கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 13

பாவத்தைச் செய்தவர்கள் தவஞ் செய்யும்படியாகச் சின்னப்பர் கண்டித்துப் புத்திசொல்லுகிறார்.

1. இதோ, மூன்றாந்தரம் உங்களிடத்திற்கு வருகிறேன். சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினால் நிலைவரமாகும். (உபாக. 19:15; மத். 18:16; அரு. 8:17.)

2. முந்தியும் சொல்லியிருக்கிறேன்; இப்பொழுதும் தூரமாயிருந்தும், உங்கள் நடுவிலிருந்தாற்போல முன் குற்றஞ் செய் தவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் மறுபடியும் சொல்லுகிறேன். (அப். 9:3.)

3. என் உள்ளத்தில் பேசுகிற கிறீஸ்து நாதரைப் பரீட்சைபண்ணக் கருத்தா யிருக்கிறீர்களோ? அவர் உங்கள்மட்டில் பலவீனரல்ல, உங்கள் மட்டில் வல்லவ ராகவேயிருக்கிறார்.

4. அதெப்படியென்றால்: அவர் பலவீனராகச் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், சர்வேசுரனுடைய வல்ல பத்தைக்கொண்டு பிழைத்திருக்கிறார். அப்படியே நாங்களும் அவரில் பலவீன ராயிருந்தும், அவருடனேகூட சர்வே சுரனுடைய வல்லபத்தைக்கொண்டு உங்களுக்காகப் பிழைத்திருப்போம்.

5. நீங்கள் விசுவாசத்தில் நிற்கிறீர்களோவென்று நீங்களே உங்களைச் சோதித்தறியுங்கள். நீங்களே உங்களைப் பரீட்சித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் தள்ளுண்டவர் களாயிருந்தாலொழிய சேசுக்கிறீஸ்துநாதர் உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களையே நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்களோ?

6. நாங்கள் தள்ளுண்டவர்களல்ல வென்று நீங்கள் அறிந்துகொள்வீர்களென்று நம்புகிறேன்.

7. நீங்கள் யாதொரு தின்மையும் செய்யாதபடிக்குச் சர்வேசுரனை வேண்டிக்கொள்ளுகிறோம். அதுவும் நாங்கள் அங்கீகரிக்கப்பட்டவர்க ளென்று காணப்படும்படியாக அல்ல, நாங்கள் தள்ளுண்டவர்கள் போலாயினும் நன்மையானதை நீங்கள் செய்ய வேண்டுமென்றே விண்ணப்பம் பண் ணுகிறோம்.

8. சத்தியத்திற்கு ஒத்தபடியல்லாது சத்தியத்திற்கு விரோதமாய் நாங்கள் ஒன்றும் செய்யக்கூடாதவர்களாயிருக் கிறோம்.

9. நாங்கள் பலவீனரும், நீங்கள் பலமுள்ளவர்களுமாய் இருக்கிறதைப் பற்றிச் சந்தோஷப்படுகிறோம். அப்படியே நீங்கள் முற்றுமுடிய நிற்கும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.

10. இடிக்கிறதற்கல்ல, கட்டுகிறதற்கே ஆண்டவர் எனக்கு அருளின அதிகாரத்தின்படியே நான் வரும்போது, அதிகக் கண்டனை பண்ணாதபடிக்குத் தூரத்திலிருந்து இவைகளை எழுதுகிறேன்.

11. மற்றப்படி சகோதரரே, சந்தோஷமாயிருங்கள். உத்தமராயிருங்கள், தேறுதலடையுங்கள், ஒரே சிந்தனையாயிருங்கள், சமாதானமாயிருங்கள். அப்போது சமாதானத்துக்கும் அன்புக்கும் கர்த்தாவாகிய சர்வேசுரன் உங்களோடு இருப்பார்.

12. பரிசுத்த முத்தமிட்டு ஒருவருக்கொருவர் மங்களஞ்சொல்லிக் கொள்ளுங்கள். அர்ச்சிக்கப்பட்டவர்கள் யாவரும் உங்களுக்கு மங்களஞ் சொல்லுகிறார்கள். (உரோ. 15:18.)

13. நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய இஷ்டப் பிரசாதமும் தேவசிநேகமும் இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருக்கக்கடவது. ஆமென்.


கொரிந்தியர் 2-ம் நிருபம் முற்றிற்று.