழுவிக் கொடுங்கோலனாகிப் பாவம் விளைவிப்பதற்குரியவனுமாயிருந்த மூன்றாம் இலேயோன் என்பவனிடம் யூதர்கள் போய் அவனுக்குச் சொன்ன அபத்தங்களினாலும், கந்த திரவியங்களினாலும் அவனை உடன்படச் செய்து மயக்குவித்தார்கள்.
55. அப்படியே அவன் சுரூபங்களை வணங்க வேண்டாமென்று விலக்கி, வணங்கினவரைக் கொடிதாய் வருத்திக் கொல்லத் துவக்கினான். துவக்கின அக்கிரமத்தை முடித்துக்கொண்டு வருகையில், மோக்ஷவாசிகளையும், சேசுநாதரையுஞ் சுரூபங்களில் வணங்க வேண்டாமென்று பகைத்த இராயன் மிகவும் அஞ்சி, நொந்து, மெலியும்படிக் குத் தான் ஆண்டிருந்த கொன்ஸ்தாண்டினொப்பொலி என் னும் நகரெல்லாம் வெகுவாய் நடுநடுங்கி அதிலே மூன்று பங்கு தகர்ந்து விழுந்து பொடியாகக் கண்டான். கண்ட ஆக்கினையினாலும், தான் மனநொந்து வருந்தின தொழிய உயிர் பிழைக்கும்படி திரும்பாமலும் ஆக்கினைக்கு அஞ் சின தொழியப் பாவத்திற்கு அஞ்சாமலும், அச்சத்தால் வெருண்டு, மயங்கி மதிகெட்டவனைப்போல் சில மாதங்கள் திரிந்த பின்னர் அவலமாய்ச் செத்தான்.
அவன் பிறகு தொடர்ந்த முறையோடு வந்த ஐந்து இராயரும் அவனைப் பின் சென்று, சுரூபவணக்கத்தை முழுதும் ஒழிக்க மிகவும் பிரயாசப்பட்டு, அந்த வணக் கத்தை விடாத எல்லோரையும் நிஷ்டூரமாய் உபாதித்து, மட்டில்லாத பேர்களைக் கொன்றாலுந் திருச்சபை அசை யாத பாறையாக நின்று, சுரூபங்களை வணங்கின முறைமை ஆண்டவரால் வந்ததென்று எல்லோரும் அறிய அவரவர் மகிழந்து சிந்தின குருதியால் எழுதிப் பொருந்தி, வலியப் பிராணனைத் தந்து சாட்சி சொன்னார்களொழி:ப, 120 வரு ஷங்களாக ஆறு இராயர் வல்லமையைக்கொண்டு முதிர்ந்த பகையால் சுரூப வணக்கம் மறைந்ததில்லை.
அதற்குள்ளாக 787- ம் ஆண்டில் நிசெ நகரில் 350 மேற்றிராணிமார்கள் பல சாஸ்திரிகளோடு கூடி நெடுநாள் யோசித்து ஒருங்குடன் அனைவரும் ஒரு மொழியாய்க் கட்டளை இட்டதாவது: இராச பாதையில் நடந்து முன் இருந்த வேதபாரகர் எல்லோரும் எழுதி வைத்த சாஸ்திரத் திற்கு இணங்க, இஸ்பீரித்து சாந்து விளக்குந் திருச்சபை யில் எப்போதுந் தவமுமல் வழங்கின முறையைக் காத்துக் கொண்டு, கருக்தோடேயும், பூச்சியத்தோடேயுந் திருச் சுரூபங்களை உரிய முறையோடு வணங்கக் கட்டளை இட் டோம். மீளவும் அதுகளைக் கண்டவர்கள் அதுகளால் காட்டப்பட்டவரை நினைக்கவும், அவர்களை உரிய முறை யோடு வணங்கவும், அச்சு ரூபங்களைக் கோயில்களிலே பிர திஷ்டை செய்யவுங் கட்டளையிட்டோம். அதேனெனில் சுரூபங்களுக்குச் செய்யும் வணக்கம் அதுகளில் நில்லாமல் அதுகளால் காட்டப்பட்ட மகாத்துமாக்களைச் சேரும் என்றார்கள்.
