சின்னப்பர் தாம் கொரிந்தியரிடத்தில் ஒன்றும் பெற்றுக்கொள்ளாமல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்த முகாந்தரத்தையும் அவர்களுக்குள் தாம் பட்ட பாடுகளையும் வெளியாக்குகிறார்.
1. என் புத்தியீனத்தைச் சற்றே சகித்துக்கொள்வீர்களேயாகில், நலமாயிருக்குமே. அப்படியே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.
2. நான் உங்களுக்காகத் தேவ வைராக்கியத்தோடு வைராக்கியமாயிருக்கிறேன். ஏனெனில் நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறீஸ்து என்னும் ஏக மணவாளனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்திருக்கிறேன்.
3. ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய உபாய தந்திரத்தால் ஏவாளை வஞ்சித்துக் கெடுத்தது எவ்விதமோ, அவ்விதமே உங்கள் சிந்தைகளுங் கெட்டுக் கிறீஸ்துநாதர்மட்டிலுள்ள நேர்மையான குணத்தினின்று தவறுமோவென்று அஞ்சுகிறேன். (ஆதி. 3:4.)
4. ஏனெனில் ஒருவன் உங்களிடத்திலே வந்து, நாங்கள் பிரசங்கியாத வேறொரு கிறீஸ்துவை உங்களுக்குப் பிரசங்கித்தானாகில், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு இஸ்பிரீத்துவை, அல்லது நீங்கள் கைக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தை (அவனால்) பெற்றுக்கொள்ளுகிறதாயிருந்தால் சரிதானென்று சகித்துக் கொள்வீர்களாக்கும். (கலாத். 1:6.)
5. ஆனால் பெரிய அப்போஸ்தலர்களிலும் நான் யாதொன்றிலும் அற்பமானவன் அல்லவென்று எண்ணுகிறேன்.
6. ஏனெனில் நான் வாக்கிலே தீரனல்லாதிருந்தாலும், அறிவில் அப்படியல்லவே. எல்லா விஷயத்திலும் உங்க ளுக்குள்ளே வெளிப்பட்டவர்களா யிருக்கிறோம்.
7. நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னையே தாழ்த்திக்கொண்டு, சர்வேசுரனுடைய சுவிசேஷத்தை உங்களுக்கு இலவசமாய்ப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
8. உங்களுக்கு ஊழியஞ்செய்யும் படிக்கு மற்றச் சபைகளிடத்திலே செலவு வாங்கி, அவைகளை வறுமையாக்கினேன்.
9. நான் உங்களிடத்திலிருந்து வறு மைப்பட்டபோதும் (உங்களில்) ஒரு வருக்கும் நான் பாரமாயிருந்ததில்லை. மக்கேதோனியாவிலிருந்து வந்த சகோ தரர்கள் எனக்குக் குறைவுபட்டவை களை நிவர்த்திசெய்தார்கள். அப்படியே எவ்விதத்திலும் உங்களுக்குப் பாரமா யிராதபடி எச்சரிக்கையாயிருந்தேன். இன்னமும் எச்சரிக்கையாயிருப்பேன்.
10. அக்காயா நாட்டின் திசைகளிலெங்கும் இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு அகலாதென்று என்னிலுள்ள கிறீஸ்துநாதருடைய சத்தியத்தை முன் னிட்டு சொல்லுகிறேன்.
11. என்னத்தினாலே இப்படிச் சொல் லுகிறேன்? நான் உங்களை நேசியாத தினாலேயோ? சுவாமிக்குத் தெரியும்.
12. அன்றியும் எங்களைப்போலே காணப்படவும், அதிலே தங்களுடைய மகிமையைப் பாராட்டவும் சமயந் தேடுகிறவர்களுக்குச் சமயம் வாய்க் காதபடி தடுப்பதற்காக நான் இப் போது என்ன செய்கிறேனோ, அதை யே இனிமேலும் செய்துவருவேன்.
13. ஏனெனில் அப்படிக்கொத்தவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறீஸ்து நாதருடைய அப்போஸ்தலர்களாக வேஷம் போடுகிறவர்கள்.
14. அதுவும் அதிசயமல்ல. ஏனெனில் சாத்தான் முதலாய்ப் பிரகாசத்தின் தூதனாக வேஷம் போட்டுக் கொள்ளுகிறானே!
15. ஆகையால் அவனுடைய ஊழியர் நீதியின் ஊழியராக வேஷந்தரித்துக்கொண்டால் அது அதிசயமல்லவே. அவர்களுடைய முடிவு அவர்களுடைய செய்கைகளுக்குத் தக்கதாயிருக்கும்.
16. நான் மறுபடியும் சொல்லுகிறேன்: ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம். அப்படி எண்ணினால், கொஞ்சமாகிலும் நான் மேன்மைபாராட்டும்படிக்குப் புத்தியீனனைப்போலேயாகிலும் என்னைச் சகித்துக்கொள்ளுங்கள்.
