நற்கருணையில் எண்ணற்ற புதுமைகள் கூறப்படுகின்றன, அவற்றுள் சில இங்கே குறிப்பிடப்படுகின்றது.
ஆம்ஸ்ற்றெர்டம் (Amsterdum) லிருந்து வரும் கூற்றானது 1345ம் ஆண்டு ஒரு குருவானவர் ஓர் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதருக்கு நோயில் பூசுதல் திருவருட்சாதனம் வழங்கினார். அவர் அக்குடும்பத்தினரிடம் அம்மனிதர் அதை எறிந்துவிட்டால், அவர்களும் அதை எடுத்து நெருப்பில் எறிந்து விட வேண்டுமென்று கூறினார். அம்மனிதன் அதை எறிந்து விட்டான். குருவின் வேண்டுகோள்படியே அவர்களும் அதை நெருப்பில் எறிந்து விட்டார்கள். மறுநாள் காலை ஒரு பெண்மணி தீயை குறைக்க வந்தாள். அவள் அப்பமானது விழிம்பில் ஒளியுடன் சூழப்பட்டு இருப்பதை கண்டாள். இது ஒருவாறு மனித செரிமானப் பகுதியையும், தீயையும் கடந்து விட்டதாகவே தோன்றினாலும் பாதிப்பேதும் அடையவில்லை.
மற்றொரு கூற்றின்படி, பவேரியா (Bavaria)ல் உள்ள ஒரு விவசாயி, எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பத்தை திருப்பலியிலிருந்து வீட்டிற்கு அது தனது குடும்பத்திற்கு நல்ல நேரத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் கொண்டு வந்தான். இருந்தாலும் அவன் தான் செய்வது மாபரும் தவறு என்ற உணர்வினால் மனம் நொந்து பாவமன்னிப்பு பெறுவதற்காக கோவிலுக்குச் செல்ல திரும்பினான். அங்ஙனம் அவன் திரும்பியதும் அந்த அப்பமானது கையிலிருந்து பறந்து சென்று தரையில் இறங்கியது. அவன் அதைத் தேடினான். ஆனால் அவனால் பார்க்க முடியவில்லை. அவன் திரும்பிச்சென்று உடன் பல கிராம வாசிகளுடனும் குருவுடனும் வந்தான். அவர்கள் அது சற்று தொலைவிலிருப்பதைக் கண்டார்கள். அவர்களோ அதை எடுக்க குனிந்தனர். அதுவோ மீண்டும் பறந்து சென்று மிதந்த வண்ணம் தரையில் அமர்ந்து மறைந்தது. இந்நிகழ்வு ஆயருக்கு அறிவிக்கப்பட்டு அவரும் அவ்விடம் வந்து அதை எடுக்க முயல அது மீண்டும் பறந்து சற்று அதிக நேரம் தொங்கி கீழே விழுந்து மறைந்தது.