கள்ளப்போதகர் மட்டில் எச்சரிக்கையா யிருக்கும்படி போதிக்கிறார்.
1. மேலும், என் சகோதரரே, ஆண்டவருக்குள் சந்தோஷப் படுங்கள். உங்களுக்கு ஒரே காரியத்தை எழுதிக் கொண்டிருப்பதில் எனக்குச் சலிப்பில்லை. உங்களுக்கோ அது அவசரமா யிருக்கின்றது.
* 1. இந்த வசனத்தில் அர்ச். சின்னப்பர் அவர்களுக்கு அவசியமென்று சொல்லுகிற காரியமென்னவென்றால், 1-ம் அதி. 28-29-ம் வசனங்களில் கண்டிருக்கிறதுபோல, அவர்கள் கள்ளப்போதகர்மேல் எச்சரிக்கையாயிருக்கும்படி தாம் திரும்பத்திரும்பச் சொல்லுவது அவசியம் என்கிறார்.
2. நாய்கள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள், கெட்ட வேலையாட்கள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள், விருத்த சேதனக்காரர்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள்.
* 2. இந்த வசனத்தில் சொல்லப்பட்ட நாய்களும், கெட்ட வேலையாட்களும், விருத்தசேதனக்காரரும் யாரெனில், விருத்தசேதனம் முதலான பழைய ஏற்பாட்டின் ஆசாரங்களை அநுசரிக்கவேண்டுமென்று போதித்துக்கொண்டு ஊருக்கு ஊர் திரிந்து, அர்ச். சின்னப்பர் ஏற்படுத்தின திருச்சபைகளைக் கலக்கிக்கொண்டுவந்த கள்ளப் போதகர்களாம்.
3. ஏனெனில், மாம்சத்தைப்பற்றி நம்பிக்கை வையாமல், இஸ்பிரீத்துவில் சர்வேசுரனைச் சேவித்து, கிறீஸ்து சேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாங்களே மெய்யான விருத்தசேதனமுள்ளவர்கள்.
* 3. அந்தக் கள்ளப் போதகர்கள் பழைய ஏற்பாட்டில் கற்பிக்கப்பட்டிருந்த சரீர விருத்தசேதனத்தைப் பெறவேண்டுமென்று உங்களுக்குப் போதிக்கிறார்கள். உள்ளிந்திரிய அடக்கமாகிற விருத்தசேதனத்தைப் போதிக்கிறதில்லை. கிறீஸ்துவர்களாயிருக்கிற நாமே மெய்யான விருத்தசேதனம் உள்ளவர்களாய் இருக்கிறோம். எங்கள் விருத்தசேதனம் மாம்சத்தில் மாத்திரம் செய்யப்படுகிற விருத்தசேதனமாயிராமல், சரீர இச்சைகளை அடக்கிக் கிறீஸ்தவர்களுக்குரிய இருதய சுத்தமாகிற விருத்தசேதனத்தை அடைந்தவர்களா யிருக்கிறோம் என்கிறார் என்றறிக.
4. ஆகிலும் மாம்சத்தைப்பற்றி நம் பிக்கைகொள்வதற்கு எனக்கு இட மிருக்கலாம். யாதொருவன் மாம்சத்திலே நம்பிக்கை வைக்கிறதாகக் காணப்பட்டால் நானும் அதிகமாய் அப்படி நம்பிக்கை வைக்கலாமே.
5. நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன். இஸ்ராயேல் வம் சத்திலும், பெஞ்சமின் கோத்திரத்திலும், பிறந்தவன், எபிரேயரில் பிறந்த எபிரேயன், நியாயப் பிரமாணத்தை அநுசரிப்பதில் நான் பரிசேயன். (அப். 22:2, 3; 23:6.)
* 5. எட்டாம் நாள் விருத்தசேதனம் அடைந்தவன், என்பதால் தாம் யூதனாகப் பிறந்தவரென்றும், அஞ்ஞானத்திலிருந்து யூதனானவரல்லவென்றும் காட்டுகிறார்.
6. மத வைராக்கியப்படி சர்வேசுரனுடைய திருச்சபையைத் துன்பப்படுத்தி னவன். நியாயப்பிரமாணத்தில் அடங் கிய நீதிக்கொத்தபடி குற்றமின்றி நடந்து வந்தவன். (அப். 26:10.)
