தாம் அவர்களிடத்தில் வராததற்குக் காரணத்தைக் காட்டி, விபசாரக்காரனுக்குத் தாம் பொறுத்தல் கொடுப்பதுபோல அவர்களும் பொறுத்தல் கொடுக்கும்படி கற்பிக்கிறார்.
1. நான் துக்கத்திற்கு ஏதுவாக உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு என்னுள்ளத்தில் இவ்விதமாய்த் தீர்மானித்தேன்.
2. ஏனென்றால் நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கம் அடைந்தவனொழிய என்னைச் சந்தோஷப்படுத்தப்போகிறவன் யார்?
3. என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்கு மென்று உங்களெல்லார்பேரிலும் நான் நம்பிக்கையாயிருக்கிறதினாலே, நான் வரும்போது எனக்குச் சந்தோஷம் வருவிக்கவேண்டியவர்களால் துக்கத்துக்குமேல் துக்கப்படாதபடிக்கு இதை நான் உங்களுக்கு எழுதினேன்.
4. அல்லாமலும் நீங்கள் துக்கப் படும்படிக்கு நான் எழுதாமல், உங்கள் பேரில் எனக்குள்ள அன்பின் மிகு தியை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டு மென்றே நான் மிகுந்த வியாகுலத் தோடும், மனக்கிலேசத்தோடும், வெகு கண்ணீர்களோடும் உங்களுக்கு எழுதினேன்.
5. ஆயினும் ஒருவன் துக்கப்படுத்தினானென்றால் என்னை (மாத்திரம்) அல்ல; உங்கள் எல்லோர்பேரிலும் நான் குற்றஞ் சுமத்தாதபடி அவன் ஒருவிதத்தில் உங்களெல்லோரையும் துக்கப்படுத்தினான். (1 கொரி. 5:2.)
* 5. கொரிந்தியருக்குள் ஒருவன் துர்மார்க்கமாய் நடந்ததைப்பற்றி முதல் நிருபம் 5-ம் அதிகாரத்தில் அவர்களுக்கு மிகுந்த கண்டிப்பாய் எழுதியிருந்தார். அதனாலே அவர்கள் வெகு கஸ்தியடைந்து அந்தக் குற்றவாளியைக் கண்டித்து, அவன் திருந்தும்படி செய்தார்கள். ஆகையால் இந்த நிருபத்தில் அர்ச். சின்னப்பர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி: அப்படிப் பட்ட பாவி எனக்குமாத்திரமல்ல, உங்களெல்லோருக்கும் ஒருவிதத்தில் கஸ்தி வருவித்தான். அதனாலே நீங்கள் அவனுடைய குற்றத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இராமல், அவனைக் கண்டித்துத் திருத்தினதினாலே இப்போது என் சமுகத்தில் குற்றமற்றவர்களாயிருக்கிறீர்கள். உங்கள்பேரில் குற்றஞ்சாட்டுகிறதற்கு இடமில்லையென்கிறார் என்றறிக.
6. அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டாயிருக்கிற இந்தத் கண்டனையே போதும்.
7. ஆகையால் அப்படிக்கொத்தவன் ஒருவேளை அதிகமான துக்கத்தில் அமிழ்ந்திப்போகாதபடிக்கு அதற்கு எதிர்மாறாக அவனுக்கு மன்னித்து அவனை விசேஷமாய்த் தேற்றுவீர்களாக.
8. ஆகையால் அவன்மேல் உங்கள் சிநேகத்தை எண்பிக்கும்படியாக உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
9. இன்னமும் நீங்கள் எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று பரீட்சித்தறியும்படியாகவும் இதை உங்களுக்கு எழுதினேன்.
10. எவனுக்கு நீங்கள் ஒரு காரியத்தை மன்னிக்கிறீர்களோ, நானும் மன்னிக்கிறேன். நானும் ஏதாகிலும் மன்னித்திருக்கிறேனாகில், அதை உங்களைப்பற்றிக் கிறீஸ்துநாதருடைய ஆளாக மன்னித்திருக்கிறேன்.
11. சாத்தானுடைய கண்ணியிலே நாம் அகப்படாதபடிக்கு அப்படிச் செய்தேன். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகளல்லவே.
