ஆசியாவில் தமக்கு நேரிட்ட துன்பங்களை வெளிப்படுத்தி, அவர்களிடத்தில் தாம் வராததற்குக் காரணஞ் சொல்லுகிறார்.
1. சர்வேசுரனுடைய சித்தத்தினாலே சேசுக்கிறீஸ்துநாதருடைய அப்போஸ்தலனாகிய சின்னப்பனும், சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து நகரத்திலுள்ள சர்வேசுரனுடைய திருச்சபைக்கும், அக்காயா நாடெங்குமுள்ள அர்ச்சிக்கப்பட்ட சமஸ்தருக்கும் எழுதுவதாவது;
2. நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனாலும் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதராலும் வரப்பிரசாதமும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.
3. சர்வேசுரனும் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பிதாவும், இரக்கங்களின் தகப்பனும், சர்வ ஆறுதலின் தெய்வமுமாயிருக்கிறவர் ஸ்துதிக்கப்படுவாராக. (எபே.1:3; 1 இரா. 1:3.)
4. நாங்களே சர்வேசுரனிடத்தில் பெற்றுக்கொள்ளுகிற ஆறுதலைக்கொண்டு எவ்வித இடையூறுகளிலும் அகப்பட்டிருக்கிறவர்களுக்கு நாங்களும் ஆறுதல் வருவிக்கத் திராணியுள்ளவர்களாயிருக்கும்படிக்கு எங்களுக்கு நேரிடும் எல்லாத் துன்பங்களிலும் அவரே எங்களைத் தேற்றிவருகிறார்.
5. அதெப்படியென்றால், கிறீஸ்துநாதருடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல், கிறீஸ்துநாதர்வழியாக எங்களுக்கு ஆறுதலும் பெருகிவருகிறது.
6. நாங்கள் துன்பப்பட்டால் அது உங்களுடைய ஆறுதலுக்காகவும், இரட் சணியத்துக்காகவுந்தான். நாங்கள் ஆறுதலடைந்தால், அதுவும் உங்களு டைய ஆறுதலுக்காகத்தான். நாங்கள் தெம்படைந்தால், அது உங்களுடைய தெம்புக்காகவும் இரட்சணியத்துக் காகவுந்தான். அந்த இரட்சணியமா னது நாங்கள் எவ்வித பாடுகளைப் படுகிறோமோ, அவைகளை நீங்களும் பட்டனுபவிக்கும்படி செய்கிறது.
7. பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளாயிருக்கிறதுபோல, ஆறுதலுக்கும் பங்காளிகளாயிருப்பீர்களென்று நாங் கள் அறிந்திருக்கிறதினாலே, உங்கள் மேல் எங்களுக்கு உறுதியான நம்பிக் கையுண்டாயிருக்கிறது.
8. ஆகையால் சகோதரரே, ஆசியா வில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத் தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனமில்லை. அதேதென்றால் உயிரோ டிருக்கிறதே சலிப்பாகும்படி எங்கள் சக்திக்குமேல் மிதமிஞ்சின விதமாய் நாங்கள் துன்பத்தில் அமிழ்ந்தினோம். (அப். 19:23.)
9. அதனாலே நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற சர்வேசுரன்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கத்தக்கதாக எங்களுக்குள்ளே மரணத்தீர்வை கேட்டாற்போலிருந்தது.
10. அப்படிப்பட்ட பெரிய ஆபத்துகளினின்று அவர் எங்களைத் தப்புவித்தார். இப்பொழுதும் தப்புவிக்கிறார்; இன்னமும் தப்புவிப்பாரென்று அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிறோம்.
11. அநேகரைப்பற்றி எங்களுக்கு (அளிக்கப்பட்ட) உபகாரத்துக்காக அநேகரால் எங்களினிமித்தம் நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்தப்படும் பொருட்டு, நீங்களும் உங்கள் ஜெபங்களால் எங்களுக்கு உதவியாயிருங்கள்.
12. நாங்கள் உலகத்திலும், விசேஷமாய் உங்கள் நடுவிலும் மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடு நடவாமல், சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தால், இருதய நேர்மையோடும், தெய்வீக உண்மையோடும் நடந்தோமென்று எங்கள் மனம் எங்களுக்குச் சொல்லுஞ் சாட்சியமே எங்களுக்குப் பெருமையாயிருக்கின்றது.
13. ஏனெனில் நீங்கள் வாசித்தும் அறிந்துமிருக்கிற காரியங்களையே அன்றி வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை.
14. இவ்விதமாய் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் பெருமையாயிருக் குமாப்போல, நாங்களும் உங்களுக்குப் பெருமையாயிருக்கிறோமென்று நீங் கள் ஒருவாறு அறிந்துகொண்டது போல இன்னமும் முடிவுபரியந்தம் அறிந்து கொள்ளுவீர்களென்று நம்புகிறேன்.
15. இந்த நம்பிக்கையினாலே உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோசனமுண்டாகும்படிக்கு முந்தமுந்த உங்களிடத்திற்கு வரவும்,
16. உங்கள் வழியாய் மக்கேதோனியாவுக்குப்போகவும், மக்கேதோனியாவைவிட்டுத் திரும்பி உங்களிடத்திற்கு வரவும், உங்களாலே யூதேயாவுக்கு வழியனுப்பப்படவும் ஆலோசித்திருந்தேன். (1 கொரி. 16:5.)
