கொலோசியர் தமக்காக வேண்டிக்கொள்ளவும், அஞ்ஞானிகளோடு எச்சரிக்கையாயும், விமரிசையாயும் புழங்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டு நிருபத்தை முடிக்கிறார்.
1. எஜமான்களே, உங்களுக்கும் மோட் சத்தில் ஓர் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, உங்கள் ஊழியருக்கு நீதியும், நியாயமுமானதைக் கொடுங்கள்.
2. ஜெபத்தில் நிலைத்திருங்கள். நன்றியறிந்த ஸ்தோத்திரத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள். (லூக்.18:1; 1 தெச. 5:17.)
3. கிறீஸ்துநாதருடைய இரகசியத்தைப் போதிக்கும்படி சர்வேசுரன் எங்க ளுக்கு ஓர் பிரசங்க வாசலைத் திறந் தருளும்படிக்கும், அந்த இரகசியத் தைப்பற்றிக் கட்டுண்டவனாகிய நான்,
4. அதைப் பேசவேண்டிய விதமாய்ப் பேசி, வெளிப்படுத்தும்படிக்கும் எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். (எபே. 6:19.)
5. காலத்தை மீட்டுக்கொண்டு, புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவே கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.
* 5. எபேசியர் நிருபம் 5-ம் அதிகாரம் 16-ம் வசன வியாக்கியானம் காண்க. புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவேகம்:- அஞ்ஞானிகளால் உங்கள் ஆத்துமங் களுக்கு எவ்விதத்திலும் கெடுதல் வராதபடிக்கு அவர்கள் நடுவில் எச்சரிக்கையாய் நடந்து, தருணத்தையும் சமயத்தையும் பார்த்து திறமையான முறையில் அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுங்கள். வேதத்தைக்குறித்து அவர்கள் கேட்கிற கேள்விகளுக்குத் தக்க மறு மொழி சொல்லவும், அதன்பேரில் அவர்கள் சொல்லுகிற தூஷணங்களை திறமையான முறையில் மறுக்கவும், அவனவனுடைய அந்தஸ்துகளுக்குத்தக்கது நடப்பித்துக் கொள்ளவும் வேணுமென்று அர்த்தமாம்.
6. அவனவனுக்கு இன்னவிதமாக மறுமொழி சொல்லவேண்டுமென்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு உங்கள் பேச்சு எப்போதும் இனிதாகவும், (விவேகமாகிய) உப்பின் சாரமுள்ளதாகவும் இருக்கவேண்டியது.
7. என்னைப்பற்றிய காரியங்களையெல்லாம் மிகவும் பிரியமுள்ள சகோதரனும், பிரமாணிக்கமுள்ள ஊழியனும், கர்த்தருக்குள் என் உடன்வேலையாளுமாகிய தீகிக்கு என்பவர் உங்களுக்குத் தெரிவிப்பார்.
* 7. தீகிக்கு என்பவர் கொலோசியருக்கும் எபேசியருக்கும் நிருபத்தைக் கொண்டுபோனவர்.
8. உங்ளைப்பற்றிய சங்கதிகளை அறிந்து, உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவேண்டுமென்றே,
* 8. நீங்கள் உங்கள் விசுவாசத்தைப்பற்றிப் படும் துன்பவேதனைகளில் உங்களுக்கு ஆறுதல் தரும்படி அனுப்பியிருக்கிறேன்.
9. அவரையும் அவரோடு எனக்கு மிகவும் பிரியமுள்ளவரும் உங்களைச் சேர்ந்தவரும் பிரமாணிக்கமுள்ள சகோ தரனுமாகிய ஒநேஸிமூவையும் அனுப்பி யிருக்கிறேன். இவ்விடத்திலுள்ள சங்கதி களையெல்லாம் இவர்கள் உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.
