கலாத்தியர் நூதனமாய் வந்த பொய்ப்போதகர்களுக்குக் காதுகொடுத்ததைப் பற்றி அவர்களைக் கண்டிக்கிறார்.
1. மனிதர்களாலுமல்ல, யாதொரு மனிதன் வழியாயுமல்ல, சேசுக்கிறீஸ்து நாதராலும் அவரை மரித்தோரினின்று உயிர்ப்பித்த பிதாவாகிய சர்வேசுரனாலும் அப்போஸ்தலனாயிருக்கிற சின்னப்பனும்,
* 1. கலாத்தியரை மயக்குவித்த கள்ளப்போதகர்கள், அர்ச். சின்னப்பர் அப்போஸ் தலருடைய சீஷனல்லாதே மெய்யான அப்போஸ்தலன் அல்லவென்றும், அப்போஸ்தலர்கள் போதிப்பதைப்போல சரியாய்ப் போதிக்கிறதில்லையென்றும், அவரைக் குறித்து அவதூறாய்ப் பேசியிருந்தபடியால், அர்ச். சின்னப்பர் இந்த அவதூறான பேச்சை மறுத்து, தாம் சேசுநாதரால் அப்போஸ்தலனாகத் தெரிந்துகொள்ளப்பட்டவரென்றும், அவரிடத்திலேயே சகலமுங் கற்றுக்கொண்டு, மற்ற அப்போஸ்தலர்கள் போதிக்கிறதற்கு யாதொரு விபரீதமுமின்றிப் போதித்து வருவதாகவும் இந்த வசனந் தொடங்கிப் பற்பல இடங்களில் ஒப்பிக்கிறார்.
2. என்னுடனேகூட இருக்கிற சகல சகோதரர்களும் கலாத்திய நாட்டிலுள்ள சபையார்களுக்கு எழுதுவது:
3. பிதாவாகிய சர்வேசுரனாலும் நம் முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து வினாலும் உங்களுக்கு இஷ்டப்பிரசா தமும் சமாதானமும் உண்டாவதாக.
4. அவர் சர்வேசுரனும் நம்முடைய பிதாவுமானவருடைய சித்தத்தின் படிக்குப் பொல்லாத இப்பிரபஞ்சத்தி னின்று நம்மை மீட்டுக்கொள்ளும் படி தம்மைத்தாமே நம்முடைய பாவங் களுக்காக ஒப்புக்கொடுத்தார்.
5. அவருக்கு அநவரதகாலமும் தோத்திரமுண்டாகக்கடவது. ஆமென்.
6. உங்களைக் கிறீஸ்துநாதருடைய இஷ்டப்பிரசாதத்திற்கு அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய்விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு மாறிப் போகிறதைப்பற்றி நான் ஆச்சரியப் படுகிறேன்.
* 6. வேறொரு சுவிசேஷம் யூத ஆசாரத்துக்கடுத்த போதனைகளாம்.
7. ஆகிலும் உங்களைக் கலகப்படுத்திக் கிறீஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிற சிலர் உண்டேயொழிய, வேறே சுவிசேஷமென்பதில்லை.
8. ஆகையால் நாங்கள் உங்களுக் குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல் லாமல், நாங்களாவது பரலோகத்தி னின்று வருகிற தேவதூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவான்.
9. முன்னே நாங்கள் உங்களுக்குச் சொன்னதுபோலவே மறுபடியும் நான் சொல்லுகிறேன்: நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொன்றை யாதொருவன் உங்க ளுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக் கப்பட்டவனாயிருக்கக்கடவான்.
* 8-9. கிறீஸ்தவர்கள் விசுவசிக்கவேண்டிய யாதொரு வேதசத்தியத்தையாவது, அநுசரிக்கவேண்டிய யாதொரு முறைமையையாவது, கத்தோலிக்கத் திருச்சபை அந்தந்தக் காலத்தில் கற்பிப்பது இந்த வசனங்களுக்கு விரோதமல்ல. ஏனெனில், திருச்சபையானது யாதொரு சத்தியத்தை விசுவசிக்கவும், யாதொரு முறைமையை அநுசரிக்கவும் அந்தந்தக்காலத்தில் கற்பிக்கும்போது, அப்போஸ்தலர்கள் போதித்த சுவிசேஷத்தில் அடங்கியிருந்ததும் அதுவரையில் உட்படையாய் விசுவசித்ததுமாகிய சத்தியங்களையும் முறைமைகளையும் அந்தந்தக்காலத்தின் அவசரத்துக்குத்தக்கது விளக்கிக் காண்பித்து, வெளிப்படையாய் விசுவசிக்கக் கற்பிக்கிறதேயொழிய அந்தச் சுவிசேஷத்தை விட்டுவிட்டு, அதற்கு விரோதமான வேறே சுவிசேஷத்தைப் போதிக்கிறதில்லை. இந்தப்பிரகாரமாய் அப்போஸ்தலர்களும் சேசுநாதரும் முதலாய் வேதத்தின் சகல சத்தியங்களையும் முறைமைகளையும் திருச்சபையின் துவக்கமுதல் முழுவதும் வெளிப்படுத்தாமல், அவைகளைப் பிற்பாடு கொஞ்சங்கொஞ்சமாய்ப் போதித்துக் கற்பித்தார்களென்று வேதவாக்கியங்களிலே அறிந்திருக்கிறோம். “அப்படியே, நாம் இன்னும் உங்களுக்குப் போதிக்கவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு. ஆனால் அவைகளை இப்போது தாங்கமாட்டீர்கள்” என்று அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 16-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில் சேசுநாதர் தம்முடைய அப்போஸ்தலர்களுக்குத் திருவுளம்பற்றியிருக்கிறார். அவ்வண்ணமே 1 கொரிந்தியர் 3-ம் அதிகாரம் 2-ம் வசனத்தில், உங்களைக் குழந்தைகளைப்போல் எண்ணி உங்களுக்குப் போஜனத்தையல்ல, பாலையே குடிக்கக் கொடுத்தேன் என்று அர்ச். சின்னப்பர் அந்தச் சபையாருக்குச் சொல்லுகிறார்.
