சின்னப்பர் கொரிந்தியரை வாழ்த்தி, அவர்களுடைய போதகர்களைப்பற்றி எழும்பிய விவாதத்தைக் கண்டித்து, உலகமானது மனிதருடைய ஞானத்தால், இரட்சிக்கப்படாமல், சிலுவையால் இரட்சிக்கப்படவேண்டியதாயிருந்ததென்று காண்பிக்கிறார்.
1. சர்வேசுரனுடைய சித்தத்தினாலே சேசுக்கிறீஸ்துநாதருடைய அப்போஸ்தலனாக அழைக்கப்பட்ட சின்னப்பனும், சகோதரனாகிய சொஸ் தேனும்,
2. கொரிந்து நகரத்தில் சேசுக்கிறீஸ்துநாதரில் அர்ச்சிக்கப்பட்டவர்களும், அர்ச்சியசிஷ்டவர்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய சர்வேசுரனுடைய திருச்சபையாருக்கும், தாங்களும் நாமும் இருக்கிற இடமெல்லாம் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின் நாமத்தை மன்றாடுகிறவர்களுமாகிய அனைவருக்கும் (எழுதுவதாவது) :
3. நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனாலும், கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துவினாலும் உங்களுக்கு தேவவரப்பிரசாதமும், சமாதானமும் உண்டாவதாக.
4. உங்களுக்கு சேசுக்கிறீஸ்துநாதர் வழியாய் அளிக்கப்பட்டதேவப்பிரசா தத்தினிமித்தம் உங்கள் பேராலே என் தேவனுக்கு இடையறாத தோத்திரம் பண்ணுகிறேன். (2 கொரி. 8:7, 9)
5-6. ஏனெனில் கிறீஸ்துநாதரைப் பற்றிய சாட்சியம் உங்களுக்குள் ஸ்திரப் படுத்தப்பட்டபடியே, நீங்கள் அவரிடத் தில் எல்லா வாக்கியத்திலும் எல்லா அறிவிலும், இன்னும் மற்றெல்லாவற் றிலும் ஐசுவரியராக்கப்பட்டிருக்கி றீர்கள்.
7. இவ்விதமாக, நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் வெளிப்படுவதற்கு எதிர்பார்த்திருக்கிற உங்களுக்கு எந்த வரப்பிரசாதத்திலும் யாதொரு குறைவுமில்லை. (லூக். 17:30; தீத்து. 2:17)
8. ஆகையால் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் வரும் நாளிலே நீங்கள் குற்றமில்லாதவர்களாயிருக்கும் படி அவரே உங்களைக் கடைசிமட்டும் ஸ்திரப்படுத்துவார். (1 தெச. 5:23.)
9. சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ள வர். அவர் மூலமாகவே தம்முடைய குமா ரனும், நம்முடைய கர்த்தருமாகிய சேசுக் கிறீஸ்துவின் ஐக்கியத்துக்கு அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். (1 தெச. 5:24.)
10. சகோதரரே, உங்களுக்குள்ளே பிரிவினைகளில்லாமல், நீங்களனைவரும் ஒரே காரியத்தைப் பேசவும், ஒரே மன மும் ஒரே அபிப்பிராயமுமுள்ள உத்தம ராயிருக்கவும் வேண்டுமென்று நம்மு டைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து வின் நாமத்தினாலே நான் உங்களை மன்றாடுகிறேன். (பிலிப். 2:2; 3:16.)
11. ஏனென்றால் என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைப்பற்றி எனக்கு அறிவிக்கப்பட்டது.
12. உங்களில் ஒவ்வொருவரும் நான் சின்னப்பனுக்கு சீஷன், நான் அப்பொல்லோவுக்கு சீஷன், நான் கேபாவுக்கு சீஷன், நான் கிறீஸ்து நாதருக்கு சீஷன் என்று சொல்லுவதால் நான் இப்படிச் சொல்லுகிறேன். (அப். 18:24.)
13. கிறீஸ்துநாதர் பிரிவுபட்டிருக்கிறாரோ? சின்னப்பன் உங்களுக்காகச் சிலுவையில் அறையுண்டானோ? அல்லது சின்னப்பனுடைய நாமத்தினாலே நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்களோ?
14. உங்களுக்குள்ளே கிறீஸ்புவுக்கும், காயிவுக்குமன்றி வேறொருவனுக்கும் நான் ஞானஸ்நானங் கொடாத படியினாலே, (அப். 18:8; 19:29.)
