சிநேகத்தோடேகூடிய விசுவாசம் உல கத்தை ஜெயிக்கிறதென்றும், சேசுநாதரைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறவர்கள் மூவரென் றும், மரணத்துக்கு ஏதுவான பாவங்களும், ஏதுவாகாத பாவங்களும் உண்டென்றும் சொல்லி, நிருபத்தை முடிக்கிறார்.
1. சேசுநாதரே கிறீஸ்து என்று விசுவசிக்கிற எவனும் சர்வேசுரனால் பிறந்தவனாயிருக்கிறான். அன்றியும் ஜெனிப்பித்தவரைச் சிநேகிக்கிற எவனும் அவரால் பிறந்தவனையும் சிநேகிக்கிறான். (அரு. 8:43; 16:27.)
1. சர்வேசுரனால் பிறந்தவனென்று சொல்லும்போது, நாம் ஞானஸ்நானத்தினால் அடைகிற ஞானப்பிறப்பைக் குறித்துச் சொல்லுகிறார். ஆகையால் சகல விசுவாசிகளும் சர்வேசுரனால் பிறந்தவர்களென்று சொல்லப்படுவார்கள். சர்வேசுரனைச் சிநேகிக்கிறவன் அவருடைய பிள்ளைகளும், தனக்குச் சகோதரருமாகிய பிறரை எப்படிச் சிநேகியாதிருக்கக்கூடும்!
2. நாம் சர்வேசுரனைச் சிநேகித்து, அவருடைய கற்பனைகளை அநுசரிக்கும்போது, சர்வேசுரனுடைய பிள்ளைகளையும் நாம் சிநேகிக்கிறோமென்று அதனால் அறிந்துகொள்ளுகிறோம்.
3. நாம் சர்வேசுரனுடைய கற்பனைகளை அநுசரிப்பதே அவரைச் சிநேகிப்பதாம். அவருடைய கற்பனைகளும் பாரமானவைகளல்ல.
4. சர்வேசுரனால் பிறந்ததெல்லாம் உலகத்தை ஜெயிக்கின்றது; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கின்ற ஜெயமாமே.
5. சேசுநாதரே சர்வேசுரனுடைய குமாரனென்று விசுவசிக்கிறவனே யன்றி, உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? (1 கொரி. 15:57; 1 அரு. 4:15.)
6. சேசுக்கிறீஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும், இரத்தத்தினாலும் வந்த வர். ஜலத்தினால்மாத்திரமல்ல; ஜலத்தி னாலும், இரத்தத்தினாலும் வந்தவர். கிறீஸ்துநாதர் சத்தியமென்று இஸ்பி ரீத்துவானவரே சாட்சி கொடுக்கிறவர்.
7. எப்படியெனில், பரலோகத்திலே சாட்சியங் கொடுக்கிறவர்கள்: பிதா, வார்த்தை, இஸ்பிரீத்துசாந்து ஆகிய மூவர். இம்மூவரும் ஒன்றாயிருக் கிறார்கள். (அரு. 5:32.)
* 6-7. ஜலத்தினாலும், இரத்தத்தினாலும்:- பழைய ஏற்பாட்டிலே யூதர்கள் ஜலத்தையும் இரத்தத்தையுங்கொண்டு தங்கள் பாவங்களுக்குப் பரிகாரச் சடங்குகளை நிறைவேற்றிவந்தார்கள். இவ்வித சடங்குகள் உலக இரட்சகருக்குக் குறிப்பாயிருந்தபடியால், சேசுநாதர்சுவாமி ஸ்நாபக அருளப்பர் கையால் பச்சாத்தாப ஸ்நானம் பெற்று சிலுவையில் தமது உதிரத்தைச் சிந்தி உயிர்விட்டு, தாம்தாமே உலகத்தை இரட்சிக்க அனுப்பப்பட்டவரென்று காட்டினார். இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் சேசுநாதர்சுவாமி ஸ்நானம் பெற்றபோது அவர்பேரில் இறங்க, இவர்தாம் எனது பிரிய குமாரனென்று பிதாவாகிய சர்வேசுரன் திருவுளம்பற்றினார். பூமியிலுள்ள சத்திய திருச்சபையிலோ ஜலத்தால் கொடுக்கப்படுகிற ஞானஸ்நானமும், இரத்தத்தால் குறிக்கப்படுகிற சேசுநாதர்சுவாமியுடைய பாடுகளும், இஸ்பிரீத்துசாந்துவானவர் விசுவாசிகள்மேல் பொழியும் பரம வரங்களும், சேசுநாதர்சுவாமி உலக இரட்சகரென்று எண்பிக்கின்றது. ஆகையால் மோட்சத்தில் அர்ச். திரித்துவமாகிய மூன்றுபேராலும், பூமியில் மூன்று காரியங்களாலும் ஒரே உலக இரட்சகர் சுட்டிக் காட்டப்படுகிறார் என்க.
