சின்னப்பர் கொரிந்தியருக்குப் பிரசங்கிக்கையில் ஜீவனத்துக்கு வேண்டியதை முதலாய் அவர்களிடத்தில் கேட்கவில்லை என்பதும், சகலரையும் மனந்திருப்பச் சகலருக்கும் சகலமுமானார் என்பதாம்.
1. நான் சுயாதீனனல்லவா? நான் அப்போஸ்தலனல்லவா? நம்முடைய கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துநாதரை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தரிடத்தில் நீங்களே என் வேலைப்பாடல்லவா?
2. மற்றவர்களுக்கு நான் அப்போஸ்தலன் அல்லவென்றாலும், உங்களுக்காகிலும் அப்போஸ்தலனாயிருக்கிறேன். ஏனெனில் ஆண்டவரிடத்தில் நீங்கள் என் அப்போஸ்தலத்துவத்தின் முத்திரையாயிருக்கிறீர்கள்.
3. என்னை வினாவிக் கேட்பவர்களுக்கு நான் சொல்லும் உத்தரவாதம் இதுவே.
4. சாப்பிடவும் பானம் பண்ணவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?
5. மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்த ருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல், சகோதரியாகிய ஒரு மனுஷியைக் கூட கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு அதிகாரமில்லையா?
6. அல்லது இப்படிச் செய்வதற்கு எனக்கும், பர்னபாவுக்கும் மாத்திரமோ உத்தரவில்லை?
* 5-6. மற்ற அப்போஸ்தலரைப்போல எங்களுக்குப் போஜனஞ் சமைத்துக் கொடுக்கச் சகோதரியாகிய ஒரு பெண்பிள்ளையை, அதாவது கிறீஸ்தவளாகிய ஒரு புண்ணியவதியை எங்களோடு அழைத்துக்கொண்டு போகவும், எங்கள் ஜீவனத்திற்கு உங்கள் கையிலே செலவு வாங்கவும் நியாயமுண்டாமே. ஆயினும் கிறீஸ்துவின் சுவிசேஷத்தைத் தடையின்றிப் போதிக்கவும், உங்களுக்குச் செலவு நேரிடாதிருக்கவும் வேண்டுமென்றே இப்படிச் செய்யாதிருந்தோமென்று அர்ச். சின்னப்பர் சொல்லுகிறதாக அர்த்தங்கொள்ளலாமொழிய மற்றப்படியல்லவென்று இந்த அதிகார முழுவதும் வாசித்து ஆராய்ந்த யாவருக்கும் உச்சிப் பகலிலும் தெளிவாய் விளங்கும். இதிலே அர்ச். சின்னப்பர் குறிக்கிற சகோதரிகளாகிய பெண்பிள்ளைகள் யாரெனில், திவ்விய கர்த்தர் தம்முடைய சீஷர்களோடு ஊருக்கு ஊர் போய்ப் பிரசங்கிக்கும்போது, அர்ச் இயாகப்பர், அர்ச். அருளப்பர், யூதா, சிமையோன் என்பவர்களுடைய தாய்மார்களும், வேறே சில புண்ணிய ஸ்திரீகளும் அவர்களோடேகூடச் சென்று, அவர்களுக்குச் சமையல் முதலான பணிவிடைகளைச் செய்துவருவார்களென்று சுவிசேஷத்தின் பற்பல இடங்களில் எழுதியிருக்கிறதல்லவோ? அர்ச். மாற்கு 15-ம் அதிகாரம் 40-41-ம் வசனங்களிலும், அர்ச். லூக்காஸ் 8-ம் அதிகாரம் 23-ம் வசனத்திலும் காண்க. கர்த்தர் பரலோகத்துக்கு எழுந்தருளின பிற்பாடு அப்போஸ்தலர்கள் தூரதேசத்துக்குப் பிரிந்துபோகுமட்டும் மேற்சொன்ன புண்ணிய ஸ்திரீகள் அவர்களுக்கு முன்போல் ஊழியம் பண்ணிக்கொண்டு வந்தார்கள். இவர்களைப்போலொத்த புண்ணிய ஸ்திரீகளைப்பற்றியே அர்ச். சின்னப்பர் பேசுகிறார். இக்காலத்திலேமுதலாய் ஐரோப்பா இராச்சியங்களில் ஆண்பிள்ளைகள் சமையல் செய்வது வழக்கமில்லாததினாலே வயது சென்ற புண்ணிய ஸ்திரீகளே குருமார்களுக்குச் சமையல் செய்து வருகிறார்கள்.
7. எக்காலத்திலாவது சொந்தச் செலவு செய்துகொண்டு பாளையத்திலே சேவிப்பவன் யார்? எவன் திராட் சத்தோட்டத்தை உண்டாக்கி, அதன் கனியைப் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைச் சாப்பிடாதிருப்பான்?
8. இவைகளை நான் மனிதர் முறைமைப்படி சொல்லுகிறேனா? வேதப்பிரமாணமும் இவ்வண்ணமே சொல்லுகிறதில்லையா?
9. போரடிக்கிற மாட்டுக்கு வாயைக் கட்டாதிருப்பாயாக என்று மோயீச னுடைய நியாயப்பிரமாணத்தில் எழுதி யிருக்கிறதே. சர்வேசுரனுக்கு மாடு களின்மேல் கவலையுண்டோ? (உபாக. 25:4; 1 தீமோ. 5:18.)