15. என் நாமத்தினால் (உங்களில்) எவனும் ஞானஸ்நானம் பெற்றதாகச் சொல்லக்கூடாததைப்பற்றி நான் சர்வேசுரனுக்குத் தோத்திரஞ் செய்கி றேன். (அப். 18:8.)
16. இன்னமும் ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் ஞானஸ்நானங் கொடுத் திருக்கிறேன். அப்பால் வேறே யாருக்கா னாலும் நான் ஞானஸ்நானங் கொடுத் ததாக எனக்குத் தெரியவில்லை.
17. அதேனென்றால், ஞானஸ்நா னங் கொடுப்பதற்கல்ல, சுவிசேஷத் தைப் பிரசங்கிப்பதற்கே கிறீஸ்துநாதர் என்னை அனுப்பினார். அதுவும் கிறீஸ்து நாதருடைய சிலுவை வீணாய்ப் போ காதபடிக்குச் சாதுரிய வாக்கியமில்லா மல் பிரசங்கிக்க அனுப்பினார். (2 இரா. 1:16; 1 கொரி. 2:1; 2 கொரி. 10:10.)
* 17. சேசுநாதர் தம்முடைய அப்போஸ்தலர்களை உலகமெங்குஞ் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பும்போது, விசுவசிப்பவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கக் கற்பித்தாரே. அப்படியே அர்ச். சின்னப்பரையுஞ் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அப்போஸ்தலராகத் தெரிந்துகொண்டபோது, விசுவசிப்பவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கவும் அவரை அனுப்பினாரென்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் அவரும் மற்ற அப்போஸ்தலர்களும் தாங்களே தங்கள் கையினால் எல்லோருக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவேண்டுமென்று கற்பிக்கப்படவில்லை. தங்களுக்குக் கீழ்ப்பட்ட மற்றக் குருமார்களைக் கொண்டு கொடுத்தாலும் அவர்களே கொடுத்தார்களென்று சொல்லலாம். அப்படியே அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 4-ம் அதி. 1-ம், 2-ம் வசனங்களில் அப்போஸ்தலர்களால் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம் சேசுநாதர்தாமே கொடுத்து வந்ததுபோல் சொல்லியிருக்கிறதைக் காண்க.
18. சிலுவையைப்பற்றிய வாக்கியம் கெட்டுப்போகிறவர்களுக்கே பைத்தியமாயிருக்கிறது; இரட்சணியம் அடை கிறவர்களாகிய நமக்கோ, அது தேவ பலமாயிருக்கிறது. (உரோ. 1:16.)
19. இதனாலல்லோ வேதாகமத்திலே: ஞானிகளுடைய ஞானத்தை அழிப்பேன், விவேகிகளுடைய விவேகத்தை மறுத்துத்தள்ளுவேன். (இசை. 29:14.)
20. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இவ்வுலகத்தை ஆராய்ந்து அறிபவன் எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைக் கடவுள் பைத்தியமாக்க வில்லையோ என்று எழுதப்பட்டிருக் கிறது. (இசை. 33:18; 19:12.)
21. அதெப்படியென்றால், தேவ ஞானத்திற்கேற்ப உலகமானது தன் ஞானத்தைக்கொண்டு சர்வேசுரனை அறிந்துகொள்ளாததினாலே, பைத்திய மான பிரசங்கத்தைக்கொண்டு விசுவசிக் கிறவர்களை இரட்சிக்கும்படி சர்வேசுர னுக்குப் பிரியமாயிற்று. (மத். 11:25.)
