ஐந்தாம் தூதன் எக்காளம் ஊத, பாதாளக்குழி திறக்கப்பட்டு, விட்டில்கள் புறப்பட்டதும்; ஆறாம் தூதன் எக்காளம் ஊத, மிகுந்த படையோடு நான்கு தூதர் அவிழ்த்துவிடப்பட்டதும் வருமாறு.
1. பின்பு ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்போது வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் பூமியின் மேல் விழுந்ததைக் கண்டேன். அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
* 1. வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் என்பது கெட்டுப்போன சம்மனசுகளையும், வேதத்தில் சிறந்து விளங்கி, பின்பு தவறிக் கெட்டுப்போன போதகர்களையும் குறிக்கிறது என்கலாம்.
2. அவன் பாதாளக்குழியைத் திறந்தான். உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல் அந்தக் குழியி லிருந்து புகை எழும்பிற்று. அந்தக்குழியின் புகையினாலே சூரியனும் ஆகாயமும் இருண்டுபோனது.
3. அந்தக் குழியின் புகையிலிருந்து விட்டில்கள் புறப்பட்டுப் பூமியின் மேல் வந்தன. பூமியிலுள்ள தேள்களுக்கு எவ்வித வல்லமையுண்டோ, அவ்வித வல்லமை அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
4. தங்கள் நெற்றிகளில் சர்வேசுரனுடைய முத்திரையில்லாத மனுஷரை மாத்திரம் அவைகள் சேதப்படுத்தலாமேயொழிய மற்றப்படி பூமியிலுள்ள புல்லையாவது, பச்சையையாவது, மரத்தையாவது ஒன்றையும் சேதப்படுத்தலாகாதென்று அவைகளுக்குக் கட்டளையிடப்பட்டது.
5. அன்றியும் அவர்களைக் கொலை செய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்து மாதம் வரைக்கும் அவர்களை உபாதிப்பதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. அவைகள் செய்யும் உபாதை தேள் கொட்டினால் மனுஷருக்கு உண்டாகும் உபாதைக்கு ஒப்பாயிருந்தது.
6. அந்நாட்களில் மனுஷர்கள் சா வைத் தேடுவார்கள்; ஆயினும் அதைக் காணமாட்டார்கள். சாகவேண்டு மென்று ஆசைப்படுவார்கள். சாவு அவர்களை விட்டோடிப்போம். (இசை. 2;19; ஓசே. 10:8; லூக். 23:30.)
7. அந்த விட்டில்களின் உருவம் யுத்தத்துக்கு ஆயத்தமான குதிரை களைப் போலிருந்தது. அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகள் இருந்தன. அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்களைப் போலிருந்தன. (ஞானா. 16:9; யோவேல். 2:4.)
8. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலவும், அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்களைப் போலவும் இருந்தன.
9. அன்றியும் இருப்புக் கவசங்களைப்போல் மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன. அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்துக்கு ஓடுகிற அநேகங் குதிரை ரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தது.
10. அன்றியும், அவைகள் தேள் களின் வால்களுக்கு ஒப்பான வால்களை யும், அந்த வால்களில் கொடுக்குகளை யும் கொண்டிருந்தன. ஐந்து மாதம் வரையில் மனிதரைச் சேதப்படுத்தும் படி அவைகளுக்கு அதிகாரமிருந்தது.
11. பாதாள தூதன் அவைகளுக்கு இராஜாவாயிருந்தான். அவனுக்கு எபிரேய பாஷையில் அபத்தோன் என்றும், கிரேக்குப் பாஷையில் அப்பொல்லியோன் என்றும், லத்தீன் பாஷையில் எக்ஸ்தெர்மினான்ஸ் (சங்காரம்) என்றும் பெயர்.
12. அப்படியே முதல் கேடு கடந்து போயிற்று. இதற்குப்பின் இன்னும் இரண்டு கேடுகள், இதோ, வருகின்றன.
13. ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்போது தேவ சமுகத்துக்கு முன்பாக இருக்கிற பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலு மிருந்து ஒரு குரல் சத்தம் புறப்படக் கேட்டேன்.
* 13. நான்கு கொம்புகள்:- பழைய ஏற்பாட்டில் மோயீசன் தான் செய்த பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் தெய்வ வல்லபத்துக்கு அடையாளமாகவும், ஜெபத்துக்கும் பலிகளுக்குமுள்ள வல்லமைக்கு அடையாளமாகவும் நான்கு கொம்புகளைச் செய்து வைத்திருந்தார். அர்ச். அருளப்பர் காட்சியில் கண்ட பீடம் அந்தப் பீடத்தின் சாயலாயிருந்தது.
14. அது எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: எபிராத்தென்னும் பெரிய நதியோரத்தில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர் களையும் அவிழ்த்துவிடு என்றது.
15. அப்படியே மனிதர்களில் மூன்றிலொரு பங்கைக் கொல்லவேண்டிய நாழிகைக்கும் நாளுக்கும் மாதத்துக் கும் வருஷத்துக்கும் ஆயத்தமாக்கப் பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள.
16. குதிரைச் சேனைகளாகிய இராணுவங்களின் தொகையோ இருபதினாயிரந்தரம் பதினாயிரமாயிருந்தது. அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.
* 16. இருபதினாயிரந்தரம் பதினாயிரம் என்பது இருபது கோடியாகும்.
17. குதிரைகளையும் அவைகளின் மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்ட விதமாவது: அவர் கள் அக்கினி நிறமும், நீல நிறமும், கந்தக நிறமுமுள்ள மார்க்கவசங்களை அணிந்திருந்தார்கள். குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருந்தன. அவைகளுடைய வாய் களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டது.
* 17. இவ்விடத்தில் கண்டிருக்கிற வர்ணிப்புகளை வார்த்தைக்கு வார்த்தையாக எடுத்து வியாக்கியானம் பண்ணுவது கூடாத காரியமென்று அறியவும். (கிராம்போன்.)
18. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி, புகை, கந்தகமாகிய இம்மூன்று வாதைக ளாலும் மனுஷரில் மூன்றிலொரு பங்கு கொல்லப்பட்டார்கள்.
19. அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளின் வாயிலேயும் வால்களிலேயும் இருக்கின்றது. பாம்புகளுக்கு ஒப்பாயிருந்த அவைகளின் வால்கள் தலைகளை உடையவைகளாயிருந்தன. அவைகளாலே மோசஞ் செய்கின்றன.
20. ஆயினும் அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளும் காணவும் கேட்கவும் நடக்கவும் மாட்டாதவைகளுமான விக்கிரகங்களையும், வணங்காதபடிக் குத் தாங்கள் கையால் செய்த கிரியை களைவிட்டுத் தவம் புரியவுமில்லை; (உபாக. 4:28; சங்.134:15, 17.)
21. தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் பில்லிசூனியங்களையும், தங்கள் காம நடக்கைகளையும், தங்கள் களவுகளையும் விட்டுத் தவம்புரியவுமில்லை.