இஸ்பிரீத்துசாந்து

21. எப்படி இஸ்பிரீத்துசாந்துவின் பேரில் நமது பக்தியைக் காண்பிக்கலாம்?

(1) இஸ்பிரீத்துசாந்துவானவர் நமது ஆத்துமத்தில் செய்யும் வாசத்தைப் பற்றி, அடிக்கடி விசுவாச முயற்சி செய்து, அவரை ஆராதித்து, அந்தத் திவ்விய பிரசன்னத்தினால் உண்டாகும் ஞானப் பயன்களை அடையும்படி பிரயாசைப்படுவதினாலும்,

(2) செபத்தியான சுறுசுறுப்பினாலும், மற்றெவ்வித புண்ணிய முயற்சிகளாலும் அவருடைய வரமாகிய தேவசிநேக அக்கினியை நமது இருதயத்தில் அதிகமதிகமாய்ப் பற்றியயரியப் பண்ணுவதினாலும், 

(3) அவர் நமது ஆத்துமத்தில் சகல தேவ வரப்பிரசாதங்களையும் பொழிந்தருளுபவராகையால், அவரை நேசித்து, அவருக்கு நன்றியறிலைச் செலுத்துவதினாலும்,

(4) அவர் ஞான சொரூபியாயிருப்பதால், நாம் யாதொரு முக்கியமான வேலையையோ, கிரிகையையோ, தீர்மானத்தையோ பண்ணுவதற்கு முன்னதாக, ஆலோசனைக்காகவும், திடனுக்காகவும் அவரிடம் வேண்டிக் கொள்வதினாலும்; இன்னமும் ஞானக் காரி யங்களைக் கண்டுபிடிக்கக் கூடாதபோதும், அவைகளில் சந்தேகம் பிறக்கும்போதும் அவருடைய வெளிச்சத்தை மன்றாடுவதினாலும்,

(5) அவர் தேற்றுகிறவராகையால் துக்கம், கஸ்தி நேரிடும்போது அவரிடம் ஆறுதலைக் கேட்பதாலும்,

(6) அவர் சத்தியத்தின் இஸ்பிரீத்துசாந்துவானவரா யிருக்கிறபடியால் அவருடைய ஏவுதலுக்கு இணங்கி நடப்பதாலும், 

(7) அவர் தேவசிநேகமாயிருக்கிறதினால் சர்வேசுரன் மட்டில் உருக்கமான நேரத்தை அவரிடத்தில் மன்றாடுவதினாலும்,

(8) அவர் அர்ச்சிக்கிறவரானதால் பாவ சோதனை களைச் செயிக்கவும், புண்ணியத்தை அனுசரிக்கவும் வேண்டிய அனுக்கிரகத்தைக் கெஞ்சிக் கேட்பதினாலும், 

(9) அவர் சர்வ வல்லமையுள்ளவராயிருப்பதால் நமது பலவீனத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டுமென்று அவரைப் பிரார்த் திப்பதினாலும் அவர்பேரில் நமது பக்தியைக் காண்பிக்கலாம்.


77. இஸ்பிரீத்துசாந்து யார்?

அர்ச். திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய சர்வேசுரன்.  இவர் பிதாவுக்கும் சுதனுக்குமுள்ள அந்நியோன்னிய சிநேகமானவர்.


1. இந்தப் பதிலில் அடங்கியிருக்கும் வேத சத்தியங்கள்  எவை?

இஸ்பிரீத்துசாந்து:

(1) மெய்யான சர்வேசுரன்,

(2) ஒரு தேவ ஆள்,

(3) தமதிரித்துவத்தின் மூன்றாம் ஆள்,

(4) பிதாவுக்கும் சுதனுக்குமுள்ள அந்நியோன்னிய சிநேகமானவர்.


2. இஸ்பிரீத்துசாந்து மெய்யான சர்வேசுரனாயிருக்கிறார் என்று நாம் எப்படி அறிவோம்?

(1) “இஸ்பிரீத்துசாந்துவானவர் எல்லாவற்றையும், சர்வேசுரனிடத்தில் ஆழ்ந்திருப்பவைகளை முதலாய் ஊடுருவிப் பார்க்கிறார்” என்றார் அர்ச். சின்னப்பர் (1 கொரி. 2:10).

