அபிரகாமுக்குப் பண்ணப்பட்ட வாக் குத்தத்தங்கள் நியாயப்பிரமாணத்தி னாலேயல்ல, கிறீஸ்துநாதரைப் பற்றும் விசுவாசத்தினாலே வந்ததென்பது.
1. ஓ மதியீனரான கலாத்தியரே, உங்களுக்காகச் சிலுவையிலே அறையுண்ட சேசுக்கிறீஸ்துநாதர் உங்கள் கண்முன்பாகப் பிரத்தியக்ஷ ரூபமாய் காண்பிக்கப்பட்டிருக்க, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களை மயக்கினவன் யார்?
2. நீங்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசத்துக்குக் காதுகொடுத்ததினாலேயோ, எதினாலே இஸ்பிரீத்துவைப் பெற்றுக்கொண்டீர்கள்? இது ஒன்றையே உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்.
3. நீங்கள் இஸ்பிரீத்துவினால் துவக் கியிருக்க, இப்போது மாம்சத்தில் முடிக்கும்படி அவ்வளவு புத்தியீன ரானீர்களோ?
4. இத்தனை பாடுகளையும் வீணாக அநுபவித்தீர்களோ? வீணாகமாத்திர மென்றாலும் போகட்டுமென்றிருக்கலாமே.
* 4. நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபிறகு அஞ்ஞானிகளாலே அநேக கலாபனைகளை யும், துன்பங்களையும், நஷ்டங்களையும், விரோதங்களையும்பட்டு, அதெல்லாம் சேசுநாதரைக்குறித்து மிகுந்த தைரிய பொறுமையோடு சகித்துக்கொண்டுவந்தீர்கள். இப்போ தோ நீங்கள் சேசுநாதரைவிட்டு, மோயீசனுடைய பிரமாணத்தைப் பின்பற்றுவதினால் அந்தப் புண்ணிய பலன்களெல்லாம் உங்களுக்கு வீணாக்கிக்கொள்ளப் பார்க்கிறீர்களோ? அப்படியாகமாட்டாதென்று எண்ணுகிறேன். ஏனெனில் நீங்கள் மறுபடியும் புத்தி தெளிந்து, உங்கள் முந்தின விசுவாசத்தில் திரும்புவீர்களென்று நம்பிக்கையாயிருக்கிறேன் என்கிறார்.
5. உங்களுக்கு இஸ்பிரீத்துவைக் கொடுத்து, உங்கள் மத்தியில் அற்புதங் களை நடத்துகிறவர் அவைகளை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைப்பற்றி யோ, அல்லது விசுவாசத்தைக் கேட்ட தைப்பற்றியோ எதைப்பற்றி நடத்தி வருகிறார்?
6. இதற்கு ஒத்தபடி: அபிரகாம் சர்வேசுரனை விசுவசித்தார்; அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டதென்று எழுதப் பட்டிருக்கிறது. (ஆதி. 15:6; உரோ. 4:3.)
7. ஆகையால் விசுவாசத்தைச் சேர்ந்தவர்கள் எவர்களோ, அவர்களே அபிரகாமின் புத்திரர்களென்று அறிந்து கொள்ளுங்கள்.
8. அன்றியும் சர்வேசுரன் புறஜாதியாரை விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கினாரென்று நியாயப்பிரமாணமானது ஏற்கனவே அறிந்து: உன்னில் சகலமான ஜனங்களும் ஆசீர்வதிக்கப்படுவார்களென்று அபிரகாமுக்கு முன் அறிவித்தது. (ஆதி. 12:3.)
9. ஆகையால் விசுவாசத்தினாலுண்டானவர்கள் விசுவாசியான அபிரகாமுடனேகூட ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
* 8-9. எல்லா ஜாதி ஜனமும் அபிரகாமிடத்தில் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது (ஆதி. 12:3; 18:18.). எல்லா ஜாதி ஜனமும் அபிரகாமுடைய வித்தல்லவே. ஆகையால், விசுவாசத்தினாலே சகல ஜாதி ஜனமும் ஆசீர்வதிக்கப்படுகிறார்களென்று சொல்லவேண்டியது.
