96. பேராசை என்பது என்ன?
அநேக பொருட்களை அடைய நமக்கு மிதமிஞ்சிய ஆசை இருக்கிறது. அவற்றை அடைவதற்குப் பாவமான அல்லது தவறான வழிகளைப் பயன்படுத்தினாலே தவிர அவைகளை அடைய முடியாது என்று தெளிவாகத் தெரிந்தாலும், அவற்றின் மீது அளவுக்கு மீறின ஆசைகொள்வது பேராசை யாகும். இதுவே பொருளாசை என்றும் சொல்லப்படும்,
97. இதனால் உண்டாகும் தீமைகள் யாவை?
திருட்டு, வஞ்சகம். நேர்மையற்றதனம் முதலியன. மேலும் மிதமிஞ்சின இந்த ஆசை மனக்கலக்கத்தை உண்டாக்கி, மனக்குறை, மனவருத்தம் ஆகியவற்றை விளை விக்கிறது, நல்ல காரியங்களில் மனம் செல்லாமல் தடைப் படுகிறது.
98. காய்மகாரம் அல்லது பொறாமை என்றால் என்ன ?
மற்றவர்களுக்கு இருக்கும் நற்குணம், செல்வம், சொத்து சுகம் நமக்கு இல்லையே என்று ஏக்கம் கொண்டு இவை பிறர் இடம் இருக்கிறதே என்று வருந்துவது பொறாமை அல்லது காய்மகாரம் எனப்படும்.
99. பொறாமையால் வரும் கேடுகள் யாவை?
பிறர் மீது பகை, வர்மம், அருவருப்பு கொள்ளல், அவர்களிடத்திலுள்ள நன்மையைக் கெடுத்து. எந்த வழியிலாவது அவர்களுக்குத் தீங்கு செய்யத் தேடுதல், இவை இரண்டும் பொறாமையால் ஏற்படும் கேடுகள். மன வெறுப்பையும் இது உண்டுபண்ணுகிறது.
100. கோபம் என்பது யாது?
நமக்கு விருப்பமில்லாத ஒரு ஆள் அல்லது பொருள் அல்லது இடம்பற்றி நமது மனதில் எழுப்பும் எரிச்சலான உணர்ச்சியே கோபம் எனப்படும். இந்த உணர்ச்சியினால் நமக்குப் பிரிய மற்ற பொருட்களைத்தாக்கி, நஷ்டப்படுத்த வும், நாசம் செய்யவும் விரும்புகிறோம்.
101. கோபத்தால் ஏற்படும் தீயகுணங்கள் யாவை?
சண்டை , சச்சரவு, குரோதம், கொடுமை, கொலை செய் தல்கூட சில சமயங்களில் நேரிடலாம். பகை, பழி, அவதூறு மூர்க்கத்தனம் ஆகியவைகளும் கோபத்தால் உண்டா கின்றன.
102. மோகம் என்றால் என்ன?
சிற்றின்பத்தின் மீதுள்ள (உடலின்பம் மிருகத்தன மான ஆசை மோகம் எனப்படும் உடல் இன்பத்தை அனுபவிக்கத்தகாத நிலையில் இருக்கும் போது கூட, அதை சுகிக்க இந்த ஆசை நம்மைத் தூண்டுகிறது
103. இதனால் விளையும் கேடுகள் யாவை?
கற்பென்னும் பரிசுத்த புண்ணியத்துக்கு விரோத மான கெட்ட எண்ணங்கள். நினைவுகள். கற்பனைகள் தனித்து அல்லது பிறருடன் செய்யும் அருவருக்கத்தக்க கிரிகைகளுமாம். பிறர் அதே பாவத்தைச் செய்யவும், அதனால் அவர்களுக்கும், நமக்கும் உடலிலும், ஆன்மாவிலும் தீங்கு உண்டாகக் காரணமாகிறது. புத்தியை மந்தப் படுத்தி, உயர்ந்த மேலான விஷயங்களில் நமக்கு இருக்க வேண்டிய நாட்டத்தை இது கெடுக்கிறது.
104. போசனப்பிரியம் என்றால் என்ன?
உண்பதிலும், குடிப்பதிலும் அளவுக்கு மீறிய இன்பத் தைத் தேடல் போசனப்பிரியம் அல்லது மீதூண் விரும்பல் எனப்படும்.
105. இதனால் ஏற்படும் கெடுதல்கள் யாவை?
அளவுக்கு மீறிய உணவினால், உடல் நலக்குறைவு. மந்தத்தன்மை, சிற்றின்ப உணர்ச்சிகளின் கிளர்ச்சி, முதலி யவை ஏற்படும். மிதமிஞ்சிய குடியால் புத்தி மயங்கி, அறிவை இழந்து. உடல் நலம் கெட்டு, காமம், கோபம், சண்டை முதலிய தீய குணங்களுக்கு உள்ளாகிறோம்.
106. கோபம் என்றால் என்ன?
முயற்சியைக் கண்டு விலகவும். வேலையைக்கண்டு அஞ்சவும், ஒன்றும் செய்யாமல் வீணாக நேரத்தைப் போக்க வும் காரணமுள்ள உடல் அல்லது புத்திக்கடுத்த மந்தக் குணமே சோம்பல் எனப்படும்.
107. இதனால் ஏற்படும் தீங்குகள் யாவை?
கடமையை நிறைவேற்ற ஏதேனும் முயற்சி செய்ய வேண்டியிருந்தால், கடமையை அலட்சியம் செய்யவும், கஷ்டமான அல்லது வருத்தமான யாவையும் நீக்கிவிடவும், இது காரணமாகிறது. சோம்பித் திரிவதால் தீய நினைவு களும், ஆசைகளும் எளிதில் உண்டாகும். போசனப்பிரி யம், காமம் முதலியவற்றிற்குரிய சோதனைகள் மிக எளிதாக உண்டாகும்.