(2) வேதாகமத்தில் சர்வேசுரன் என்று அழைக்கப் படுகிறார் (1 அரு. 5:7; 1 கொரி. 3:16).

(3) சர்வேசுரனும் இஸ்பிரீத்துசாந்துவும் திவ்விய வரங்களைப் பகிர்ந்து கொடுக்கிறவர்களாகச் சொல்லப்பட்டிருக் கிறார்கள் ( கொரி. 12:11).

(4) அனனியா இஸ்பிரீத்துசாந்துவுக்குப் பொய் சொன்னபோது சர்வேசுரனுக்குப் பொய் சொன்னதாக அர்ச். இராயப்பர் கூறினார் (அப். நட. 5:3,4).

(5) சர்வ ஞானம் (1 கொரி. 2:10), சர்வ வியாபகம் (ஞான. 1:7), சர்வ வல்லபம் (லூக். 1:35), தீர்க்கதரிசன வரம்           (2 இரா. 1:21), புதுமை வரம் (மத். 12:28), பாவப் பொறுத்தல் அளிக்கும் வரம் (1 கொரி. 6:11) இவை முதலிய தேவ இலட்சணங்கள் அவருக்குக் குறிக்கப்பட்டிருக்கின்றன.


3. இஸ்பிரீத்துசாந்து மெய்யாகவே தேவ ஆளாயிருக்கிறாரென்று எப்படிக் காட்டலாம்?

(1) புது ஏற்பாட்டில் அவர் ஆள் என்று சொல்லி யிருக்கிறது.  “நானும் பிதாவை மன்றாடுவேன்; அவர் என்றென் றைக்கும் உங்களோடு கூட வசிக்கும்படியாகத் தேற்றுகிறவராகிய வேறொருவரை (அதாவது இஸ்பிரீத்துசாந்துவை) உங்களுக்குத் தந்தருள்வார்” (அரு. 14:16).

(2) வேதாகமம் ஒரு தேவ ஆளின் செய்கை, கிரிகை களை அவருடையதென்று சொல்லிக் காட்டுகிறது. “இஸ்பிரீத்து சாந்துவானவர் சகலத்தையும் உங்களுக்குப் படிப்பிப்பார்” (அரு. 14:26). “இஸ்பிரீத்துவானவர் நமது பலவீனத்தைத் தாங்கிக் கொண்டு வருகிறார்... நமக்காகப் பிரார்த்திக்கிறார்” (உரோ. 8:26).  “இஸ்பிரீத்துசாந்துவை மனநோகப் பண்ணாதேயுங்கள்” (எபே. 4:30).

(3) திருச்சபையின் போதகமும், பாரம்பரியமும் அதற்கு அத்தாட்சியாயிருக்கிறது.


4. இஸ்பிரீத்துசாந்து தமதிரித்துவத்தின் மூன்றாம் ஆளாயிருக்கிறார் என்பது ஏன்?

சேசுநாதர் பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவின் பெய ராலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று கற்பித்ததினால் இஸ்பிரீத்துசாந்து தமதிரித்துவத்தின் மூன்றாம் ஆளாக விளங்கு கிறார்.


5. இஸ்பிரீத்துசாந்து பிதாவுக்கும் சுதனுக்குமுள்ள அந்நியோன்னிய சிநேகமானவர் என்று சொல்வானேன்?

இஸ்பிரீத்துசாந்து பிதாவினின்று அல்லது சுதனினின்று பிறக்காமல், ஒரே ஆதியாகிய பிதா சுதன் ஆகிய இவர்களிடமிருந்து புறப்படுகிறார். சுதன் பிதாவினின்று புத்தி வழியாகப் பிறக்கும்போது, இஸ்பிரீத்துசாந்து பிதாவிடத்தினின்றும், சுதனிடத்தினின்றும் மனதின் வழியாய் வீசப்படுகிறார்.  பிதாவானவரும் சுதனானவரும் தங்களிட முள்ள அளவில்லாத நன்மைத்தனத்தைக் கண்டு, தங்களை நித்திய மாய்ச் சிநேகித்து, தேவசிநேகமாகிய இஸ்பிரீத்துசாந்துவைப் புறப் படச் செய்கிறார்கள்.  ஆதலால்தான் இவர் பிதாவுக்கும் சுதனுக்கு முள்ள அந்நியோன்னிய சிநேகமானவர் என்று சொல்கிறோம்.