17. அப்படி நான் யோசித்தது சிறுபிள்ளைத்தனமாய் யோசித்தேனோ? அல்லது ஒரே வேளையில் ஆம் என்பதும் அல்ல என்பதும் என்னிடத்திலிருக்கத் தக்கதாக நான் யோசிக்கிறதை மாம்ச இச்சையின்படி யோசிக்கிறேனோ?
* 17. கடைசியான இந்த 8 வசனங்களின் கருத்தாவது: நான் உங்களிடத்தில் வருவேனென்று முதல் நிருபத்திலே வார்த்தைப்பாடு கொடுத்திருந்தும், வராததினாலே என்னிடத்தில் ஆமென்றும், இல்லையென்றும் நிலையற்ற மனமுண்டென்று உங்களில் சிலர் என்னைத் தூற்றுகிறார்கள். இது எப்படியிருந்தாலும் நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷம் ஆமென்றும், இல்லையென்றும் இருக்கிறதில்லை. ஏனெனில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எங்களை ஏற்படுத்தின சர்வேசுரன் உண்மையுள்ளவரா யிருக்கிறார். அவருடைய ஏவுதலின்படியே தேவ சுதனாகிய சேசுக்கிறீஸ்துவை உங்களுக்குப் பிரசங்கிக்கும்போது அவரைக்குறித்து ஆமென்றும், இல்லையென்றும், அதாவது: இன்றைக்கு ஒருவிதமாய் நாளைக்கு வேறுவிதமாய் மாற்றிப் போதித்த தில்லை. ஒரே நிலைமையாகவே அவரை உங்களுக்குப் பிரசங்கித்தேன். அவர் தேவ சுதன் ஆனதினாலே சத்திய சுரூபியாயிருக்கிறார். அவரிடத்தில் சர்வேசுரனுடைய வாக்குத் தத்தங்கள் எல்லாம் நிறைவேறின. அவரால் சர்வேசுரனுக்கு ஆமென் அதாவது: தோத்திரமென்று சொல்லுகிறோம். சர்வேசுரனை விசுவசிக்கிறோம். அந்த விசுவாசமே எங்களுக்கு மகிமையும் நித்திய ஜீவியமுமாயிருக்கின்றது. நான் கிறீஸ்துநாதரில் உங்களுக்கு அப்போஸ்தலனாகச் சர்வேசுரனாலே அபிஷேகம் பண்ணப்பட்டதற்கும், உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறதற்கும் இன்னும் வேறொரு அத்தாட்சியுண்டு. அதாவது: என் அப்போஸ்தலப் பட்டத்தின் முத்திரையாக என் இருதயத்தில் இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களைப் பதியப்பண்ணியிருக்கிறார். நான் உங்களிடத்தில் வராமலிருக்கிற தற்குக் காரணம் ஏதென்றால், உங்கள்மேல் எனக்கு உண்டாயிருக்கிற தயவுதான் காரணமென்று சர்வேசுரன் சாட்சியாயிருக்கிறார். அதெப்படியெனில் உங்களிடத்தில் நான் வந்திருந்தால் அதிகம் கண்டிக்கவேண்டியதாயிருந்தது. ஆனால் உங்கள் விசுவாசத்தின்மேல் கொடுங்கோன்மையான இராச்சியபாரம்பண்ண எனக்கு மனதில்லை. விசுவாசத்தில் உங்களுக்குள்ள உறுதியைப்பற்றி உங்கள் சந்தோஷத்துக்கு உதவியாயிருக்க விரும்புகி றேனென்று அர்த்தமாகும் என்றறிக.
18. நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தையில் ஆம், அல்ல என்று இருந்ததில்லை. இதற்கு உண்மையுள்ளவராகிய சர்வேசுரனே (சாட்சி).
19. எங்களாலே (அதாவது) என்னாலும், சில்வான் என்பவராலும், தீமோத்தேயுவினாலும் உங்களுக்குள் பிரசங்கிக்கப்பட்டிருக்கிற தேவகுமாரனாகிய சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் ஆமென்பதும் அல்லவென்பதுமாயிராமல், ஆமென்பதே அவரிடத்திலிருந்தது. (அப். 18:5.)
20. சர்வேசுரன் என்னென்ன வாக்குத்தத்தங்களைச் செய்தாலும் அவையெல்லாம் சேசுநாதரிடத்தில் ஆமென்பதாயிருக்கின்றன. இதனிமித்தமாகவே அவர்பெயராலே சர்வேசுரனுக்கு ஆமென் என்கிறோம். அது நமக்கு மகிமையாகின்றது.
21. உங்களோடு எங்களையும் கிறீஸ்துநாதரிடத்தில் உறுதிப்படுத்து கிறவரும் எங்களை அபிஷேகம்பண்ணி னவரும் சர்வேசுரன்தான்.
22. அவரே எங்களை முத்திரையிட்டு, எங்கள் இருதயங்களில் இஸ்பிரீத்துவின் அச்சாரத்தைக் கொடுத்திருக்கிறார். (எபே. 1:13.)
23. இதுவரையில் நான் கொரிந்துக்கு வராதிருப்பதற்கு உங்கள் பேரிலுள்ள தயவுதான் காரணமென்று என் னுள்ளத்திலே சர்வேசுரனைச் சாட்சி யாக அழைக்கிறேன். ஏனெனில் நாங்கள் உங்கள் விசுவாசத்தின்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களாக அல்ல, ஆனால் நீங்கள் விசுவாசத்திலே நிலைத்திருக் கிறதைப்பற்றி உங்கள் சந்தோஷத்துக்கு உதவியாயிருக்கிறோம்.