10. அல்லது உள்ளபடியே இதை நம்மைக் குறித்துச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் பலனடையலாமென் கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டுமென்பதினால், இவைகள் நம் மைப்பற்றியே எழுதப்பட்டிருக்கிறது.
11. நாங்கள் உங்களுக்கு ஞானக் காரியங்களை விதைத்திருக்க, உங்கள் சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமோ? (உரோ. 15:27.)
12. உங்கள் மேல் இந்த அதிகாரத்தை மற்றவர்கள் செலுத்துவார்களானால், நாங்கள் ஏன் அதிகமாய்ச் செலுத்தப்படாது? ஆயினும் கிறீஸ்து நாதருடைய சுவிசேஷத்துக்கு ஓர் தடை யும் வருவிக்காதபடி நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல், எல்லாப் பாடும் படுகிறோம். (1 தெச. 2:6.)
13. கோவில் பணிவிடைக்காரர் கோவிலுக்குரியவைகளில் புசிக்கிறார்க ளென்றும், பீடத்தின் பரிசாரகர் பீடத்தி லுள்ளவைகளில் பங்கடைகிறார்க ளென்றும் அறியீர்களோ? (உபாக. 18:1.)
14. அத்தன்மைபோல, சுவிசேஷத் தைப் பிரசங்கிக்கிறவர்களும் சுவிசேஷத் தினாலே பிழைக்கும்படி ஆண்டவரும் ஏற்பாடு செய்திருக்கிறார். (லூக். 10:7.)
15. அப்படியிருந்தும், அவைகளில் ஒன்றையும் நான் பிரயோகிக்கவில்லை. என் விஷயமாய் இப்படி நடக்க வேண்டுமென்று நான் இதை எழுதவுமில்லை. என் மகிமை எவனாலாகிலும் வியர்த்தமாகிறதைவிட நான் சாகிறது எனக்கு அதிக நலம். (அப். 18:3.)
16. எப்படியெனில் நான் சுவிசேஷத் தைப் பிரசங்கித்தாலும், மகிமை பாராட் டக்கூடாது. அது என்மேல் சுமந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ கேடாம்!
17. இதை நான் மனப்பூர்வமாய்ச் செய்வேனாகில், எனக்குச் சம்பாவனையுண்டு. மனப்பிரியமின்றிச் செய்வேனாகில், இது எனக்கு ஒப்புவிக்கப் பட்ட உக்கிராண வேலையைச் செய்கிறதாகும். (எபே. 3:2-7.)
18. அப்படியானால் எனக்குப் பலனென்ன? நான் சுவிசேஷத்தைப் பிர சங்கிக்கையில் எனக்குள்ள அதிகாரத் தைச் சுவிசேஷத்துக்குக் கேடாகப் பிரயோகிக்காமல், இலவசமாய்ச் சுவி சேஷத்தைப் பிரசங்கிப்பதே எனக்குப் பலன்.
19. ஆகையால் நான் எல்லா மனிதர் மட்டிலும் சுயாதீனனாயிருந்தும், அநே கரை ஆதாயமாக்கிக்கொள்ளும்படி என்னைச் சகலருக்கும் அடிமையாக்கினேன்.
20. அப்படியே யூதரை ஆதாயப் படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலானேன். (அப்.16:3; 21:20-26.)
21. நியாயப்பிரமாணத்துக்குட்பட்ட வர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும் படி (நான் பிரமாணத்துக்குட்படாத வனாயிருந்தும்) பிரமாணத்துக்குட் பட்டவர்களுக்கு நானும் பிரமாணத் துக்குட்பட்டவன் போலானேன். பிர மாணமில்லாதவர்களை ஆதாயப்படுத் தும்படி (நான் நியாயப்பிரமாணமில்லா தவனாகாமல் கிறீஸ்துநாதருடைய பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருந் தாலும்) பிரமாணமில்லாதவர்களுக்கு நானும் பிரமாணமில்லாதவன் போலா னேன். (கலாத். 2:3.)
22. பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனானேன். எல்லோரையும் கரை யேற்றும்படிக்கு எல்லோருக்கும் எல்லா முமானேன். (2 கொரி. 11:29.)
23. சுவிசேஷத்திலே எனக்குப் பங்கு கிடைக்கும்படி சுவிசேஷத்தைப் பற்றியே எல்லாவற்றையும் செய்கிறேன்.
24. பந்தயசாலையிலே ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுகிறார்கள்; ஆகிலும் ஒரு வனே பந்தயத்தைப் பெற்றுக்கொள்ளு கிறான் என்று அறியீர்களோ? நீங்களும் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
25. பந்தயக் களரியிலே மல்லுக்கட்டு கிறவர்கள் எல்லாக் காரியங்களிலும் இச்சையை அடக்குகிறார்கள். அவர்கள் அழிந்துபோகிற முடியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றே அப்படிச் செய்கிறார்கள். நாங்களோ அழியாத முடியைப் பெற்றுக்கொள்ளும்படி பிரயா சப்படுகிறோம். (2 தீமோ. 2:5.)
26. ஆகையால் நான் ஓடுகிறேன், இலக்குத் தெரியாதவன்போலல்ல. நான் போராடுகிறேன், ஆனால் ஆகாயத்தில் சிலம்பம் அடிக்கிறவன்போலல்ல.
27. ஆனால் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபிறகு நானே ஒருவேளை தள்ளுண்டவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தைத் தண்டித்துக் கீழ்ப்படுத்துகிறேன். (உரோ. 8:13; 13:14.)