சேசுக்கிறீஸ்துநாதருடைய இரத்தத்தால் சகலருடைய பாவங்களும் பரிகரிக்கப்படுகிற தென்பது.
1. ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களால் நாங்கள் கண்டதும் தரிசித்ததும், எங்கள் கைகளால் ஸ்பரிசித்ததுமான ஜீவ வார்த்தையைப்பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2. அந்த ஜீவன் வெளியாக்கப் பட்டது; பிதாவினிடத்திலிருந்து வந்த தும், நமக்குத் தோன்றினதுமாகிய அந்த நித்திய ஜீவனை நாங்கள் கண்டு, அதற் குச் சாட்சிசொல்லி, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
3. நீங்கள் எங்களோடு ஐக்கியமா கத்தக்கதாகவும், நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய சுதனாகிய சேசுக்கிறீஸ்துவோடுங்கூட இருக்கத்தக் கதாகவும், நாங்கள் கண்டதையும் கேட் டதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம்.
4. நீங்கள் மகிழ்ச்சியடையவும், உங்கள் மகிழ்ச்சி பூரணமாயிருக்கவும் வேண்டுமென்று இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். (அரு. 15:11.)
5. நாங்கள் அவரிடத்தில் கேட்டதும் உங்களுக்கு அறிவிக்கிறதுமாகிய விசேஷம் ஏதெனில்: கடவுள் ஒளியாயிருக்கிறார்; அவரிடத்தில் இருள் அற்பமேனும் இல்லை. (அரு. 8:12.)
6. ஆகையால் நாம் அவரோடு ஐக்கியமாயிருக்கிறோமென்று சொல்லியும் இருளில் நடப்போமானால், நாம் பொய்யரேயன்றி, உண்மைப்படி நடப்பவர்களல்ல.
7. அவர் பிரகாசத்தில் இருப்பது போல், நாமும் பிரகாசத்தில் நடப்போமானால், நாம் அந்நியோன்னிய ஐக்கியமுள்ளவர்களாயிருப்பதுமன்றி, அவருடைய குமாரனாகிய சேசுக்கிறீஸ்துவின் இரத்தம் நம்மைச் சகல பாவத்திலும் நின்று சுத்திகரிக்கும்.
8. நம்மிடத்தில் பாவமில்லை என்போமாகில், நம்மையே நாம் மோசம் போக்குகிறோம்; சத்தியமும் நம்மிடத்தி லிராது. (3 அரச. 8:46; பழ. 20:9.)
9. நம்முடைய பாவங்களை நாம் சங்கீர்த்தனம்பண்ணினால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்துச் சகல அக்கிரமத்திலும் நின்று நம்மைப் பரி சுத்தமாக்குவதற்கு அவர் பிரமாணிக் கமும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
10. நாம் பாவஞ்செய்யவில்லை என்போமாகில், நாம் அவரைப் பொய்யராக்குகிறோம். அவருடைய வாக்கியமும் நம்மிடத்திலிராது.
* 10. நாம் பாவஞ் செய்யவில்லை என்போமாகில், அவரைப் பொய்யராக்குகிறோம்; அவருடைய வாக்கியம் நம்மிடத்தில் இராதென்பது எப்படியென்றால், சங்கப்பிரசங்கி ஆகமம் 7-ம் அதி. 21-ம் வசனத்தில்: பாவஞ்செய்யாத நீதிமான் பூமியில் இல்லையென்றும், 3 அரச. 8-ம் அதி. 46-ம் வசனத்தில்: பாவஞ் செய்யாதவன் ஒருவனும் இல்லையென்றும், பழமொழி 20-ம் அதி. 9-ம் வசனத்தில்: என் இருதயம் பரிசுத்தமாய் இருக்கிறதென்றும், பாவமில்லாமல் சுத்தமாய் இருக்கிறேனென்று யார் சொல்லக்கூடுமென்றும், பழமொழி 24-ம் அதி. 16-ம் வசனத்தில்: நீதிமான் ஏழுதரம் விழுகிறானென்றும், இயாகப்பர் நிருபம் 3-ம் அதி. 2-ம் வசனத்தில்: நாம் எல்லோரும் அநேக விஷயங்களில் தவறுகிறோமென்றும் சொல்லியிருக்கிறபடியினாலே: நான் ஒரு பாவமும் செய்யவில்லையென்று சொல்லுகிறவன் சர்வேசுரன் பொய் சொன்னார் என்றாற்போல் ஆயிற்று. அப்படிச் சொல்லுகிறவன் அந்த வேத வாக்கியங்களை அறியாதவனென்று அர்த்தமாகும்.