மனுக்குலத்தின் இரட்சிப்பு

1. விசுவாசப் பிரமாணத்தின் நான்காம் பிரிவைச் சொல்லு.

“போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையிலே அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.”


2. இந்நான்காம் பிரிவால் என்ன விசுவசிக்கிறோம்?

சேசுகிறீஸ்துநாதர் மனுக்குலத்தைத் தமது விலை மதிக்கப்படாத திரு இரத்தத்தினால் மீட்டு இரட்சிக்கும் பொருட்டு,

(1) யூதேயா நாட்டு ஆளுனனாகிய போஞ்சு பிலாத்தென்பவன் அதிகாரத்தின் கீழ் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு அதில் மரித்தார்.

(2) சிலுவையினின்று இறக்கப்பட்டுக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.