6. இஸ்பிரீத்துசாந்து எங்கே இருக்கிறார்?

அவர் சர்வேசுரனாகி மட்டும் எங்கும் வியாபித்திருப் பதுபோல், நமது ஆத்துமத்தில் இருப்பதுமன்றி, இஷ்டப்பிரசாதத்தின் சீவனை நமக்குக் கொடுக்கும்படி விசே­ விதமாய் நமது ஆத்துமத்துக்குள் எழுந்தருளி வந்து இருக்கிறார்.


78. அவர் பிதாவுக்கும் சுதனுக்கும் சரியயாத்தவரோ?

ஆம்.  அவர் பிதாவோடும் சுதனோடும் ஒரே தெய்வ சுபாவம் உடையவராயிருப்பதால் எல்லாத்திலும் அவர்களுக்குச் சரியயாத்தவர் தான்.

“எல்லாவற்றிலும் சரியயாத்தவர்” என்பதற்கு அர்த்தமென்ன?

பிதா சுதனுடைய சுபாவத்துக்கும் இலட்சணங் களுக்கும், இஸ்பிரீத்துசாந்துவின் சுபாவத்துக்கும் இலட்சணங் களுக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை என்று அர்த்தமாம்.

குறிப்பு:  இஸ்பிரீத்துசாந்துவின் தன்மை, ஏக திரித்துவ சர்வேசுரன் விளக்கத்தில் விவரித்துச் சொல்லியாயிற்று.


79. இஸ்பிரீத்துசாந்து அப்போஸ்தலர்களின் பேரில் எந்த ரூபமாக இறங்கி வந்தார்?

அக்கினி நாக்கு ரூபமாக இறங்கி வந்தார்.


1. இஸ்பிரீத்துசாந்துவுக்கு இப்பேர்ப்பட்ட ரூபம் உண்டா?

இஸ்பிரீத்துசாந்து சர்வேசுரனாயிருக்கிறபடியால் அவர் உருவம் இல்லாதவர்.


2. அவர் அப்போஸ்தலர்கள் மேல் இறங்கினபோது  மேற்படி ரூபத்தை ஏன் எடுத்தார்?

அவர்களுக்குத் தாம் கொடுக்கப்போகிற வரங்கள் எத்தன்மையான வரங்கள் என்று காண்பிக்கத்தான்.


3. அதெப்படி?

(1) அப்போஸ்தலர்கள் வேதத்தைப் போதிப்பார்கள் என்கிறதற்கும், பாஷையயல்லாம் கஷ்டமின்றி அற்புதமாய்ப் பேசுவார்கள் என்கிறதற்கும் நாவானது அடையாளம்.

(2) அவர் அப்போஸ்தலர்கள் மேல் இறங்கி வந்ததி னாலே நமதாண்டவர் கற்றுக் கொடுத்த சத்தியங்களைக் கண்டு பிடிக்கும்படி அவர்களுடைய புத்தியைத் துலக்கப் போகிற வெளிச் சத்திற்கும், அவர்களுடைய இருதயத்தில் எரியப்போகிற தேவ சிநேகத்துக்கும், அக்கினியானது அடையாளமாயிருக்கிறது. 


4. இஸ்பிரீத்துசாந்து ஒரு முறை மாத்திரமா காணக்கூடிய விதமாய் இப்பூமியில் இறங்கி வந்திருக்கிறார்?

(1) சேசுநாதர் ஸ்நாபக அருளப்பர் கையால் தவ ஞானஸ்நானம் பெறும்போது இஸ்பிரீத்து சாந்து மாடப்புறா ரூபமாய்  அவர்மேல் இறங்கி வந்தார்.

(2) கிறீஸ்துநாதர் தபோர் மலையில் மறுரூபமான போது கண்கூசும் பிரகாசமுள்ள மேகரூபமாகத் தோன்றினார்.