10. இப்போது நான் மனிதர்களுக்கு ஏற்கவோ அல்லது சர்வேசுரனுக்கு ஏற்கவோ இதைப் போதிக்கிறேன்? மனிதர்களுக்குப் பிரியப்படத்தேடுகிறேனோ? நான் இன்னும் மனிதர்களுக்குப் பிரியப்படப் பார்த்தால் கிறீஸ்துவின் ஊழியனாயிருக்க மாட்டேன்.
11. ஆகையால் சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷனுடைய யோசனைப்படி உண்டானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். (1 கொரி. 15:1.)
12. ஏனெனில் சேசுக்கிறீஸ்துநாதர் எனக்கு அதை வெளிப்படுத்தின மூல மாய் அன்றி நான் யாதொரு மனித னிடத்திலிருந்தும் அதைப் பெற்றுக் கொண்டதுமில்லை, கற்றுக்கொண்டது மில்லை. (எபே. 3:3.)
13. நான் ஒருகாலத்தில் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடபடிக்கைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அப்போது நான் சர்வேசுரனுடைய திருச்சபையை மட்டின்றி உபாதித்து அதை நாசமாக்கி, (அப். 22:4; 26:9, 10.)
14. என் ஜனத்தாரில் என் வயதுக்கொத்த அநேகரைப்பார்க்கிலும், யூதமார்க்கத்திலே தேர்ச்சியடைந்தவ னாயிருந்ததுமன்றி என் பிதாக்களு டைய பாரம்பரிய முறைமைகளிலே மிக வும் பக்தி வைராக்கியமுமாயிருந்தேன்.
15. ஆயினும் நான் என் தாய் வயிற்றிலிருக்கும்போதே என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய வரப்பிரசாதத்தால் என்னை அழைத்தவர்,
16. தம்முடைய திருக்குமாரனை நான் புறஜாதியாருக்குப் பிரசங்கிக்கும்பொருட்டு, அவரை எனக்கு வெளிப் படுத்தச் சித்தமானபோது, உடனே நான் மாம்சத்துக்கும் இரத்தத்துக்கும் சம்பந்த மான ஆலோசனைபண்ணாமலும்,
* 16. மாம்சத்துக்கும் இரத்தத்துக்கும் சம்பந்தமான ஆலோசனை பண்ணாமல் என்பதற்கு அர்த்தமேதெனில், முன் பழைய ஏற்பாட்டின் முறைமைகளின்பேரில் தமக்கிருந்த பக்தி வைராக்கியத்தைக் கவனிக்காமலும், எந்த மனுஷனிடத்திலும் ஆலோசனை கேட்காமலும் என்று அர்த்தமாகும்.
17. எனக்கு முன்னே அப்போஸ்தலர்களானவர்களிடத்திலே ஜெருசலே முக்குப் போகாமலும், அரேபியா தேசத் துக்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமாஸ்கு நகரத்துக்குத் திரும்பி வந்தேன்.
* 17. அவர் உடனே அரேபியா தேசத்துக்குப் போனது ஏனென்று அவர் சொல்லுகிறதில்லை. ஆகிலும் அவர் அஞ்ஞானிகளுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தெரிந்து கொள்ளப்பட்டிருந்தபடியால், அந்தப் பரம தொழிலுக்கு ஆயத்தமாக, அர்ச். ஸ்நாபக அருளப்பரும், சேசுநாதரும் தாங்கள் பிரசங்கிக்கப்போகுமுன் இஸ்பிரீத்துசாந்துவினால் வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டுபோகப்பட்டதுபோல், இவரும் அரேபியா ஆரணியத் துக்குக் கூட்டிக்கொண்டு போகப்பட்டாரென்று நினைக்கத்தகும்.
18. பிறகு மூன்று வருஷம் சென்று, இராயப்பரைக் கண்டுகொள்ளும்படி, நான் ஜெருசலேமுக்குப் போய் அவரோடு பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.
* 18. சேசுநாதரிடத்திலே அப்போஸ்தல பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர் அர்ச். இராயப்பரைமாத்திரம் சந்திக்கிறதுக்கு ஜெருசலேமுக்குப் போன காரணமென்ன? அர்ச். இராயப்பர் திருச்சபைக்கெல்லாம் தலைவராயிருப்பதைப் பற்றித்தானென்று சொல்லவேணுமென்றறிக. (அப். 9:27; 22:17.)
19. ஆண்டவருடைய சகோதரனாகிய இயாகப்பரைத்தவிர, அப்போஸ்தலர்களில் வேறொருவரையும் நான் காணவில்லை.
20. நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் பொய்யல்லவென்று இதோ, சர்வேசுரனுக்கு முன்பாகச் சொல்லுகிறேன்.
21. பின்பு சீரியா, சிலிசியா நாட்டுப்புறங்களில் வந்தேன்.
22. யூதேயாவில் கிறீஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.
23. ஆனால் முன்னே நம்மைத் துன் பப்படுத்தினவனே தான் முந்தி நிர்மூலம் பண்ணத்தேடின விசுவாசத்தை இப் போது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டு,
24. என்னைக்குறித்துச் சர்வேசுரனை ஸ்துதித்தார்கள்.