என்றவுடனே கூடியிருந்த அனைவரும் ஒரு மொழி யாய் முழங்கிச் சொன்ன தாவது : இப்படியே எல்லோரும் விசுவசிக்கிறோம், இதையே எல்லோரும் அநுசரிக்கிறோம், இதையே எல்லோரும் ஒப்பமிட்டுப் பொருந்தி ஒத்துக் கொள்ளுகிறோம். இதுவே அப்போஸ்தலர்மார் விசுவாசம், இதுவே முன்னிருந்த வேதபாரகர் விசுவாசம், இதுவே மெய்யான திருச்சபை விசுவாசம், இதுவே உலகமெல்லாங் காத்த விசுவாசம். ஆகையால் மூன்று ஆளாகிய ஒரே சர்வேசுரனை அதியோக்கிய பத்தியாக விசுவசித்துச் சுரூப வணக்கம் நல்ல தென்று ஒத்துக்கொள்ளுகிறோம். இதனை ஒத்துக்கொள்ளாதவர்கள் சபிக்கப்பட்டுத், திருச் சபைக்குப் புறம்பானவர்களாகக்கடவார்கள். ஆகையால் வேதாகமங்களில் அக்கியானிகள் விக்கிரகங்களை விலக்கி எழுதப்பட்டதைத் திருச்சபை வணங்குஞ் சுரூபங்களை விலக்கச் சொன்னவர்களுக்குச் சாபம். திருச்சபைச் சுரூ பங்களை அக்கியானிகளுடைய விக்கிரகங்கள் என்றவர் களுக்குச் சாபம். தேவராக மோக்ஷவாசிகள் சுரூபங்களைக் கிறீஸ்துவர்கள் வணங்குகிறார்கள் என்றவர்களுக்குச் சாபம். திருச்சபைச் சுரூபங்களை வணங்கா தவர்களுக்குச் சாபம் என்றார்கள்.
56. அப்டியே வேற்றுமை ஒன்றுமின்றி 869-ம் ஆண்டில் மீளவுங் கொன்ஸ்தாண்டினொப்பொலியிற் கூடின 333 மேற்றிராணிமார்களும் ஏகோபித்துக் கட்டளை இட்டார்கள். ஆகையால் நீதிமுறை ஒன்றும் பாராமல், ஆராய்ந்த நியாயம் ஒன்றுங் கேளாமல் , உருவின வாளைக் கொண்டு அதுசரியா தவர்களைக் கொடி தாய் வருத்திக் கொன்று, பொதுவற ஆளா நின்ற ஆறு இராயர் வல்லமை யால் ஊன்றிப் பரம்பின சுரூபப் பகை 120 வருஷத்திற் குள்ளாக நீர்மேற் குமிழிபோலவும், ஒளிமுன் இரவிருள் போலவும், மெய்யின் முன் பொய்மொழி போலவும் மெலிந்தொழிந்து, முழுதும் மறைந்து, சுரூபங்களை வணங் கலாகாதென்பவர் ஒருவராயினும் இல்லாதிருந்தனர்.
சுரூப வணக்கமோவெனில் துன்ப முகத்தும், சாவின் முகத்துக் குறையாமல் சுட்ட பொன் சுடரும்போல நாளுக்குநாள் அதிகமான தொழிய ஒரு நாளாகிலும் இல்லாததில்லை. ஆகையால் நிலையின்மை பொய்யின் குண மாகிய நிலைபெறுதல் குன்றாத மெய்யின் குணமாகக் கொள் ளச் சுரூபங்களைப் பகைத்த முறைமை நில்லாயை பால் பசா சினால் வழங்கின பொய்யென்று தோன்றி எதனாலும் அசைக்கப்படாது நின்ற சுரூபவணக்கம் ஆண்டவரால் வழங்கின மெய் வேத முறையென்று சொல்லத்தகுஞ் சத் தியந்தானே.