5. ஏன் மாடப்புறா ரூபத்தை அணிந்து கொண்டார்?

மாடப்புறாவானது சேசுநாதருடைய சிநேகத்துக்கும், சாந்தத்துக்கும், பரிசுத்தத்துக்கும், அவர் தமது மரணத்தால் மனித னைச் சர்வேசுரனோடு சமாதானமாக்குதலுக்கும் அடையாளமாம்.


6. ஏன் மேக ரூபமாகத் தோன்றினார்?

மெய்யான மனிதனும், தேவனுமாகிய சேசுகிறீஸ்து நாதர் தமது மனுUகத்தால் தம்முடைய தெய்வீகத்தை மறைத்தா ரென்று காட்டும்படியாகத்தான்.


80. (41)  இஸ்பிரீத்துசாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

உலகத்தின் எத்திசையிலும் பிரசங்கித்துத் திருச்சபையைப் பரம்பச் செய்தார்கள்.


1. அப்போஸ்தலர்கள் எங்கே பிரசங்கிக்கத் துவக்கினார்கள்?

சகல தேசங்களினின்றும் பாஸ்காப் பண்டிகை கொண்டாடும்படி ஜெருசலேமுக்கு வந்து கூடியிருந்த யூதர்கள் முன்பாக அர்ச். இராயப்பர் முதல் பிரசங்கம் செய்தார்.  அப்போது மூவாயிரம் பேர் மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப்.நட. 2).


2. அப்போது யூதருடைய மூப்பர்கள் என்ன செய்தார்கள்?

அப்போஸ்தலர்களைத் தங்களிடம் வரவழைத்து இனி சேசு என்பவருடைய பெயரை உச்சரியாமலும், அவருடைய வேதத்தைப் போதியாமலும் இருக்கும்படி கண்டிப்பான கட்டளை யிட்டார்கள் (அப். நட. 4:18).


3. அப்போஸ்தலர்கள் அதற்குச் சம்மதித்தார்களா?

சம்மதிக்கவேயில்லை.  மனிதருடைய கட்டளையை விட தேவ கட்டளையைப் பெரிதாக எண்ணி, முன்னிலும் அதிக ஊக்கத்துடன் பிரசங்கித்து வந்தார்கள் (அப். நட. 4:20).


4. அதைப் பார்த்து யூதர்கள் என்ன செய்தார்கள்?

மறுபடியும் அப்போஸ்தலர்களைத் தங்களிடம் வரவழைத்து, அவர்களை சாட்டைகளால் அடிப்பித்து, சிலரைச் சிறைச்சாலையில் அடைத்து, இனி சேசுவைப் பற்றிப் பேச வேண்டா மென்று கற்பித்தார்கள்.  அப்போதுதான் சங்கிலிகளால் கட்டப் பட்டு சிறையில் அடைபட்டிருந்த அர்ச். இராயப்பரை  ஒரு  சம்மன சானவர்  அற்புதமாய்ச் சிறையினின்று மீட்டு வெளியேற்றினார் (அப்.நட. 12).


5. ஜெருசலேம் பட்டணத்தில் பிரசங்கித்த பிறகு அப்போஸ்தலர்கள் எங்கே போதித்தார்கள்?

யூதேயா நாட்டில்  ஊர் ஊராகவும், கிராமம் கிராம மாகவும் பிரயாணம் செய்து, செபக்கூடத்திலும், வீடுகளிலும், வீதிகளிலும் யூதருக்குப் பயப்படாமல் சேசுநாதருடைய திருநாமத் தைப் போதித்துவந்தார்கள்.


6. யூதேயா தேசத்தில் பிரசங்கித்த பிறகு அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

ஓர் சங்கமாகக் கூடி சில வேத தீர்மானங்களைச் செய்து, வேதத்தைப் போதிக்கும்படி உலகத்தின் நாலா பக்கங் களுக்கும் புறப்பட்டுப் போனார்கள்.  அவர்கள் சென்றவிடங்களில் நமதாண்டவர் கட்டளைப்படி மேற்றிராணிமார்களையும், குருக் களையும் அபிஷேகம் செய்து சத்திய திருச்சபையைப் பரவச் செய்தார்கள்.


