நித்திய மகிமையின் நம்பிக்கையினாலே இந்தச் சரீரத்தினின்று விடுதலையாகும்படி ஆசித்து, கிறீஸ்துநாதருடைய ஸ்தானாதிபத்தியத்தை நிறைவேற்றுகிறதாகச் சொல்லுகிறார்.
1. இந்த இல்லிடமாகிய நமது மண்வீடு கரைந்து விழுந்தால் மோட்சத்திலே சர்வேசுரனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய மனை நமக்குக் கிடைக்குமென்று அறிவோம்.
2. ஏனெனில் பரலோகத்திலிருக்கிற நமது வீடு நமக்கு மேலுடையாக வேண்டுமென்று ஆசைப்பட்டு இதிலே பெருமூச்செறிகிறோம்.
3. ஆகிலும் நிர்வாணிகளாயிராமல், வஸ்திரந் தரிக்கப்பட்டவர்களாய்க் காணப்பட்டால்தான் இது ஆகும். (காட்சி. 16:15.)
4. இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் இதன் பாரத்தால் வருந்திப் பிரலாபிக்கிறோம். ஏனெனில் இந்தப் போர்வையை உரிந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணத்துக்கு ஏதுவானது ஜீவனால் விழுங்கப்படும்படி மேலே (பரம) போர்வையைத் தரித்துக்கொள்ள ஆசிக்கிறோம்.
5. இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் சர்வேசுரன்தாமே. அவரே தமது இஸ்பிரீத்துவையும் நமக்கு அச்சார மாகத் தந்திருக்கிறார்.
* 1-5. மண் வீடாகிய இந்தச் சரீரத்திலிருக்குந்தனையும் மோட்சத்திலே புதுவீடாகிய அழியாமையையும் நித்திய மகிமையையுங் கொண்டிருக்கிற உத்தான சரீரத்தை உடுத்திக்கொள்ள எல்லோரும் ஆசைப்படுகிறோம். ஆகிலும் எல்லோருக்கும் அந்தப் பாக்கியங் கிடைக்கமாட்டாது. அது யாருக்குக் கிடைக்கும்? மரணத்தருணத்திலே விசுவாசத்தினாலும் இஷ்டப்பிரசாதத்தினாலும் சேசுக்கிறீஸ்துநாதரை ஆடையாகத் தரித்திருக்கிறவர்களுக்கே கிடைக்கும். இதுவே கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்ட வர்கள் தரித்திருக்கவேண்டிய கலியாண வஸ்திரம். அந்த வஸ்திரமில்லாதவன் சர்வேசுரன் சமுகத்திலே நிர்வாணமாயிருக்கிறவன். அப்படிப்பட்டவன் இருளும் பற்கடிப்புமுள்ள நரகமென்கிற சிறைச்சாலையிலே அடைக்கப்படுவான். இந்த இழிவுள்ள சரீரத்தின் பாரத்தால் தவித்து, பெருமூச்சுவிடுகிறோம். ஆகிலும் மரணமானது சுபாவத்துக்குப் பொருந்தாததாயிருக்கிறதினாலே கூடுமாகில் மரணத்தையடையாமல் நித்திய உயிரைத் தரித்துக்கொள்ள எல்லோரும் விரும்புகிறோம். எல்லோராலேயும் ஆசிக்கப்பட்ட அந்த நித்திய ஜீவியத்துக்காகச் சர்வேசுரன் நம்மை உண்டாக்கினார். ஜென்மப்பாவத்தினாலே நாம் அதன் சுதந்திரத்தை இழந்துபோனோமென்றாலும், சேசுநாதர் தம்முடைய மரணத்தினால் அதை நமக்கு மறுபடியும் பெறுவித்தார். நாம் ஞானஸ்நானம் பெறும்போது சர்வேசுரனுடைய பிள்ளைகளுமாய் சேசுநாதரோடேகூட அந்த நித்திய ஜீவியத்திற்கு உடன் சுதந்திரக்காரருமாய்ப் போனதுந்தவிர அந்தச் சுதந்திரத்துக்கு அச்சாரமாக இஸ்பிரீத்து சாந்துவானவர் நமக்குக்கொடுக்கப்பட்டிருக்கிறார் என்றர்த்தமாகும்.
6-7. ஆகையால் எப்பொழுதும் தெம் பாயிருக்கிறோம். நாம் பிரத்தியக்ஷ மாய்த் தரிசித்து நடவாமல், விசுவசித்து நடப்பதினாலே, இந்தச் சரீரத்திலிருக்கு மட்டும், கர்த்தரை விட்டுப் பரதேசிக ளாய்த் திரிகிறோமென்று அறிந்திருந்தும்,
8. தெம்புள்ளவர்களாயிருந்து இந்தத் தேகத்தைவிட்டு அகலவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் ஆசிக்கிறோம்.
9. இதனிமித்தம் நாம் இந்தச் சரீரத்தில் குடியிருந்தாலும், இதைவிட்டு அகன்றாலும் ஆண்டவருக்குப் பிரியப் பட வருந்துகிறோம்.
10. ஏனெனில்அவனவன் செய்த நன்மை தின்மைக்குத் தக்கதுபோல தன் தன் சரீரத்துக்குரியதைப் பெற்றுக்கொள் ளும்படி நாமெல்லோரும் கிறீஸ்துநாத ருடைய நியாயாசனத்திற்கு முன்பாக வெளியாகவேண்டியது. (உரோ. 14:10.)
