நம் வாழ்வுக்கு முடிசூட்டுவதாக விளங்கும் வரப் பிரசாதம் ஒரு பரிசுத்தமான, மகிழ்ச்சி நிறைந்த மரணம் ஆகும். ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தி, செல்வங்கள் தரக்கூடிய இன்ப சுகங்கள், உலகம் தரக்கூடிய பதவிகள், மதிப்பு, மரியாதைகள், மகிமைகள் எல்லாவற் றையும் ஆசைதீர அனுபவித்து விட்டு, கடைசியில் மகிழ்ச்சியற்ற மரணத்தை மனிதன் சந்திப்பான் என்றால், அதனால் அவனுக்கு வரும் ஆதாயம் என்ன?
மகிழ்ச்சியற்ற மரணம் என்றால், நிர்ப்பாக்கியத்திலும், தேவ சாபத்திலும் ஒருபோதும் முடிவடையாத நித்திய நரகம் என்பது பொருள்.
ஒரு முறை மட்டுமே மரிக்கும்படி மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த சாவு தீயதாக இருக்கு மானால், அந்தத் தவறைத் திருத்திக் கொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு தீய மரணம் மனிதனை என்றென் றைக்கும், நித்தியமாகவும் நரக நெருப்பில் அமிழ்த்துகிறது.
இதன் காரணமாக, ஒரு மகிழ்ச்சியான மரணத்தை அடைய நம் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்தட்பட்ட எல்லாவற்றையும் செய்வதும், சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்து வதும் மிகமிக முக்கியமானது.
நம் நித்திய இரட்சணியத்தை உறுதி செய்யக்கூடிய பல்வேறு அற்புதமான முறைகளைப் பரிசுத்த நூலாசிரி யர்கள் நமக்குப் பரிந்துரைக்கிறார்கள். இந்த எல்லா முறை களையும் நம்மால் முடிந்த வரைக்கும் நன்றாக நாம் பயன்படுத்த வேண்டும். ஆனாலும், இந்த வழிகளில் எல்லாம் மிகச் சிறந்ததும், மிக எளிதானதும் என்னவெனில், அது திவ்விய பலிபூசையில் அடிக்கடி பங்கு பெறுவதே என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பூசை காண தங்களால் முடிந்த எல்லா முயற்சி களையும் செய்த அனைவரையும் தாம் தேற்றி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், அவர்கள் தங்கள் வாழ்நாளில் எத்தனை பூசைகளைப் பக்தியோடு கண்டார்களோ, அத்தனை எண்ணிக்கையில் அவர்களுடைய மரணத் தறுவாயில் தமது பெரும் அர்ச்சியசிஷ்டவர்களை அனுப்புவதாகவும் நம் பரிசுத்த ஆண்டவர் அர்ச். மெட்டில்டம்மாளுக்கு வெளிப்படுத்தினார்.
பெனெல்லாஸ் என்பவர் ஒரு சம்பவத்தை விவரிக் கிறார். ஒரு பக்தியுள்ள மனிதன் பூசையின் நற்பயனில் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தான் என்றால், தன்னால் முடிந்த போதெல்லாம் பூசை காண அவன் எல்லா முயற்சி களையும் எடுத்துக்கொண்டான். அவன் கடும் நோய்வாய்ப் பட்டு, மிகுந்த சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் இறந்தான். அவனுடைய பங்குக் குருவானவர் தமது மந்தையின் இந்த அற்புதமான உறுப்பினரின் இறப்பினால் மிகுந்த துயரமடைந்தார். அவனுடைய ஆத்துமத்திற் காக அநேக பரிகார முயற்சிகளைச் செய்து ஒப்புக்கொடுத்தார்.
இறந்த அந்த மனிதன் திடீரென அவருக்குத் தோன் றியபோது இந்த நல்ல குரு பெரும் வியப்புக்கு உள்ளானார். அவன் மகிழ்ச்சியால் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அவன் பங்குக் குருவின் பிறர்சிநேகத்திற்காக அவருக்கு நன்றி கூறிய அதே வேளையில் தனக்கு ஜெபம் எதுவும் தேவையில்லை என்றும், தான் அடிக்கடி பூசை கண்டு வந்த தால், இறந்தவுடனேயே மோட்சத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டு விட்டதாகவும் அறிவித்தான்.
ப்ரெஸ்லோவின் ஆயரான மோன்ஸிஞ்ஞோர் நோட்டியேர் என்பவர், தமக்கு எவ்வளவோ அதிகமாக கடுமையான வேலைகளும், பெரும் பொறுப்புகளும் இருந்தாலும், தமது மேற்றிராசனக் கோவிலில் நடக்கும் பூசைகளில், தம்மால் முடிந்த வரை அதிகமான பூசைகளில் பங்கு பெற எப்போதும் முயன்று வந்தார்.
அவர் மரணமடைந்தபோது, அவரது ஆத்துமம் ஏராளமான மகிமை பொருந்திய தேவதூதர்களால் சூழப் பட்டதாக மோட்சத்திற்கு எழுந்து செல்வதை மக்கள் கண்டார்கள். இந்த சம்மனசுக்கள் மகிழ்ச்சியும், தேவ ஸ்துதிகளும் நிறைந்த இனிய பாடல்களைப் பாடினார்கள்.
நல்ல கிறீஸ்தவர்கள் அனைவரும் இந்தப் பரிசுத்த மான முன்மாதிரிகைகளைக் கண்டு பாவித்து, தாங்கள் பூசை காணும் ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியான மரணத்திற்கான வரப்பிரசாதத் தையும், உத்தரிக்கிறஸ்தலத்து நெருப்பிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்படும் வரப்பிரசாதத்தையும் கடவுளிடம் மன்றாடிக் கேட்பார்களாக.