7. அப்போஸ்தலர்களுக்குள்ளே ஒருவர் நமது இந்தியா வுக்கு வந்து வேதத்தைப் போதித்தாரா?

அர்ச். தோமையார் இந்தியாவுக்கு வந்து வேதத்தைப் போதித்தார்.


8. அப்போஸ்தலர்கள் துன்பமில்லாமல் எளிதாய், சேசுநாதரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபையைப் பரம்பச் செய்தார்களா?

சில தேசங்களில் அரசரும், பிரபுக்களும், மற்ற ஜனங் களும் சந்தோ­த்துடன் சத்திய வேதத்தைக் கைக்கொண்டார்கள்.  ஆயினும் பற்பல தேசங்களில் அரசரும், பிரஜைகளும் கிறீஸ்து வேதத்தை எதிர்த்து, அப்போஸ்தலர்களையும், புதுக் கிறீஸ்தவர் களையும் சிறையில் அடைத்து, சிலரை நெருப்பால் சுட்டார்கள்.  சிலரைக் காட்டு மிருகங்களுக்கு இரையாகப் போட்டார்கள், சிலரைக் கத்தியால் வெட்டினார்கள். வேறு சிலரைப் பற்பல விதமாய்ச் சித்திரவதை செய்து கொன்றார்கள்.


9. அப்போஸ்தலர்கள் எல்லோரும் எப்படி இறந்து போனார்கள்?

தாங்கள் போதிக்கிறதெல்லாம் மெய் என்கிறதற்கு அத்தாட்சியாக அவர்கள் எல்லோரும் வேதசாட்சி முடி பெற் றார்கள்.   அர்ச். அருளப்பர் கொதிக்கிற எண்ணெய் நிறைந்த தொட்டியில் அமிழ்ந்திருந்தாலும், ஒரு வாலிபனைப் போல் அதினின்று மீண்டு எழும்பினார்.  அர்ச். தோமையார் மயிலையில் வேதசாட்சியாக மரணமடைந்தாரென்று சொல்லப்படுகிறது.


சரித்திரம்

லூசியா, அல்லது பிரகாசியம்மாள் என்பவள் உத்தம கோத்திரத்தில் பிறந்து, பெரும் பணக்காரியாயிருந்தாள்.  ஒரு உலகத்தான் இவளைக் கலியாணம் முடித்துக் கொள்ள ஆசித்தும் அதற்கு அவள் சம்மதியாததால், இவள் கிறீஸ்தவளென்று அதிகாரிக்குத் தெரியப்படுத்தியதால் பிரகாசியம்மாள் பிடிபட்டுச் சிறையாக்கப்பட்டாள்.  அதிகாரி நயபயத்தால் பட்ட பிரயாசையெல்லாம் வீணானதால், அவளைக் கசைகளால் அடிப்பித்தான். அப்போது வேதசாட்சி, “நான் உமக்குச் சொன்னதெல்லாம் இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் சொன்னேன்.  என்னை இனி சோதிப்பதால் பலனடைய மாட்டீர்” என்று தைரியமாய்ச் சொன் னாள்.  அதற்கு அதிகாரி, “இஸ்பிரீத்துசாந்து உன்னிடமிருக்கிறாரா?” என்க, “கற்புள்ள இருதயம் அவர் வசிக்கும் தேவாலயமாகும்” என்றாள்.  “உன் கற்பழிந்தால் இஸ்பிரீத்துசாந்து உன்னை விட்டுவிடுவாரல்லவா?” என்று சொல்லி அர்ச்சியசிஷ்டவளைப் வேசிகளின் வீட்டுக்கு இழுத்துப் போகும்படி கற்பித்தான். எத்தனை பேர் பிடித்து இழுத்தாலும், அவள் அசையாமல் ஸ்தம்பம்போல் அங்கேயே நின்றாள். அங்கிருந்தவர்களெல்லாரும் இவ்வதிசயத்தைக் கண்டு பிரமித்து நிற்கும்போது குரூரனான அதிகாரி வேத சாட்சியைச் சுற்றிலும் விறகை அடுக்கி அவளைச் சுட்டெரிக்க  ஆணையிட்டான்.