சமுத்திரத்திலிருந்து ஏழு தலையுள்ள ஓர் மிருகம் ஏறிவந்து, தேவதூஷணஞ் சொல்லுகிறது; பூமியினின்று இரண்டு கொம்புள்ள வேறோர் மிருகம் அதற்கு உதவியாக ஏறிவருகின்றது.
1. அப்பொழுது ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் உள்ள ஓர் மிருகம் சமுத்திரத்திலிருந்து ஏறிவரக் கண்டேன். அதன் கொம்புகளின்மேல் தூஷண மான நாமங்களும் இருந்தன.
2. நான் கண்ட மிருகம் வேங்கையைப்போலிருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதன் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தது. பறவை நாகமானது தன் வல்லபத்தையும் மிகுந்த அதிகாரத் தையும் அதற்குக் கொடுத்தது.
3. அதன் தலைகளிலொன்று படு காயம்பட்டிருக்கக் கண்டேன். ஆகிலும் அந்தப் படுகாயம் சொஸ்தமாக்கப் பட்டது. அப்போது பூலோகமெல் லாம் அதிசயித்து, அந்த மிருகத்தைப் பின்பற்றி,
4. அந்த மிருகத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்த பறவைநாகத்தை நமஸ் கரித்தார்கள். அன்றியும்: இந்த மிருகத் துக்கு ஒப்பானவன் யார்? இத்தோடு யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, அந்த மிருகத்தையும் நமஸ்கரித்தார்கள்.
5. பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும்படியான வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது. நாற்பத்திரண்டு மாதமளவும் யுத்தம் பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
6. ஆகையால் அது சர்வேசுரனைத் தூஷணிக்கும்படி வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய கூடாரத்தையும், பரலோகத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் தூஷணித்தது.
7. அர்ச்சியசிஷ்டவர்களோடேகூட யுத்தஞ்செய்யவும் அவர்களை ஜெயிக்கவும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அன்றியும் சகல கோத்திரத் தார்மேலும் ஜனங்கள்மேலும் பாஷைக் காரர்மேலும் ஜாதிகளின் மேலும் அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
8. கொலையுண்ட செம்மறிப்புருவையானவருடைய ஜீவ புஸ்தகத்தில் உலக ஆரம்பமுதல் எவர்களுடைய பெயர்கள் எழுதப்படவில்லையோ, அவர்களெல்லாரும் அதை நமஸ்கரித்தார்கள்.
9. காதுள்ளவனெவனொ, அவன் கேட்கக்கடவான்.
10. சிறைப்படுத்துகிறவன் சிறையாளி யாய்ப் போவான். வாளாலே கொல்லு கிறவன் வாளாலே கொல்லப்பட வேண் டும். இதிலேதான் அர்ச்சியசிஷ்டவர்க ளுடைய பொறுமையும் விசுவாசமும் விளங்குகின்றது. (ஆதி. 9:6; மத். 26:52.)
11. பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து ஏறிவரக்கண்டேன். அது செம்மறிப்புருவையின் கொம்புகளைப் போல் இரு கொம்புகளுடையதாய்ப் பறவை நாகத்தைப்போல் பேசிற்று.
12. அது முந்தின மிருகத்தின் அதிகாரமுழுவதையும் அதன் முன்பாகச் செலுத்தி, படுகாயம் ஆறிக்குணமான முந்தின மிருகத்தைப் பூமியும் அதன் குடிகளும் நமஸ்கரிக்கும்படி செய்தது.
13. அன்றியும் அது மனுஷர் முன்பாக (எவ்வளவு) பெரிய அற்புதங்களைச் செய்ததென்றால், வானத்திலிருந்து அக்கினியைமுதலாய்ப் பூமியின்மேல் இறங்கும்படி செய்தது. (2 தெச. 2:9; மத். 24:24.)
14. அது தனக்குக் கொடுக்கப்பட்ட வல்லமையால் மிருகத்திற்கு முன்பாகச் செய்த அற்புதங்களைக் கொண்டு பூமி யின் குடிகளை மயக்கி, வாளால் காயப் பட்டுப் பிழைத்த அந்த மிருகத்திற்கு ஓர் உருவம் செய்யவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
15. அந்த மிருகத்தின் உருவம் பேச வும், அந்த மிருகத்தின் உருவத்தை நமஸ்கரியாதவர்கள் கொலையுண்ணும் படி செய்யவும், அந்த மிருகத்தின் உருவத்துக்கு உயிர் கொடுக்கும்படி அதற்கு வல்லபங் கொடுக்கப்பட்டது.
16. அது சிறியோர், பெரியோர், தனவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகளாகிய யாவரும் தங்கள் வலது கை யிலாவது, தங்கள் நெற்றிகளிலாவது ஓர் முத்திரையைத் தரித்துக்கொள்ளவும்,
17. அந்த முத்திரையையாவது, மிருகத்தின் நாமத்தையாவது, அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்திருக்கிறவனொழிய வேறொருவனும் விற்கவும், வாங்கவும் கூடாதபடி செய்யும்,
18. இதிலே ஞானம் விளங்கும். அறிவுள்ளவன் அந்த மிருகத்தின் இலக்கத்தைக் கணிக்கக்கடவான். அது ஒரு மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது. அவனுடைய இலக்கம் அறு நூற்றறுபத்தாறு.