8. பூலோகத்திலும் சாட்சியங் கொடுக்கிறது: இஸ்பிரீத்து, ஜலம், இரத்தம் ஆகிய மூன்று. இம்மூன்றும் ஒன்றுதான்.
9. நாம் மனுஷருடைய சாட்சியத்தை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் சர்வேசுரனுடைய சாட்சியம் அதிக பெரிதாயிருக்கின்றதே. சர்வேசுரன் தம்முடைய சுதனைப்பற்றிக் கொடுத்த சாட்சியமே அந்தச் சாட்சியம். அது மிகவும் பெரிது.
10. சர்வேசுரனுடைய சுதனை விசுவசிக்கிறவன் சர்வேசுரனுடைய சாட்சியத்தைத் தனக்குள் கொண்டிருக்கிறான். சுதனை விசுவசியாதவனோ, சர்வேசுரன் தம்முடைய சுதனைப்பற்றிக் கொடுத்த சாட்சியத்தை விசுவசியாததினாலே, அவரைப் பொய்யராக்குகிறான். (அரு. 3:36.)
11. சர்வேசுரன் நமக்கு நித்திய ஜீவியத்தைக் கொடுத்தார் என்பதே இந்தச் சாட்சியம். அந்த ஜீவியமோ அவருடைய சுதனில் இருக்கின்றது.
12. சுதனை உடையவன் ஜீவனை உடையவன்: தேவசுதனைக் கொண்டிராதவன் ஜீவனில்லாதவன்.
13. தேவசுதனுடைய நாமத்தை விசுவசிக்கிற நீங்கள் நித்திய ஜீவியத்தைக் கொண்டிருக்கிறீர்களென்று அறியும்படிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். (அரு. 1:12; 20:31.)
14. நாம் அவருடைய சித்தத்தின்படி எதெதைக் கேட்டாலும், நமக்கு அவர் செவிகொடுக்கிறாரென்பதே நமக்கு அவர்மேலுள்ள நம்பிக்கையாகும்.
15. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று அறிந்திருக்கிறோம்; அவரிடத்தில் நாம் கேட்கிற மன்றாட்டுகளை அடைகிறோ மென்றும் அறிந்திருக்கிறோம்.
16. மரணத்தைப் பயக்காத பாவத்தைத் தன் சகோதரன் செய்கிறதாக அறிந்திருக்கிறவன் வேண்டிக்கொள்வானாக. அப்போது மரணத்தைப் பயக்காத பாவத்தைச் செய்கிறவனுக்கு உயிர் கொடுக்கப்படும். மரணத் தைப் பயக்குகிற பாவமுண்டு. அந்தப் பாவத்தைக் குறித்து எவனும் வேண் டிக்கொள்ள நான் சொல்லுகிறதில்லை.
* 16. மரணத்தைப் பயக்குகிற பாவம்: - சேசுநாதர்சுவாமி உலகத்தை இரட்சிக்க வந்த தேவசுதன் அல்லவென்று பிடிவாதமாய்ச் சாதித்த பதிதரைப்பற்றி இவ்விடத்தில் பேசுகிறாரென்று அறியவும்.
17. அக்கிரமமெல்லாம் பாவந்தான். அதில் மரணத்தைப் பயக்குகிற பாவ மும் உண்டு.
18. சர்வேசுரனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். சர்வேசுரனால் பிறந்தவன் தன்னைக் காத்துக்கொள்ளுகிறான். துர்ச்சனன் அவனைத் தொடான்.
19. நாம் சர்வேசுரனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமோ முழுதும் தின்மையில் அமிழ்ந்தியிருக்கிற தென்றும் அறிந்திருக்கிறோம்.
20. சர்வேசுரனுடைய குமாரன் வந்திருக்கிறாரென்றும், நாம் மெய்யான சர்வேசுரனை அறிந்து, அவருடைய மெய்யான சுதனுக்குள் இருக்கும்படிக்கு நமக்கு அறிவைத் தந்தருளினாரென்றும் அறிந்திருக்கிறோம். இவரே மெய்யான சர்வேசுரனும் நித்திய ஜீவியமுமாயிருக்கிறார். (லூக். 24:45.)
21. சிறுபிள்ளைகளே, விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்ளுவீர்களாக. ஆமென்.
அருளப்பர் முதல் நிருபம் முற்றிற்று.