* 21. தேவ ஞானத்திற்கேற்க உலகமானது தன் ஞானத்தைக்கொண்டு சர்வேசுரனை அறிவதெப்படி? உரோமர் நிருபம் முதல் அதிகாரத்தின் கடைசியில் சொல்லியிருக்கிறபடியே வானம், பூமி, இவை முதலான படைப்புகளிடத்தில் சர்வேசுரன் தம்முடைய ஞானத்தையும் வல்லப முதலான மற்ற இலட்சணங்களையும் மிகவுந் துலக்கமாய் விளங்கப்பண்ணியிருக்கிறார். அதனாலே அந்தச் சிருஷ்டிப்புகள் சர்வேசுரனை இடைவிடாமல் பிரசங்கித்துக்கொண்டுவரும் புஸ்தகமென்று சொல்லப்படும். இவ்வுலக ஞானிகள் தங்கள் சுபாவ ஞானத்தையும், புத்தி விவேகத்தையுங்கொண்டு அந்தப் புஸ்தகத்திலே வாசிக்கிறாப்போலே படைப்புண்ட வஸ்துகளில் விளங்குகிற சர்வேசுரனுடைய ஞானம் முதலான இலட்சணங்களைக்கண்டு, அந்த இலட்சணங்களையுடைத்தானவர் மெய்யான கடவுளென்று நிச்சயித்து, அவரை ஆராதித்து வரவேண்டியதாயிருந்தது. ஆனால் அவ்விதம் மனிதர் அறிந்துகொள்ளாததினாலே சர்வேசுரன் தம்மை அறிவிக்கும் இந்த வகையைவிட்டு, இனி உலகத்தாருடைய புத்திக்குப் பைத்தியமாகத் தோன்றும் சிலுவையின் பிரசங்கத்தினாலே தம்மை அவர்களுக்கு அறிவிக்கச் சித்தமானாரென்று அர்ச். சின்னப்பர் தெரிவிக்கிறார்.
22. எவ்வாறெனில், யூதர்களும் அற்பு தங்களைக் கேட்கிறார்கள், கிரேக்கரும் ஞானத்தைக் தேடுகிறார்கள். (அரு. 4:48.)
* 22. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் யூதர்கள் நடுவில் சர்வேசுரன் எண்ணிக்கைக்குள்ளடங்காத அற்புதங்களைச் செய்துவந்தபடியால், அந்தப் பழக்கத்தினிமித்தம் யூதர்கள் சுவிசேஷத்தை விசுவசிக்கும்படிக்கு அதை அவர்களுக்குப் பிரசங்கிக்கிறவர்களிடத்தில் அற்புதங்களைக் காண விரும்பினார்கள். அக்காலத்திலிருந்த அஞ்ஞான சாஸ்திரிகளோவென்றால், சாஸ்திர சாதுரியமாய்ப் பேசுவதிலே பழகியிருந்தபடியால், அவர்கள் தங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வருகிறவர்களும் சாஸ்திர சாதுரிய சாமர்த்தியமாகவே பிரசங்கிக்க வேண்டுமென்று விரும்பினார்கள்.
23. நாங்களோ சிலுவையில் அறையுண்ட கிறீஸ்துநாதரைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதர்களுக்கு இடறலும், அஞ்ஞானிகளுக்குப் பைத்தியமுமாயிருக்கிறார்.
24. ஆனாலும் யூதரிலும் கிரேக்கரிலும் அழைக்கப்பட்டவர்களுக்குத் தெய்வ பலமும், தெய்வ ஞானமுமாயிருக்கிற அந்தக் கிறீஸ்துநாதரைப் பிரசங்கிக்கிறோம். (1 கொரி. 1:18.)
25. ஏனெனில் சர்வேசுரனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாய் இருக்கிறது. சர்வேசுரனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத் திலும் அதிகப்பலமாயிருக்கிறது.
26. ஏனெனில் சகோதரரே, நீங்கள் அழைக்கப்பெற்ற அழைப்பைப் பாருங்கள். உங்களுக்குள் மாம்சத்தின் படி ஞானிகளும் அநேகரில்லை, பராக்கிரமரும் அநேகரில்லை. பிரபுக்களும் அநேகரில்லை.
27. ஞானிகளை நாணச்செய்ய சர்வேசுரன் உலகத்தின் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமானவைகளை நாணச்செய்ய சர்வேசுரன் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். (சங். 8:2.)
28. உள்ளவைகளை அழிக்கும்படி சர்வேசுரன் உலகத்தில் இழிவானவைகளையும், நீசமானவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொண்டார்.
29. ஏனெனில் மாம்சமான எவனும் அவருடைய சமுகத்தில் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய் தருளினார்.
30-31. அவர்மூலமாகவே நீங்கள் சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் அழைக்கப்பட்டவர்களா யிருக்கிறீர்கள். (வேதத்தில்) எழுதியிருக்கிறதுபோல மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரிடம் மேன்மை பாராட்டும்படிக்கு இவர் சர்வேசுரனாலே நமக்கு ஞானமும், நீதியும், அர்ச்சிப்பும், இரட்சிப்புமாயிருக்கிறார். (எரே. 23:5; 9:23, 24; 2 கொரி. 10:17; அரு. 17:19.)