மனிதருக்குத் தந்திரங்கள் நேரிட்டாலும், தந்திரங்களை ஜெயிக்கத் தேவ உதவி கிடைக்குமென்று போதிக்கிறார்.
1. இப்படியாகையில் சகோதரரே, நீங்கள் அறியாதிருக்கப்படாதென்று நான் விரும்புகிறதேதென்றால்: நம்முடைய பிதாக்கள் எல்லோரும் மேகத்தின் கீழிருந்தார்கள். எல்லோரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். (யாத். 13:21, 22; 14:19-22.)
2. எல்லோரும் மோயீசனிடத்தில் மேகத்திலும், சமுத்திரத்திலும் ஞானஸ்நானஞ் செய்யப்பட்டார்கள்.
3. எல்லோரும் ஒரே ஞானப் போஜனத்தைப் புசித்தார்கள். (யாத். 16:15.)
4. எல்லோரும் ஒரே ஞானப் பானத்தைப் பருகினார்கள். எப்படியெனில் அவர்களோடுகூடச் சென்ற ஞானக் கற்பாறையினின்று (ஊறின ஜலத்தைப்) பானம்பண்ணினார்கள். அந்தக் கற்பாறையோ கிறீஸ்துநாதர்தான். (யாத். 17:6; எண். 20:11.)
* 2-3-4. இவ்வசனங்களில் இஸ்ராயேலர் யாவரும் மேகத்திலும் சமுத்திரத்திலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களென்பதும், எல்லோரும் ஒரே ஞானப் போஜனத்தை உண்டு ஒரே பானத்தைப் பருகினார்களென்பதும் அவர்கள் ஞானவிதமாயும், உருவகமாயும் ஞானஸ்நானம்பெற்று, ஞானப்போஜன பானம் அருந்தினார்களென்று எண்ணத்தகும். ஏனெனில் பகலிலே அவர்களுக்குக் குடை நிழலாகவும், இரவிலே வெளிச்ச ஸ்தம்பமாகவுமிருந்த மேகமானது ஆசாபாசத்தின் உக்கிரமத்தைத் தணித்து, புத்தியின் அந்தகாரத்தை நீக்கி ஞான வெளிச்சந் தருகிற ஞானஸ்நானத்தின் வரப்பிரசாதத்துக்கு அடையாளமாய் இருந்தது. அவர்கள் கடலைக் கடந்து அக்கரை சேர்ந்தார்களே, அந்தக் கடல் ஞானஸ்நானத் தீர்த்தத்துக்கு உருவகமாயிருந்தது. அவர்களுக்கு வானத்திலிருந்து அற்புதமாய் வருஷித்த மன்னா என்னும் போஜனமும், கற்பாறையில் சுரந்த ஜலமும் சேசுநாதருடைய திருச் சரீரமும் இரத்தமுமாகிய தேவநற்கருணைக்கு அடையாளமாயிருந்தது.
5. அப்படியிருந்தும், அவர்களுக்குள்ளே அதிகமான பேர்களிடத்தில் சர்வேசுரன் பிரியப்படவில்லை. ஆதலால் அவர்கள் வனாந்தரத்திலே விழுந்து மடிந்தார்கள். (எண். 14:16.)
6. அவர்கள் இச்சித்ததுபோல நாமும் தகாதவைகளை இச்சியாதபடிக்கு இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாகச் சம்பவித்தன. (சங்.105:14.)
7. ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள் என்று எழுதப்பட்டபடியே அவர்களில் சிலரைப்போல் நீங்களும் விக்கிரக ஆராதனைக்காரராய்ப் போகாதிருங்கள். (யாத். 32:6.)
8. அவர்களிலே சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் செத்துவிழுந்தார்கள். அது போல நாமும் வேசித்தனம்பண்ணா திருப்போமாக. (எண். 25:1-9.)
9. அவர்களிலே சிலர் சோதித்துச் சர்ப்பங்களினாலே மடிந்தார்கள். அது போல நாமும் கிறீஸ்துநாதரைச் சோதி யாதிருப்போமாக. (எண். 21:5, 6.)
10. அவர்களிலே சிலர் முறுமுறுத்து, சங்கரிப்பவனாலே அழிக்கப்பட்டார் கள். அதுபோல நீங்களும் முறுமுறுக்கா திருங்கள். (எண். 11:1; 14:2.)