11. ஆதலால் கர்த்தருக்குப் பயப்படவேண்டுமென்று அறிந்து நாங்கள் மனிதர்களுக்குப் புத்திமதி சொல்லுகிறோம். சர்வேசுரனோ எங்களை நன்றாய் அறிவார். உங்கள் மனச்சாட்சியும் எங் களை நன்றாய் அறிந்திருக்கிறதென்று நம்புகிறேன்.
12. இதனாலே நாங்கள் உங்கள் முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளவில்லை. ஆனால் இருதயத்திலுள்ளதைப்பற்றி மேன்மை பாராட்டக்கூடாமல், வெளித்தோற்றத்தைப் பற்றி மேன்மை பாராட்டுகிறவர்க ளுக்கு எதிரே நீங்கள் எங்களைக்குறித்து மேன்மை பாராட்டும்படிக்கு உங்களுக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.
13. நாங்கள் புத்தி தவறினவர்களென்றால், அது சர்வேசுரனுக்காகத் தான்; நாங்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் அது உங்களுக்காகத்தான்.
* 13. நாங்கள் மதியீனரைப்போலே எங்களைப் புகழ்ந்தாலும் ஆண்டவருடைய தோத்திரத்தைப்பற்றித்தான் அப்படிச் செய்கிறோம். புத்தியுள்ளவர்களாய் எங்களைத் தாழ்த்தினாலும் உங்களைப்பற்றித்தான் அப்படிச் செய்கிறோம். எப்படியெனில், கிறீஸ்தவர்களுக்குரிய தாழ்ச்சியை உங்களுக்குப் படிப்பிக்கிறோம்.
14. கிறீஸ்துநாதருடைய சிநேகம் எங்களை நெருக்கி ஏவுகின்றது. ஏனெனில் ஒருவரே எல்லோருக்காகவும் மரித்தாரென்றால் எல்லோரும் மரித்தார்களென்றும்,
15. கிறீஸ்துநாதர் எல்லோருக்காகவும் மரித்திருக்க, உயிரோடிருக்கிறவர்கள் இனித் தங்களுக்காக அல்ல, தங்களுக்காக மரித்து உயிர்த்தவருக்காக ஜீவிக்கவேண்டியதென்றும் நிச்சயித்திருக்கிறோம்.
16. ஆனதால் இதுமுதல் நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். நாங்கள் கிறீஸ்துநாதரை மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை அப்படி அறியோம்.
17. ஆகையால் ஒருவன் கிறீஸ்துநாதரிடத்தில் இருந்தால் அவன் புதுச் சிருஷ் டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந் துபோயின. இதோ, எல்லாம் புதிதாக் கப்பட்டன. (இசை. 43:19; காட்சி. 21:5.)
* 17. நாம் மரித்தவர்களாயிருக்கையிலே தமக்காக நாம் ஜீவிக்கும்படிக்கு சேசுநாதர் நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தபடியால், அவரிடத்தில் நாம் புது ஜீவியத்தை அடைந்திருக்கிறோமாகில், பழைய மனிதனுக்குரியவைகளெல்லாம் ஒழித்துவிட்டு, இந்தப் புது ஜீவியத்துக்கு யோக்கியமான விதமாய் எல்லாக் காரியங்களிலும் நடக்கக்கடவோம். ஆகையால் இதுமுதல் ஒருவனையும் உறவின் முறையானோ அன்னியனோ, மேன்குலத்தானோ கீழ்குலத்தானோ, ஆஸ்திக்காரனோ தரித்திரனோ என்று மாம்ச சம்பந்தப்படி அவனை அறியாமலுஞ் சிநேகியாமலும், கிறீஸ்துநாதரைப்பற்றி மாத்திரம் அவனை அறியவுஞ் சிநேகிக்கவுங்கடவோம். கிறீஸ்துநாதரைமுதலாய் மாம்சத்துக்குரிய தன்மையாய் அறியாமலுஞ் சிநேகியாமலும், அவரை நம்முடைய ஆண்டவராகவும் இரட்சகராகவும் நித்திய ஜீவியத்தை நமக்குப் பெறுவிக்கிறவராகவும் அவரை அறிந்து சிநேகித்துச் சேவிக்கக்கடவோம்.
18. எல்லாம் சர்வேசுரனிடத்திலிருந்து வருகின்றது. அவரே கிறீஸ்துநாதர் மூலமாய் நம்மைத் தம்மோடு மறு உற வாக்கி, மறு உறவாக்குகிற தொழிலை யும் எங்களுக்கு அளித்தார்.
19. அதெப்படியென்றால் சர்வேசுரன் உலகத்தாருடைய பாவங்களை அவர்கள்பேரில் சாட்டாமல், அவர்களைக் கிறீஸ்துநாதர் வழியாய்த் தம்மோடு மறு உறவாக்கி, அந்த மறு உறவாக்குதலின் வாக்கியத்தை எங்களிடம் ஒப்புவித்தார்.
20. ஆனபடியினாலே சர்வேசுரன் எங்களைக்கொண்டு புத்திசொன்னாற் போல நாங்கள் கிறீஸ்துநாதருடைய ஸ்தானாதிபதிகளாயிருந்து: சர்வேசுரனோடே திரும்பவும் உறவாகுங்கள் என்று கிறீஸ்துநாதருடைய நாமத்தினாலே உங்களை மன்றாடுகிறோம்.
21. அவரிடமாய் நாம் சர்வேசுரனுடைய நீதியாகும்படிக்குச் சர்வேசுரன் பாவமறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
* 21. பாவமாக்கினாரென்பதற்குப் பாவப்பலியாக்கினாரென்பது கருத்து. ஏனெனில் எபிரேய பாஷையில் பாவப்பரிகாரமாக ஒப்புக்கொடுக்கப்படுகிற பலியைப் பாவமென்றுசொல்வது வழக்கமாம்.