* 11. மேலே சொல்லப்பட்ட பாவிக்கு புத்தி வந்ததினாலே அவன் குற்றத்தை முழுவதும் மன்னித்து அவனுக்கு ஆறுதல் செய்யுங்கள். முந்தின நிருபத்திலே என் மனம் உங்களோடேகூட இருந்து கிறீஸ்துநாதருடைய நாமத்தினாலே அவனைச் சபித்து, சாத்தானுக்கு ஒப்பித்ததுபோல இப்பொழுதும் நீங்கள் அவனுக்கு மன்னிக்கும்போது என் மனம் உங்களோடேகூட இருந்து உங்களைப்பற்றிக் கிறீஸ்துநாதருடைய நாமத்தினாலே அவனுக்கு மன்னிக்கிறேன். அதிகக் கண்டிப்பினாலே சாத்தானுக்கு இடங்கொடுக்கவேண்டாம். சாத்தானுடைய கருத்து இன்னதென்று அறிவோம். எப்படியென்றால் அதிகக் கண்டிப்பு செய்வது அதிக நன்மையென்றாற்போல் காண்பித்து அப்படிச் செய்ய நம்மை ஏவிவிட்டு அந்த ஆத்துமம் அவநம்பிக்கையினால் கெட்டு, வேதத்தை விட்டுவிடவும் பாவப் பாதாளத்திலே விழவும் வழிதேடுகிறதென்று சொல்லுகிறாரென்றறிக.
12. நான் கிறீஸ்துநாதருடைய சுவிசேஷத்தைப்பற்றித் துரோவாப் பட்ட ணத்தில் வந்தபோது, அதிலே எனக்கு ஆண்டவரால் வாசல் திறந்திருந் தாலும், (அப். 16:8.)
13. அங்கே என் சகோதரனாகிய தீத்துவை நான் காணாததினாலே என் மனம் ஆறுதலடையாமல், அவ்விடத்திலிருந்தவர்களுக்கு மங்களஞ் சொல் லிக்கொண்டு, மக்கேதோனியாவுக்குப் புறப்பட்டு வந்தேன்.
14. கிறீஸ்து சேசுநாதரிடத்தில் எங்க ளுக்கு எப்போதும் ஜெயங் கொடுக்கிற வருமாய் எல்லாவிடத்திலும் தம்மு டைய அறிவின் பரிமளத்தை எங்களா லே பரிமளிக்கப் பண்ணுகிறவரு மாகிய சர்வேசுரனுக்குத் தோத்திரம்.
15. ஏனெனில், நாங்கள் இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளும் சர்வேசுரன் முன்பாக கிறீஸ்துநாதருடைய சுகந்த பரிமளமாயிருக்கிறோம்.
16. இவர்களுக்கு மரணத்துக்கு ஏதுவான மரணவாசமும், அவர்களுக்கோ வெனில், ஜீவியத்துக்கேதுவான ஜீவிய வாசமுமாய் இருக்கிறோம். இப்படிப் பட்ட ஊழியத்துக்கு அவ்வளவு தகுதி யானவன் யார்?
* 2-16. மரண வாசனை. அர்ச். சின்னப்பருடைய போதகமானது தன் சுகந்தவாசனையால், அதாவது, அதைக்கேட்ட நல்லோருடைய புத்தி நியாயத்துக்கு ஒத்திருந்து, மனதைத் திருப்தியாக்கினதால் அவர்கள் ஜீவியத்தையடைவதற்கு ஏதுவாயிருந்தது. ஆனால் சத்தியத்தை ஒப்புக்கொள்ளாமல், தேவ ஏவுதலை மீறி நடந்தவர்களுடைய கல்நெஞ்சத்தனத்தின் நிமித்தம் அது அவர்களுக்கு மரணத்துக்கு ஏதுவானதாயிருந்ததென்க.
17. ஏனெனில், அநேகர் செய்கிறாப் போல நாங்களும் தேவ வாக்கியத்தை மாறுபாடாய்ப் பேசாமல், கிறீஸ்துவி னிடத்தில் நேர்மையாகவும், சர்வேசுர னால் அருளப்பட்ட பிரகாரமும், தேவ சந்நிதானத்திலும் பேசுகிறோம்.