சர்வேசுரனுக்கு நமதுமேலுள்ள சிநேகத்தையும், நாம் பிறர்மேல் வைக்கவேண்டிய சிநேகத்தையும்பற்றிப் போதிக்கிறார்.
1. நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்பட்டு, மெய்யாகவே அவருக்குப் பிள்ளைகளாயிருக்கும்படிக்கு எத்தன்மையான பரம அன்பைப் பிதாவானவர் நமக்குத் தந்தருளினாரென்று பாருங்கள். ஆகையால் உலகம் நம்மை அறியாதிருந்தால், அது அவரையும் அறியாதிருப்பதே அதற்குக் காரணம். (உரோ. 8:15.)
2. மகா அன்பரே, இப்போது நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போ மென்பது இன்னும் நமக்கு வெளிப்படவில்லை. அவர் தோன்றும்போது அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிவோம். ஏனெனில் அவர் இருக்கிறமாதிரியே அவரைத் தரிசிப்போம்.
3. மீளவும் அவர்மேல் இந்த நம்பிக் கை வைத்திருக்கிறவனெவனும், அவர் பரிசுத்தமாயிருக்கிறதுபோல் தன்னை யும் பரிசுத்தமாக்கிக்கொள்ளுகிறான்.
4. பாவத்தைச் செய்கிற எவனும் அநீதத்தைச் செய்கிறான். ஏனெனில் பாவம் அநீதமாம்.
5. அவர் நம்முடைய பாவங்களைப் போக்க வந்தவரென்றும், அவரிடத்தில் பாவமில்லையென்றும் அறிவீர்கள். (இசை. 53:9; 1 இரா. 2:22.)
6. அவரிடத்தில் நிலைக்கொள்ளு கிற எவனும் பாவத்தைச் செய்யான். ஆனால் பாவத்தைச் செய்கிற எவனும் அவரைக் காணாதவனும், அவரை அறியாதவனுமாயிருக்கிறான்.
7. பிள்ளைகளே, ஒருவனும் உங் களை மயக்கவொட்டாதேயுங்கள். அவர் நீதிபரராயிருப்பதுபோல், நீதியைச் செய்கிறவன் நீதிமானாயிருக்கிறான்.
8. பாவத்தைச் செய்கிறவன் பசாசின் மகனாயிருக்கிறான். ஏனெனில் பசாசானது ஆதிமுதல் பாவஞ்செய்கின்றது. ஆனால் பசாசின் கிரியைகளை அழிக்கவேண்டுமென்றே தேவசுதன் தோன்றினார். (அரு. 8:44.)
9. சர்வேசுரனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்த எவனும் பாவத்தைச் செய்யான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள்ளிருக்கிறது. அவன் சர்வேசுரனுக்குப் பிள்ளையாயிருக்கிறதினாலே பாவஞ்செய்யக்கூடாதவனாயிருக்கிறான்.
* 9. அவருடைய வித்து என்பது தேவ இஷ்டப்பிரசாதம். அதைக் காப்பாற்றி அதன் ஏவுதலின்படி நடக்கிறவன் பாவம் செய்யமாட்டான். அதன் ஏவுதலைப் புறக்கணிக்கிறவனே பாவத்தைச் செய்கிறான்.
10. இதைக்கொண்டே தெய்வ புத்திரரும், பேயின் மக்களும் வெளியாகிறார்கள். நீதிமானல்லாதவனுஞ் சரி, தன் சகோதரனை நேசியாதவனுஞ்சரி, இவர்கள் சர்வேசுரனிடத்திலிருந்து வருகிறவர்கள் அல்ல.
11. எப்படியெனில், ஒருவரொருவரை நேசிக்கவேண்டுமென்பது ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்ட விசேஷமல்லோ. (அரு. 13:34; 15:12.)
12. துர்ச்சனனுக்குப் பிள்ளையாய்த் தன் சகோதரனைக் கொன்ற காயீனைப் போல் இராதேயுங்கள். எதனிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் கெட்டவைகளும், தன் சகோ தரனுடைய கிரியைகள் நீதியுள்ளவை களுமாய் இருந்ததைப்பற்றியல்லோ?
13. என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால், அதைப்பற்றி நீங்கள் அதிசயப்படவேண்டாம்.
14. நாம் சகோதரரைச் சிநேகிக்கிறபடியால் மரணத்தினின்று நீங்கி, ஜீவியத்துக்குட்பட்டிருக்கிறோ மென்று அறிவோம். சிநேகியாதவன் மரணத்தில் நிலைக்கொண்டிருக்கிறான். (லேவி. 19:17; அரு. 2:10.)
15. ஆகையால் தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் கொலைபாதகன். ஆனால் எந்தக் கொலை பாதகனும் தனக்குள் நிலைமையான நித்திய ஜீவியத்தைக் கொண்டிருக்கிறதில்லை என்று அறிவீர்கள்.
16. சர்வேசுரன் நமக்காகத் தம்முயிரைக் கொடுத்ததினால், அவருடைய அன்பு இன்னதென்று அறிந்திருக்கி றோம். ஆதலால் நாமும் சகோதரருக் காக நம்முயிரைக் கொடுக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். (அரு. 15:13.)
17. இவ்வுலக சம்பத்தையுடைய ஒருவன் தன் சகோதரன் இக்கட்டுப்படுகிறதைக் கண்டும், அவனுக்கு (இரங்காமல்) தன்னுள்ளத்தை மூடிக்கொண்டால், தேவசிநேகம் அவனிடத்தில் நிலைப்பதெப்படி? (லூக். 3:11; இயா. 2:15.)
18. என் பிள்ளைகளே, நம்முடைய சிநேகம் வார்த்தையிலும் நாவிலும் இராமல், கிரியையிலும் உண்மையிலும் இருக்கவேண்டியது.
19. இவ்விதமாய் நாம் சத்தியத்துக்குப் பிள்ளைகளென்று அறிந்து, அவருடைய சமுகத்தில் நம்முடைய இருத யங்களைத் தேற்றிக்கொள்ளுவோம்.
20. ஆனால் நம்மிருதயமே நம்மைக் குற்றஞ்சாட்டினால், நம்மிருதயத்திலும் சர்வேசுரன் பெரியவர்; அவர் சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
21. மிகவும் பிரியமானவர்களே, நம்மிருதயம் நமதுமேல் குற்றஞ்சாட்டாதிருந்தால், நாம் சர்வேசுரன்மேல் நம்பிக்கையாயிருப்போம்.
22. அன்றியும் நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவர் சமுகத்துக்கு ஏற்கையானவைகளைச் செய்கிறபடியினாலே, நாம் வேண்டிக் கொள்வதெதுவோ, அதை அவரிடத்தில் பெற்றுக்கொள்வோம். (மத்.21:22.)
23. நாம் அவருடைய சுதனாகிய சேசுக்கிறீஸ்துவின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடியே ஒருவரொருவரைச் சிநேகிப்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. (அரு. 6:29; 17:3.)
24. இதனாலே அவருடைய கற்பனைகளை அநுசரிக்கிறவன் அவரிடத்தில் வசிக்கிறான்; அவரும் அவனிடத்தில் வசிக்கிறார். அவர் நமக்குக் கொடுத்தருளின இஸ்பிரீத்துவினால் அவர் நமக்குள் வசிக்கிறாரென்று அறிவோம். (அரு. 14:23; 15:12.)