7. ஆகிலும், எனக்கு லாபமாயிருந்த இந்தக் காரியங்களைக் கிறீஸ்துநாத ருக்குமுன் நஷ்டமென்று மதித்தேன்.
8. இதுவுமன்றி, என் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவை அறிகிற உன்னதமான அறிவைப்பற்றி நான் எல்லாவற்றையும் நஷ்டமென்று மதிக்கிறேன். அவருக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டு, அவைக ளைக் குப்பையென்றும் எண்ணுகிறேன்.
9. ஏதுக்கோவெனில் நான் கிறீஸ்து நாதரை ஆதாயமாக்கிக்கொள்ளவும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுய நீதியைக்கொண்டிராமல், கிறீஸ்து சேசு வைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிற தும், விசுவாசமூலமாய்ச் சர்வேசுரனால் உண்டாகிறதுமான நீதியை உடைய வனாய்க் கிறீஸ்துநாதருக்குள்ளானவ னாகக் காணப்படவும்,
10. இப்படி நான் அவரையும், அவருடைய உத்தானத்தின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிந்து அவருடைய மரணத்துக்கு ஒத்த சாயலாகி, (உரோ. 6:3-5.)
11. எப்படியாயினும் நான் மரித்தோரினின்று உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படியாகவும் இப்படிச் செய்கிறேன். (உரோ. 8:17.)
12. ஆகிலும் நான் (பலனை)அடைந் தாயிற்று, அல்லது உத்தமனானேன் என்பதல்ல; ஆனால் கிறீஸ்து சேசுநாதர் எதற்காக என்னைக் கைவசப்படுத்தினாரோ அதையே நானும் கைவசப் படுத்தும்படி தொடருகிறேன்.
13. சகோதரரே, நான் அதைக் கை வசப்படுத்திக் கொண்டேனென்று எண் ணவில்லை. ஒரு காரியம் செய்கிறேன்: பின் கடந்துபோனவைகளை மறந்து, முன்னிருக்கிறவைகளை நாடித் தாவி,
14. கிறீஸ்து சேசுநாதரில் சர்வேசுரன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
15. அப்படியே நம்மில் உத்தமரான யாவரும் இந்தச் சிந்தையோடிருக்கக் கடவோம். ஆகிலும், நீங்கள் எதிலாவது வேறுவிதமாய்ச் சிந்தித்தால், அதையும் சர்வேசுரன் உங்களுக்கு வெளிப்படுத்து வார்.
16. ஆகிலும் நாம் ஒரே சிந்தையா யிருக்கும்படி எதுவரையில் தேறினோ மோ, அதே ஒழுங்காக நிலைநிற்போ மாக.
17. சகோதரரே, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, என்னிடத்தில் நீங்கள் கண்ட மாதிரிகைப்படி நடக்கிறவர்களைப் பின்செல்லுங்கள்.
18. ஏனெனில், கிறீஸ்துநாதருடைய சிலுவைக்குப் பகைவராக நடக்கிறவர் கள் அநேகருண்டென்று முன்னே நான் உங்களுக்குப் பலமுறை சொன்னது போல், இப்பொழுதும் அழுகையோடு சொல்லுகிறேன். (உரோ. 16:17.)
19. நாசமே அவர்களுக்குக் கதி: வயிறே அவர்களுக்குத் தெய்வம்: அவர்களுக்கு மகிமை அவர்களுடைய அவமானமே. அவர்கள் இலெளகீக காரியங்களைச் சிந்திக்கிறார்கள்.
20. நமது சிந்தையும் புழக்கமும் பரலோகத்திலிருக்கின்றது. அங்கே யிருந்து நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவென்னும் இரட்சகர் வருவாரென்று எதிர்பார்த்திருக்கிறோம்.
21. அவர் சகலத்தையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு வல்லமையுள்ள தமது செயலின்படியே, தாழ்மை யான நமது சரீரத்தைத் தமது மகிமைப் பிரதாப சரீரத்தின் சாயலாக்கி, மறுரூப மாக்குவார்.