1. சர்வேசுரனுடையவும், அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் நாமங்களை வீணாகப் பிரயோகிப்பது என்றால் என்ன?
தக்க முகாந்தரமும், கவனமுமில்லாமல், மரியாதைக்குறைவாகவும், தன் ஆச்சரியத்தையாவது, எரிச்சலையாவது காட்டுவதற்காகவும் அவர்களுடைய பெயரை உச்சரிக்கிறதுதான்.
2. இது எப்பேர்ப்பட்ட பாவமாகும்?
சாதாரணமாய் அற்பப்பாவமாகும்.
3. அப்படியானால், சர்வேசுரனுடைய அல்லது அர்ச்சியசிஷ்டவர்களுடைய பெயரை ஒருபோதும் உச்சரிக்கவே கூடாதோ?
தகுந்த காரணத்தினிமித்தம், மரியாதையோடும், வணக்கத்தோடும், பக்தியோடும், சர்வேசுரனுடைய அல்லது அர்ச்சியசிஷ்டவர்களுடைய பெயரை உச்சரிப்பது புண்ணிய முயற்சி ஆனதால், அவைகளை அடிக்கடி உச்சரிக்க வேண்டும். அப்படிச் செய்வது மகா பிரயோசனமாயிருக்கும்.