11. இவைகளெல்லாம் அவர்களுக்குத் திருஷ்டாந்தங்களாகச் சம்பவித்தன. உலகத்தின் முடிவுகாலத்திலிருக்கிற நமக்கு இவைகள் படிப்பினையாக எழுதப்பட்டிருக்கின்றன. (1 இரா. 4:7.)
12. ஆகையால் நிற்கிறதாக எண்ணுகிறவன் விழாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுவானாக.
13. மனுஷசுபாவத்துக்குரிய சோ தனையேயன்றி வேறொன்றும் உங்களுக்கு நேரிடாதிருப்பதாக. சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ளவர்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடார். ஆனால் நீங்கள் சோதனையைத் தாங்கும்படி சோதனையோடு வழியும் பண்ணுவார்.
14. ஆதலால் எனக்கு மிகவும் பிரிய மானவர்களே, விக்கிரக ஆராதனைக்கு விலகியோடுங்கள். (1 அரு. 5:21.)
15. உங்களை விவேகிகளென்று எண்ணிப் பேசுகிறேன். நான் சொல்லு கிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
16. நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத் தின் பாத்திரமானது கிறீஸ்துநாதரு டைய இரத்தத்தை ஐக்கியமாய்ப் பகிர்ந்து உட்கொள்ளுதலல்லவா? நாம் பிட்கிற அப்பமானது கர்த்தருடைய சரீரத்தைப் பகிர்ந்து உட்கொள்ளுத லல்லவா? (மத். 26:27; அப். 2:42.)
* 16. அப்போஸ்தலர்கள் திவ்விய பூசை செய்து, தேவநற்கருணை உண்டாக்கி வந்தார்களென்றும், அந்தத் தேவநற்கருணையில் சேசுநாதருடைய மெய்யான திருச்சரீரமும் திரு இரத்தமும் தேவசுபாவமும் அடங்கியிருக்கிறதென்றும், அதைப் பூசை காண்கிற விசுவாசிகளுக்குப் பரிமாறினார்களென்றும், அந்தத் தேவநற்கருணையை உட்கொள்ளுகிற விசுவாசிகள் சேசுநாதருடைய மெய்யான திருச் சரீரத்தோடும் திரு இரத்தத்தோடும் ஐக்கியப்படுகிறார்களென்றும் இந்த வாக்கியத்தினாலே எவ்வளவோ தெளிவாய்க் காணப்படுகிறது.
17. ஏனெனில் அப்பம் ஒன்றாயிருக்க, அந்த ஒரே அப்பத்தைப் பகிர்ந்து உட் கொள்ளுகிற நாமெல்லோரும் அநேக ராயிருந்தாலும், ஒரே சரீரமாயிருக்கி றோம். (1 கொரி. 12:27; உரோ. 12:5.)
18. மாம்ச சம்பந்தப்படி இஸ்ராயேலரைப் பாருங்கள். பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடு ஐக்கி யப்பட்டவர்களல்லவா? (லேவி. 7:6, 15.)
19. இதனாலே நான் சொல்லுவதென்ன? விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்டதை ஒரு காரியமென்கிறேனோ? அல்லது விக்கிரகந்தான் ஒரு காரியமென்கிறேனோ? (அல்லவே)
20. அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளைச் சர்வேசுரனுக்கல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன். நீங்கள் பேய்களோடே ஐக்கியப்பட எனக்கு மனதில்லை. நீங்கள் ஆண்டவருடைய பாத்திரத்திலும், பேய்களுடைய பாத் திரத்திலும் பானம்பண்ணக் கூடாது. (உபாக. 32:17.)
* 20. 8-ம் அதி. 4-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறதுபோல் விக்கிரகமென்பது ஒன்றுமில்லை என்கிறதினாலே ஒரு பதார்த்தம் விக்கிரகத்துக்குப் படைத்திருந்தாலும் அதுவும் ஒன்றுமில்லை என்று அறிவுடையோர் நிச்சயித்து, அப்படிப்பட்ட பதார்த்தங்களை வித்தியாசம் ஒன்றின்றிப் புசிக்கலாமென்பார்கள். ஆனால் அதிலேதான் 7-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறதுபோல விசுவாசத்தில் பலவீனமுள்ள சிலர் அப்படிப்பட்ட பதார்த்தங்களைப் புசித்தால் பாவமாயிருக்குமென்று எண்ணுகிறதினாலே மனச்சாட்சிக்கு விரோதமாய்ப் புசிப்பதற்கு வழிகாண்பித்ததாகும் என்பதினாலே அறிவுடையோர் முதலாய் அப்படிப்பட்ட பதார்த்தங்களைப் புசிக்கக்கூடாதென்று அறிக.
