72. தன்னலம் மறத்தல் என்னும் நற்குணத்தை எவ்வாறு பயிற்சிக்கலாம்?
தன்னலமறுத்தலைப் பல வகைகளில் பயிற்சிக்கலாம். ஒருசந்தி, உபவாசம், விரதம், நோன்பு முதலியவற்றை அனுசரிப்பதாலும், நமது வாழ்க்கையை எளிதாக அமைத் துக் கொள்வதாலும், நமது பார்வை பேச்சு இவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்வதாலும், நமது புலனுணர்ச்சிகளை அடக்கி ஆளுவதாலும், தன்னலமறுத்தலைப் பயிற்சிக்கலாம்.
நாம் விரும்பும் சில இன்பங்களை அனுபவிக்காமல் இருப்பது நமக்கு விருப்பமில்லாத காரியங்களைச் செய்யும் போது நம்மில் இயல்பாகவே எழும் பொறுப்புணர்ச்சிகளைத் தாங்கிக்கொள்ளுதல் முதலியவை நமது சுபாவத்துக்கு இயல்பாகவே பிடித்தமாயிருப்பதில்லை இவை ஒரு விதத் தில் சிறுசிறு தொந்தரவுகள் தான். மனதில் எரிச்சலை எழுப்புவன தான்! ஆனால் இவற்றை மனமுவந்து ஏற்றுக் கொள்வதில் தான் சுய நலம் தாக்கப்படுகிறது.
73. இளைஞர்கள் பயிற்சிக்கக் கூடிய தன்னலமறுப்புகள் யாவை?
இயற்கையிலேயே தீங்கற்ற பேச்சு, பார்வை, கேள்வி இவற்றில் கூட கட்டுபாடாக இருக்கப் பழகிக்கொள்ளுதல், மது வகை, லாகிரி வஸ்துக்களை உபயோகியாமை, பீடி, சிகரெட், சுருட்டு முதலியவற்றைப் புகைக்காமை. காலந் தவறாமை, ஒழுங்குடமைகளை நுணுக்கமாய் அனுசரித்தல். கடமையைச் சரியான நேரத்தில் சரியான முறையில் நிறை வேற்றல், சில சமயங்களில் இன்பமான பொழுது போக்கு களில் கலந்து கொள்ளாமை முதலியவை இளைஞர்கள் பயிற்சிக்க்ககூடிய தன்னலமறுப்புச் செயல்களாகும்.
74. தன்னல மறுத்தலைப் பயிற்சிப்பதற்குரிய நோக்கம் யாது?
நமது ஆன்ம தத்துவங்களை உறுதிப்படுத்தவும், நமது குணபான்மையை உருவாக்கவும், மனிதப் பண்புகளை வளர்ப்பதற்கும். இப்பயிற்சி அவசியமானது இதனால் நாம் எப்போதும் கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு நமது செயல்களைச் செய்வோம் ; உணர்ச்சி வசப்பட்டு, ஆத்திரமாகக் காரியங்களைச் செய்யமாட்டோம். இப்பயிற்சி ஆக்க வேலைக்கு ஏற்றதாக இருக்கவேண்டுமே தவிர, நமது உணர்ச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தும் கருவியாக இருக்கக் கூடாது - இப்பயிற்சிகளை நாம் கடவுளின் அன்புக்காக, அல்லது நமது அயலாரின் நல்வாழ்வுக்காக என்று நாம் செய்வோ மாகில் (பல துறவிகள் செய்வதுபோல்) இவை சமயத்துக் கடுத்த நற்பணிகளாக மாறும். அவற்றிற்கு கிடைக்கும் சம்பாவனைகளும் உயர்ந்த மதிப்பிற்குரியவைகளுமாயிருக் கும். ஆயிரக்கணக்கான இத்தகைய முயற்சிகள். மனிதன் இவ்வுலகத்திலேயே உயர்ந்தவிதமான வாழ்க்கையை அடை வதற்குத் தகுந்த வழிவகைகளாக அமையும். மறு உலக இன்பத்தை அடைவதற்குரிய ஏணியாக இருக்கும்.