57. இப்படியே சேசுநாதர் ஸ்தாபித்த திருச்சபை துவக்கின காலத்திலுண்டான சுரூப வணக்கம் இடை விடாமலும், குறைபடாமலும் இந்நாள் வரைக்கும் வழங்கி, நடுவில் வந்த விக்கினத்தில் அசையாமல், அநேக இடத் தில் ஆண்டவர் செய்த புதுமைகளால் எக்காலத்திலும் ஒப்பிக்கப்பட்டதுமாய், மட்டில்லாத பேர்கள் எங்கும் மகிழ்ந்து பிராணனை வலியத் தந்து குருதியோடு எழுதின சாட்சியால் விளங்கப்பட்டது மாய்க், கல்விகளிலுந் தேர்ந்து, புண்ணிய நெறியிலுந் தளராத 733 மேற்றிராணி மார்களும் இரு முறை கூடி, நெடுநாள் யோசித்துக் தேர்ந்து தேறி, நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட்ட துமாயிருக் கிற முறைமையாகியும்; 1520-ம் வருஷத்திற்குப் பிறகு முளைத்த பொய்ப் புறச்சமயத்தார் தம் குருவாகிய பசாசி னால் ஏவப்பட்டு, அவ்வணக்கம் அக்கியானமென்றும், அப் புதுமைகள் மாயமென்றும், அச்சாட்சி பொய்யென்றும், அவ்வேத் பாரகர் எல்லாருந் தப்பறைக்காரரென்றும், எல் லாருங் குருடராகித் தாங்கள் மாத்திரங் கண்ணுடையவ ரென்றும், வெட்கமில்லாமல் பிதற்றிச் சொல்லக் கூசாது போனார்கள்.
அவர்கள் பகையால் பிதற்றினதைத் தாங்களே மனதில் உட்கொள்ளாமல், தப்பிதமென்று அறிந்து சொல்லிக்கொண்டு வருகையில், அவர்களோடு ஒத்த பகையும், ஆங்காரமும், மதிகேடும் உள்ளோர்கள் அநுசரிப்பார்க ளொழியப் புத்திமான் ஒருவனாயினும் உடன்படமாட்டான். மதிகெட்ட பதிதரே! நீங்களோ கையால் சூரியனை மறைப்பவர்கள் நீங்களோ ஊத்தை ஒழுகி நாறின உங்கள் வாயாவியால் அமிர்தக் கடலைக் கலக்கி வற்றுவிப்பவர்? நீங்களே கண் கெட்டவர்களாகையால் உச்சிப் பகலை இருண்டதென்று எவருக்கும் ஒப்பிப்பவர்கள். நீங்களே உங்கள் இருகண்களைப் பிடுங்கிச் சூரியன் ஒளியைக் காணீர் களாகில், மற்ற உலகமெல்லாம் அதனைக் காணாதிருக்குமோ? உங்களோடொத்த அக்கிரமிகள் மற்ற எவருந் தம் கண் களை பிடுங்க வேண்டுமென்று ஆசை இருக்குமோ? நாலு மனிதர் குருடராகிய மாத்திரத்தில் அதனால் சூரியன் ஒளி சற்றுங் குன்றாதது போல, நீங்கள் சலஞ்சாதித்துச் சுரூப வணக்கம் அக்கியானமென்றாலும், அதனால் அவ்வணக்கஞ் சர்வேசுரனால் வந்த உத்தம வேத முறையென்று குறை யொன்றின்றி உலகம் முடியுந்தனையும் விளங்கி வழங்கு மென்று சொல்லத்தகுஞ் சத்தியந்தானே.