மிதமுடைமை

67. மிதமுடைமை என்னும் ஒழுக்கச் சட்டம் நம்மிடம் எதிர்பார்ப்பது யாது? 

நமது தத்துவங்களையும், சக்திகளையும், சரியான முறை யில் அடக்கியாளவும், நமது உணர்ச்சிகள், எழுச்சிகள், கவர்ச்சிகள் ஆகியவற்றை சரியான விதத்தில் செலுத்தவும், நமது ஆத்ம தத்துவங்களையும், பல உணர்ச்சிகளையும் நன் முறையில் நடத்தவும் மிதமுடைமை கற்பிக்கிறது. ஏனெனில் நமது ஐம்புல உணர்ச்சிகள் எளிதில் நம்மை மேற்கொண்டு விடும் சக்தியுடையவை எனவே மிதமுடைமையை இவ் விஷயத்தில் கண்டிப்பாக அனுசரிக்க நாம் கடமைப்பட் டிருக்கிறோம்.

68. மிதமுடைமை, முழுதும் விலக்கிவிடல் இவற்றிற்கு ஏதேனும் வேறுபாடு உண்டோ ?

ஆம். மிதமுடைமை என்பது, சட்டபூர்வமான அனு மதிக்கப்பட்டுள்ள இன்பங்களை, ஒருகுறிப்பிட்ட அளவோடு அனுபவிப்பது. ஆனால் முழுவதும் விலக்கிவிடல் என்பது அவற்றை ஒரு சிறிதும் அனுபவிக்காமல் முழுவதும் நீக்கி விடுதலாகும். சில விஷயங்களில் இந்த முழு நீக்கம், மித முடையைக் கையாள வழியாக இருக்கலாம்.

69. எந்தெந்த காரியங்களில் நாம் மிதமுடைமையை அனுசரிக்க வேண்டும்?

சிறப்பாக உணவு, பான வகைகளிலும், ஐம்புல இன்பங்களிலும் அதைக் கையாளவேண்டும் ஏனெனில் இந்தக் காரியங்களில் தான் நாம் எளிதாகத் தவறிவிடு கிறோம். விசேஷமாகப் போதை தரும் பானங்களைக் குடிப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

70. மதுவகைகளை மிதமிஞ்சி உபயோகிப்பதால் ஏற்படும் தீங்கு யாது? 

(1) போதைகொள்ளும் வரை மதுவைக்குடிப்பதால் தேவசாயலாக உண்டாக்கப்பட்டுள்ள மனிதனின் மதிப்பு அழிந்துவிடுகிறது. எனவே ஒரு கனமான பாவமாகும்.

(2) இயல்பாகவே இப்பழக்கம், சண்டை சச்சரவு, கலகம். அடிதடிப் பிரயோகம் முதலியவை ஏற்படக் காரண மாயிருக்கிறது.

(3) பல குடும்பங்கள் கெட்டழிவதற்குக் காரணமா யிருக்கிறது.

(4) வறுமை, நோய், பைத்தியம், ஏழ்மை முதலியவற்றிற்கு மூலகாரணமாகிறது. 

71. போசனப்பிரியம் குற்றமாகக் கருதப்படுவது ஏன்? 

ஏனெனில் 
:
(1) நமது புல உணர்ச்சியைத் திருப்திப்படுத்த மட்டுமே நாம் உணவு வகைகளை உபயோகிக்கும்போது கடவுளால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கு முறைக்குத் தடை செய்கிறோம்.

(2) இப்பழக்கம் மிக எளிதாக நமக்கு நோயுண்டாக் கும வழியைத் தேடி தருகிறது.

(3) நம்மைத்தானே அடக்கியாளும் சக்தியை இத் தீயப்பழக்கம் குறைத்து, நாம் குணபான்மை உடையவர்களாக இருப்பதற்கு இடையூறாக இருக்கிறது.