7. ஆதிமனிதன் உண்டான விதமென்ன?
ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து, மூன்றாவது ஆளுக்குத் தேவையான உடலை உருவாக்க முடியுமானால், மேற்படி ஆண், பெண் இருவருக்கும் உள்ள உடல் எங்கிருந்து வந்தது? என்னும் கேள்வி எழுவது நியாயமே!
உலக மக்கள் யாவரும் சரித்திரப் புத்தகமாக ஏற்றுக்கொள்ளும், பைபிள் எனப்படும் வேதாகமம் கூறுவதாவது:- ஆண்டவராகிய கடவுள், மனிதனைக் களிமண்ணால் உருவாக்கி, அவன் முகத்திலே ஜீவ ஆவியை ஊத மனிதன் ஜீவாத்துமாவானான்" -"அப்போது ஆண்டவராகிய கடவுள் ஆதாமுக்கு அசந்த நித்திரையை வரப்பண்ணினார்.
அவன் அப்படியே தூங்கிக் கொண்டிருந்தபோது தேவன் அவனுடைய விலாவெலும்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதை எடுத்த இடத்தைச் சதையிலை அடைத்தார். பின்னும் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடத்தில் எடுத்த விலா எலும்பை ஒரு ஸ்திரியாக உண்டாக்கி அந்தப் பெண்ணை ஆதாமிடம் கொண்டு வந்தார்''. (ஆதி 2/7 21, 22) பிறகு அவர்கள் பலுகிப் பெருகும் வரத்தை அவர்களுக்கு அளித்தார். இதனால் மனுக்குலம் வளர்ச்சியடையத் துவங்கியது.
சிலர் நினைப்பதுபோல. மனிதன் கடலிலிருந்தோ, ஆகாயத்திலிருந்தோ, மரஞ்செடி கொடிகளிலிருந்தோ, மனிதனுடைய கற்பனையிலிருந்தோ பலதரப்பட்ட மக்கள் குறிப்பிட்ட தேவனின் உறுப்புகளிலிருந்தோ உற்பத்தியாவதில்லை. மனித ஆன்மா, மனித கருவோடு சேர்வது தாயின் உதிரத்தில் தவிர வேறு எங்கும் இல்லை. எனவே, மேற்கண்டவை அபத்தமான கொள்கைகளாகும்.