17. இந்த மேன்மை பாராட்டுகிற விஷயத்திலே நான் பேசுகிறபோது, சர் வேசுரனுக்கேற்றபடி பேசாமல், பைத்தி யம் பிடித்தவனைப்போல் பேசுகிறேன்.
18. அநேகர் மாம்சத்துக்கொத்தபடி மேன்மை பாராட்டுகிறார்களென்றால், நானும் மேன்மை பாராட்டுவேன்.
19. நீங்கள் புத்திமான்களாயிருந்தும், புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்துக்கொள்ளுகிறீர்களே.
20. ஒருவன் உங்களை அடிமையாக்கினாலும், ஒருவன் உங்களை விழுங்கினாலும், ஒருவன் பறித்தாலும் ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்திலே அறைந்தாலும் சகித்துக்கொண்டுவருகிறீர்கள்.
21. இந்த விஷயத்திலே நாங்கள் பலவீனராயிருந்தாற்போல எங்களுக்கு கனவீனமாக இதைச் சொல்லுகிறேன். ஒருவன் எதிலே மகிமை பாராட்டத் துணிகிறானோ, அதிலே நானும் துணி வுள்ளவனாயிருக்கிறேன் என்று புத்தியீனனைப்போல சொல்லுகிறேன்.
* 21. முன்சொல்லிய நிஷ்டூரங்களையெல்லாம் உங்களிடத்தில் நிறைவேற்றிய கள்ளப் போதகர்களை நீங்கள் மேன்மைபாராட்டி அவைகளைச் செய்யாத என்னைத் தாழ்வாய் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படிச் செய்கிறது உங்களுக்கு வெட்கக்கேடல்லவா என்றர்த்தமாம்.
22. அவர்கள் எபிரேயரோ, நானும் எபிரேயன். அவர்கள் இஸ்ராயேலரோ, நானும் இஸ்ராயேலன். அவர்கள் அபிர காமின் சந்ததியாரோ, நானும் அபிரகா மின் சந்ததியான்.
23. அவர்கள் கிறீஸ்துநாதருடைய ஊழியரோ, நானும் பைத்தியனைப் போல பேசவேண்டுமானால், அவர்களி லும் மேலாக (கிறீஸ்துநாதருடைய ஊழி யன்). வேலைகளில் மிச்சமாயும், காவல் களில் மிகுதியாயும், அடிகளில் மட்டுக்கு மிஞ்சியும், மரண ஆபத்துகளில் அடிக்கடி யும் உட்பட்டவன்.
24. யூதர்களால் ஒன்று குறைய நாற்பது அடியாக ஐந்துதரம் அடிபட்டேன். (உபாக. 25:3.)
25. மூன்றுதரம் பிரம்புகளால் அடி பட்டேன். ஒருதரம் கல்லால் எறியப்பட் டேன். மூன்றுதரம் கப்பல் சேதத்தில் அகப்பட்டேன். ஒரு இரவும் ஒரு பகலும் ஆழ்ந்த கடலில் போக்கினேன். (அப். 16:22; 14:18; 27:41.)
26. அடிக்கடி பயணஞ்செய்ததிலே ஆறுகளின் ஆபத்துகளிலும், கள்ளரின் ஆபத்துகளிலும், என் ஜாதி ஜனத்தால் வந்த ஆபத்துகளிலும், அன்னிய ஜனங்க ளால் வந்த ஆபத்துகளிலும், பட்டணங் களில் நேரிட்ட ஆபத்துகளிலும், வனாந் தரத்தில் உண்டான ஆபத்துகளிலும், சமுத்திர ஆபத்துகளிலும், கள்ளச் சகோ தரர்களால் வந்த ஆபத்துகளிலும்,
27. பிரயாசைகளிலும், துன்பங்களி லும், அநேகமுறை, கண் விழிப்பிலும், பசி தாகத்திலும், அநேகமுறை உபவா சங்களிலும், குளிரிலும், நிர்வாணத்தி லும் இருந்தேன்.
28. புறத்திப்பட்ட இவைகளையு மல்லாமல், எல்லாச் சபைகளையும் பற்றிய கவலையானது என்னை அநுதினமும் பீடிக்கின்றது.
29. ஒருவன் பலவீனனானால், நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால், என் மனம் எரிகிறதில்லையோ?
30. நான் மேன்மை பாராட்டவேண் டியதானால், என் பலவீனத்திற்கடுத் தவைகளைப்பற்றி மேன்மை பாராட்டு வேன்.
31. நான் பொய் சொல்லுகிறதில்லை யென்று என்றென்றைக்கும் ஸ்தோத் தரிக்கப்பட்டவராகிய கடவுளும், நம் முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதருடைய பிதாவுமாயிருக்கிறவர் அறிவார்.
32. தமாஸ்கு நகரத்தில் அரெத்தா இராஜாவின் சேனைத்தலைவன் தமாஸ்குப் பட்டணமெங்கும் காவல்களை வைத்து, என்னைப் பிடிக்கப் பார்த்தான். (அப். 9:24, 25.)
33. அப்போது நான் ஒரு கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, இவ்வித மாய் அவன் கைக்குத் தப்பினேன்.