7. குணபான்மையில் பலவகை இருக்க முடியுமா?
ஆம். குணபான்மை உறுதியானது அல்லது உறுதி யற்றது. நற்குணபான்மை, துர்க்குணபான்மை எனப் பலவ கையாக இருக்கலாம்.
8. உறுதியான குணபான்மையின் இயல்பென்ன?
கொள்கைகளை ஊன்றி உணர்ந்து அவற்றை அச்சம், கலக்கமின்றி, திடமுடன் செயல்படுத்தும் குணபான்மை உறுதியானது
9. உறுதியற்ற குணபான்மை யாது?
கொள்கைகளை அரைகுறையாக உணர்ந்து அவற்றைச் சந்தேகத்துடனும், மனத்திகிலுடனும் செயல்படுத்தும் குணபான்மை உறுதியற்றது.
10. உறுதியற்ற குணபான்மையால் நேரிடும் தீமை யாது?
உறுதியற்ற குணபான்மையுள்ளவன் எளிதில் தன் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பான். தீக்குணம் மிக எளிதில் உண்டாக்கிவிடும். அதனால் அவன் துர்க்குண பான்மை உள்ளவனாக மாறிவிடுவான.
11. நற்குணபான்மை என்றால் என்ன?
கொள்கைகள் யாவும் நன்மைத்தனம் உடையனவாயும் ஒருவனை அவற்றின்படி ஒழுங்காக நடக்க வைக்கும் நிலைமை.
12. துர்குணபான்மை என்பதின் இயல்பென்ன?
தீமையான அல்லது தவறான கொள்கைகளை அடிப் படையாகக் கொண்டு ஒருவனைத் தீயவழியிலே இட்டுச் செல்லும் நிலைமை.
13. துர்க்குணபான்மை உள்ளவன் அல்லது குணபான்மையே இல்லாதவன் ஆகிய இரு வரில் யார் அதிகம் கெட்டவன்?
துர்க்குணபான்மை உள்ளவனே மிகவும் கெட்டவன். ஏனெனில் அவன் வேண்டுமென்றே அக்கிரமமாய் துஷ்டத் தனம் செய்கிறான். குணபான்மை அற்றவனோ சமயத்துக் கேற்ற விதமாய் நடந்து கொள்ளும் கோழை (சமய சஞ்சீவி) நல்லுணர்ச்சி தோன்றினால் நல்வழியில் நடப்பான். தீய உணர்ச்சி தோன்றினால் தீய வழியில் நடப்பான். ஆகை யால் அவனுடைய குற்றம் கோழைத்தனமே அன்றி அக்கிர மம் ஆகாது.
14. துர்குணபானமை உள்ளவனை முழுவதும் துஷ்டன் என்பது சரியா?
இல்லை. அவனிடத்தில் அநேக நற்குணங்கள் இருக்க லாம். ஆனால் ஒன்றிரண்டு கெட்ட கொள்கையினால் அவனுடைய குணபான்மைக் கெட்டுப் போயிற்று. இதற்குக் காரணம் அவனை ஆட்கொண்டிருக்கும் முதன்மையான உணர்ச்சி உந்தல் அல்லது ஆசாபாசம்.
15. முதன்மையான ஆசாபாசம் என்றால் என்ன?
பற்பலவிதமான குற்றங்களுக்கு அடிப்படையான ஏதேனுமொரு தீய நாட்டம் மனதில் ஆழமாய் வேறூன்றி யிருந்தால் அதை முதன்மையான ஆசாபாசம் அல்லது உணர்ச்சியின் உந்தல் என்கிறோம். உதாரணமாக முதன்மையான அல்லது முக்கிய ஆசாபாசம் அகங்காரம் (பெருமை. பிறரை மதியாத குணம்) என்றால், இது பேராசை, கர்வம், காய்மகாரம், பொறாமை, பகைவாமம், கோபம் முதலான குணங்களுக்கு வழியாகும்.
சிற்றின்பப் பிரியம் தலைமையான ஆசாபாசம் என்றால் அஃதுள்ளவன் போசனப் பிரியம் குடிவெறி, காமம், சோம் பல், அசமந்தம், கவனமின்மை , இன்ப நாட்டம், கடமையை அலட்சியம் செய்தல் முதலிய தீய குணங்களுக்கு ஆளாவான்.
16. ஓவ்வொரு மனிதனுக்கும் ஒரு முக்கிய ஆசாபாசம் உண்டா ?
அனைவரிடத்திலும் இது உண்டென்று திட்டமாய் கூறக் காரணமில்லை. ஆனால் ஏறக்குறைய எல்லோரிடத்திலும் ஒரு முக்கிய ஆசாபாசம் உண்டு எனலாம். இது ஒருவனிடம் இருக்கிறது என்று அறிந்தால் அதைக் கவனத்துடன் வேரோடு களைந்து எறிய முயலவேண்டும். ஏனெனில் தீமை சிறிதெனினும் விரைவில் நீக்காவிடில் பிறகு மிகவும் கடினமாகிவிடும்.
முள்மரம் செடியாக இருக்கும்போதே அதைப் பிடுங்கி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரிய மரமாகும்போது அதை வெட்டியவர்களின் கையைப் பதம் பார்த்து விடும். இவ்விதம் செய்தால் மற்ற அநேக குற்றங்குறைகள் அத்துடன் நீங்கிப்போகும்.