10. நியாயப்பிரமாணத்தின் கிரியை களைச் சார்ந்தவர்களோவெனில் சாபத் துக்குள்ளாயிருக்கிறார்கள். ஏனெனில் நியாயப்பிரமாணத்தின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற யாவையும் நிறை வேற்றத்தக்கதாக அவைகளில் நிலைத் திராதவன் சபிக்கப்பட்டவனாயிருக் கிறான் என்று எழுதியிருக்கின்றது. (உபாக. 27:26.)
11. ஆகையால் நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் சர்வேசுரனுடைய சமூகத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாய் இருக்கின்றது. ஏனெனில் நீதிமான் விசுவாசத்தினா லே பிழைக்கிறான். (உரோ. 1:17.)
12. எப்படியெனில் நியாயப்பிரமாணமானது விசுவாசத்தில் ஊன்றினதல்ல; ஆனால் அவைகளைச் செய்கிறவன் அவைகளால் பிழைப்பான். (லேவி. 18:5.)
13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவனென்று எழுதியிருக்கிறதுக்கு ஒத்தபடி கிறீஸ்துநாதர் நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமா ணத்தின் சாபத்தினின்று நம்மை இரட்சித்தார். (உபாக. 21:23.)
14. அபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் கிறீஸ்து சேசுநாதர் மூல மாகப் புறஜாதியாருக்கும் உண்டாகும் படியாகவும், வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட இஸ்பிரீத்துசாந்துவானவரை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள் ளும்படியாகவும் இவ்விதமாயிற்று.
15. சகோதரரே, மனுஷனுக்கடுத்தபடி பேசுகிறேன். ஒரு உடன்படிக்கை ஒரு மனிதனுடையதானாலும் உறுதிப் படுத்தப்பட்டதானால், அதை ஒருவ னும் புறக்கணிக்கிறதுமில்லை, அத் தோடே ஒன்றையுங் கூட்டுகிறது மில்லை. (எபி. 9:17.)
16. அபிரகாமுக்கும் அவனுடைய வித்துக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன. அநேகரைக் குறித்தாற் போல, வித்துகளுக்கு, என்று சொல் லாமல், ஒருவரைக் குறித்தாற்போல, உன் வித்துக்கு, என்கிறார். அந்த வித்து கிறீஸ்துநாதர்தான்.
17. ஆதலால் நான் சொல்லுகிறதாவது: சர்வேசுரனாலே உறுதிபண்ணப்பட்ட அந்த உடன்படிக்கையை நானூற்று முப்பது வருஷத்துக்குப் பிறகு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி வாக்குத்தத்தத்தை வீணாக்கமாட்டாது.
* 17. அபிரகாம் வாக்குத்தத்தம் பெற்றநாள் துவக்கி யூதர் கானான் தேசத்துக்குப் போனகாலம் வரையில் 645 வருஷமாகிறது. இவ்விடத்திலோ யூதர்கள் எஜிப்து தேசத்தி லிருந்ததுமுதல் கானான் தேசத்தில் குடிபோன காலத்தைக் கணித்து 430 வருஷமென்கிறார்.
18. அல்லாமலும் சுதந்திரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தால் உண்டாயிராது. ஆனால் சர்வேசுரன் அதை அபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின் மூல மாகவே அருளிச்செய்தார்.
19. அப்படியானால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதேன்? வாக்குத் தத்தம் பெற்ற வித்தானது வருந்தனை யும், அது மீறுதலினிமித்தம் ஏற்படுத்தப் பட்டுச் சம்மனசுக்களாலே ஒரு மத்தி யஸ்தன் கையிலே ஒப்புவிக்கப்பட்டது.
* 19. (மீறுதலினிமித்தம்) பயத்தினாலும் மிரட்டுதலினாலும் மனிதர்களைப் பாவத்தில் விழாதபடி செய்வதற்கு வேதப்பிரமாணம் ஏற்பட்டது. அது சர்வேசுரனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தனாயிருந்த மோயீசன் கையில் சம்மனசுக்களால் ஒப்புவிக்கப்பட்டது.
