தேவநற்கருணைக்கு நவநாள் செய்யும் முறை

1. இயேசுவுக்கு முன்பாக வந்து அவரை ஆராதியுங்கள்.

2. இயேசுவின் வார்த்தைகளை வாசியுங்கள்.

3. இறைவார்த்தை சிந்தனைகளை வாசித்து மௌனமாக பின்வரும் வினாக்களை எழுப்புங்கள்.


அ. வாசிக்கப்பட்ட வாசகங்களில் என்னை உறுத்தும் பந்தி எது?

ஆ. அதை வாசிக்கும்பொழுது எனக்கு ஏற்படும் உணர்வுகள் எவை?

இ. அவ்வாசகங்கள் ஊடாக என்னிடம் பேசிய இயேசுவுக்கு நான் சொல்லப்போகும் பதில் என்ன?


4. தரப்பட்ட செபங்களை பயன்படுத்தலாம். நீங்களும் சுயமாக செபிக்கலாம்.

5. இயேசு உங்களிடம் ஏவுகின்ற கருத்துக்களுக்காக இறை இரக்க செபமாலையை செபிக்கலாம்.

6. பிரத்யேகமான சிந்தனைகளை பயன்படுத்துக. நற்கருணைப் பேழையிலிருந்து பிரம்மிக்கத்தக்க வல்லமை வெளிப்படுவதைக் காண்பீர்கள். இயேசுவின் வல்லமை அன்பு, சமாதானம் எல்லாம் உம்முடையதாயிருக்கும்.