* 9. ஒநேஸிமூ:- கொலோசாப் பட்டணத்தானாகிய பிலோமினிடம் அடிமையாயிருந்து அவரைவிட்டு ஓடிப்போனவன். இவனை அர்ச். சின்னப்பர் காவலில் இருந்தபோது மனந்திருப்பினார்.
10. என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தார்க்கும், பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கு என்பவரும் உங்களுக்கு மங்களஞ் சொல்லுகிறார்கள். இவரைக்குறித்து உங்களுக்கு முன்னே எழுதியிருக்கிறேன்; இவர் உங்களிடத்தில் வந்தால், இவரை ஏற்றுக்கொள்ளுங்கள்.
* 10. அரிஸ்தார்க்:- தெசலோனிக்கேயிலிருந்து அர்ச். சின்னப்பரோடு தன் விருப்பப்படி கட்டாயமின்றி எபேசுக்கும், பிறகு உரோமாபுரிக்கும் வழித்துணையாய்ப் போனவர்.
11. நீதிமான் எனப்படுகிற சேசு உங்களுக்கு மங்களஞ் சொல்லுகிறார். விருத்தசேதனத்தாரில் இவர்கள்மாத்திரம் சர்வேசுரனுடைய இராச்சியத்துக்கடுத் தவைகளில் எனக்கு உதவியாட்களா யிருந்து எனக்கு ஆறுதல் வருவித்தார்கள்.
12. உங்களைச் சேர்ந்தவரும் சேசுக்கிறீஸ்துநாதருடைய ஊழியனுமாகிய எப்பாப்புராஸ் என்பவர் உங்களுக்கு மங்களஞ் சொல்லுகிறார். நீங்கள் சர்வே சுரனுடைய சகல சித்தத்திலும் உத்தம ராகவும், பூரணராகவும் நிலை நிற்கும் படி இவர் எப்போதும் உங்களைப் பற்றிக் கவலையாய் வேண்டிக்கொண்டு வருகிறார்.
13. இவர் உங்கள்பேரிலும், இலவோ திக்கேயாவிலும் இராப்போலியிலும் இருக்கிறவர்கள்பேரிலும் மிகவும் கரிசன முள்ளவரென்பதற்கு நானே சாட்சியாயிருக்கிறேன்.
* 13. இப்பட்டணங்கள் கொலோசா நகருக்கு அருகிலுள்ளவைகளாம்.
14. மிகவும் பிரியமுள்ள வைத்தியனாகிய லூக்காஸும், தேமாவும் உங்களுக்கு மங்களஞ் சொல்லுகிறார்கள். (2 தீமோ. 4:11.)
* 14. லூக்காஸ்:- சுவிசேஷம் எழுதினவர்.
15. இலவோதிக்கேயாவிலிருக்கும் சகோதரர்களுக்கும், நிம்பாவுக்கும், அவர் வீட்டிலிருக்கும் சபையாருக்கும் மங்களஞ் சொல்லுங்கள்.
16. இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு, இலவோதிக்கேயாவிலிருக்கும் சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள். இலவோதிக்கேயாவிலுள்ளவர்களுக்கு நான் எழுதிய காகிதத்தை நீங்களும் வாசித்துக்கொள்ளுங்கள்.
17. பின்னும் அர்க்கிப்பு என்பவரை நோக்கி: நீர் ஆண்டவரிடத்தில் பெற்றுக் கொண்ட ஊழியத்தை நிறைவேற்றும் படி பார்த்துக்கொள்வீராக என்று சொல்லுங்கள். (பிலம். 2.)
18. சின்னப்பனாகிய நான் என் கையொப்பம் வைத்து மங்களஞ் சொல்லுகிறேன். என் விலங்குகளை நினைத்துக் கொள்ளுங்கள். இஷ்டப்பிரசாதம் உங்க ளோடிருப்பதாக. ஆமென்.
* 18. இங்கு விலங்குகள் என்பது சிறையில் விலங்கிடப் பட்டிருப்பதைக் குறிக்கும்.
கொலோசியர் நிருபம் முற்றிற்று.