20. மத்தியஸ்தன் ஒருவனுக்கே மத்தியஸ்தனல்ல. சர்வேசுரனோ ஒருவராயிருக்கிறார்.
* 20. சீனாய் மலையின் அடிவாரத்தில் சர்வேசுரன் சம்மனசுக்கள் மூலமாய் மோயீசனை மத்தியஸ்தனாகக்கொண்டு இஸ்ராயேல் ஜனங்களோடு ஓர் உடன்படிக்கைசெய்து, அவர்கள் தம்முடைய கற்பனைகளையும், வேதாசார முறைமைகளையும் அநுசரித்தால், அதற்குச் சம்பாவனையாக உலக நன்மைகளை தாம் அவர்களுக்கு அளிப்பதாக வாக்குத்தத்தம் பண்ணினார். அது சர்வேசுரனுக்கும் அந்த ஜனங்களுக்கும் நடந்த உடன்படிக்கையாகையால் அதற்கு ஓர் மத்தியஸ்தன் வேண்டியதாயிருந்தது. ஆனால் சர்வேசுரன் அபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் சர்வேசுரனுடைய தயவினாலே கொடுக்கப்பட்டதினாலே, மனுஷன் செய்யும் யாதொரு தர்மக்கிருத்தியத்தைப் பார்த்துச் சர்வேசுரன் அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றக் கடமைப்பட்டவருமல்ல, அந்த வாக்குத்தத்தம் மத்தியஸ்தன் மூலமாய்க் கொடுக்கப்பட்டதுமில்லை. (கிராம்போன்.)
21. அப்படியானால் நியாயப்பிரமாணம் சர்வேசுரனுடைய வாக்குத்தத்தத்துக்கு விரோதமோ? அல்லவே. ஏனெனில், ஜீவியத்தைப் பயக்கக்கூடிய நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருந் ததானால், நீதியானது மெய்யாகவே நியாயப்பிரமாணத்தினால் உண்டா யிருந்திருக்குமே.
22. ஆனால் (சர்வேசுரனால்) செய்தருளப்பட்ட வாக்குத்தத்தமானது விசு வசிக்கிறவர்களுக்கு சேசுக்கிறீஸ்துநாத ரைப் பற்றும் விசுவாசத்தினால் தந்தரு ளப்படும்படியாக வேதமானது எல்லா வற்றையும் பாவத்துக்குள் அடக்கினது. (உரோ. 3:9.)
23. எப்படியெனில், விசுவாசம் வருவதற்குமுன்னே வெளிப்படுவதாயிருந்த விசுவாசத்துக்கு (ஆயத்தமாக) நாம் நியாயப் பிரமாணத்திற்குள் அடைக்கப் பட்டவர்களாய்க் காக்கப்பட்டிருந் தோம்.
24. ஆகையால் நாம் விசுவாசத்தி னால் நீதிமான்களாகும்பொருட்டு நியா யப்பிரமாணமானது நம்மைக் கிறீஸ்து நாதரிடத்திற்குக் கூட்டிக்கொண்டு போகிற உபாத்தியாயராயிருந்தது.
25. விசுவாசம் வந்தபிறகோவெனில், நாம் இன்னமும் அந்த உபாத்தியாய ருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறவர்களல்ல.
26. ஏனெனில் நீங்களெல்லாரும் கிறீஸ்நாதரைப் பற்றும் விசுவாசத்தினாலே சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.
27. எப்படியெனில் கிறீஸ்துநாதரிடத் தில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிற நீங்க ளெல்லோரும் கிறீஸ்துநாதரை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். (உரோ. 6:3.)
28. யூதனென்றும், கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீன னென்றுமில்லை. ஆணென்றும் பெண் ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் ஒன்றாயிருக் கிறீர்கள்.
29. நீங்கள் கிறீஸ்துவினுடையவர்களானால், அபிரகாமுடைய வித்தாயும் வாக்குத்தத்தத்தின்படிக்குச் சுதந்திரவாளிகளுமா யிருக்கிறீர்கள்.