21. நீங்கள் ஆண்டவருடைய பந்தியிலும், பேய்களுடைய பந்தியிலும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாது.
22. நாம் கர்த்தருக்குக் கோபத்தை எழுப்பலாமா? அவரைவிட நாம் பலவான்களா? எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு. ஆனால் எல்லாம் செய்வது தகுதியன்று. (உபாக. 32:21; 6:12.)
23. எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு. ஆனால் எல்லாம் நல்விர்த்தியை உண்டாக்காது. ( 1 கொரி. 6:12.)
24. அவனவன் தன் சுய பிரயோசனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோசனத்தைத் தேடக்கடவான். (1 கொரி. 10:33; உரோ. 15:2.)
25. மனசாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், கடையில் விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்.
26. பூமியும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையதாமே. (சங். 23:1.)
27. அஞ்ஞானிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, உங்களுக்குப் போகப் பிரியமா னால், மனச்சாட்சியினிமித்தம் ஒன் றையும் விசாரியாமல் உங்களுக்கு முன் வைக்கப்படுகிற எதையும் புசி யுங்கள்.
28. ஆனால் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று யாராகிலும் சொல்லுவானாகில், அப்படி அறிவித்தவனைப்பற்றியும், மனச்சாட்சியைப்பற்றியும் அதைப் புசியாதிருங்கள்.
29. மனசாட்சியைப்பற்றி என்கிறேன். ஆனால் அது உன்னுடைய மனச்சாட்சியைப் பற்றியல்ல, மற்றொருவனுடைய மனச்சாட்சியைப் பற்றியே சொல்லுகிறேன். ஏனெனில் எனக்குள்ளே சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினால் குற்றமாக எண்ணப்படவேண்டியதென்ன?
* 29. உன் மனசாட்சியைப்பற்றியல்ல, இதைச் சாப்பிடக்கூடாதென்று நினைக்கிற பிறனுடைய மனச்சாட்சியைப்பற்றிதான். ஏனெனில், நான் குற்றமின்றி அதைப் புசிக்கக்கூடுமானால் அதை நான் புசிப்பதினாலே அவன் என்பேரில் குற்றமுண்டென்று நினைப்பானாகில் அந்த நினைப்புக்கு நான் இடங்கொடுத்து அதைப் புசிப்பானேன்? நான் போஜனம் பண்ணும்போதெல்லாஞ் சர்வேசுரனுக்குத் தோத்திரமாகப் பண்ணுகிறேன். ஆகையால் நான் சர்வேசுரனுக்குத் தோத்திரஞ் செய்து புசிக்கிற போஜனத்தின் நிமித்தம் நான் விக்கிரகங்களுக்கு ஏதோ சங்கை செய்கிறேனென்று யாராகிலும் நினைக்கும்படி நான் இடங்கொடுப்பானேன் என்றர்த்தமாம்.
30. அன்றியும் நான் நன்றியறிந்த தோத்திரஞ்செய்து புசிக்கிறேனாகில், நன்றியறிதல் செலுத்துகிற காரியத்தைப் பற்றி நான் தூஷணிக்கப்படுவானேன். (உரோ. 14:6; 1 தீமோ. 4:3.)
31. ஆகையால் நீங்கள் சாப்பிட்டாலும், குடித்தாலும், வேறென்னத்தைச் செய்தாலும், எல்லாவற்றையும் சர்வேசுரனுடைய தோத்திரத்துக்காகச் செய்யுங்கள். (கொலோ. 3:17.)
32. யூதருக்கானாலும், அஞ்ஞானிகளுக்கென்கிலும், சர்வேசுரனுடைய திருச்சபைக்கானாலும் நீங்கள் இடறலாயிருக்கவேண்டாம். (உரோ. 14:13.)
33. நானும் எனக்குப் பிரயோசனமானதைத் தேடாமல், அநேகருக்குப் பிரயோசனமானதைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படி எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியப்படுகிறாப் போல (நீங்களும் நடந்து கொள்ளுங்கள்). (1 கொரி. 9:20; 10:24.)