பாஷை வரம் தீர்க்கதரிசன வரத்துக்குத் தாழ்ந்ததென்பதும், ஸ்திரீகள் தேவாலயங்களில் உபதேசிக்கக்கூடாதென்பதும்.
1. சிநேகத்தை நாடுங்கள்; ஞானவரங்களையும், விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தையும் வேகமாய்த் தேடுங்கள். (1 கொரி. 12:10, 31.)
2. அதேனென்றால் பாஷை பேசுகிறவன் சர்வேசுரனிடத்தில் பேசுகிறானேயன்றி, மனிதர்களிடத்தில் பேசு கிறதில்லை. ஏனெனில் அவன் சொல்லு கிறது ஒருவனுக்கும் தெரியாது. அவன் இஸ்பிரீத்துவினால் இரகசியங்களைப் பேசுகிறான்.
* 2. பாஷை பேசுகிறவன் யாரெனில் தாவீதென்பவர் சங்கீதங்களைப் பாடினதுபோல இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் தேவ தோத்திரங்களை அந்நியப் பாஷையில் பாடினவர்களாம். அந்த வரம் திருச்சபையின் ஆரம்பத்திலே விசுவாசிகளுக்கு முக்கிய மாய்க் கொடுக்கப்பட்டது.
3. தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் நல்விர்த்திக்காகவும், புத்திமதிக்காகவும், ஆறுதலுக்காகவும் மனிதர்களிடத்தில் பேசுகிறான்.
* 3. இங்கே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்பது விசுவாசத்துக்கடுத்த பரம இரகசி யங்களை வெளிப்படையாக வியாக்கியானஞ் செய்கிற வரமுள்ளவனென்று அர்த்தமாம்.
4. பாஷை பேசுகிறவன் சுய நல்விர்த்திக்காகப் பேசுகிறான். தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ, சர்வேசுரனுடைய சபையின் நல்விர்த்திக்காகப் பேசுகிறான்.
5. நீங்கள் எல்லோரும் பாஷை களைப் பேசவேண்டுமென்று விரும்பு கிறேன். ஆனாலும் நீங்கள் தீர்க்கதரிசனங்களைச் சொல்லவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். ஏனெனில் பாஷைகளைப் பேசுகிறவன் திருச்சபை நல்விருத்தியடையும் பொருட்டு (தான் பேசுவதற்கு) அர்த்தமுஞ் சொன்னா லொழிய, தீர்க்கதரிசனஞ் சொல்லு கிறவன் அவனிலும் மேற்பட்டவன். (எண். 11:29; 1 கொரி. 12:10.)
6. அன்றியும் சகோதரரே, நான் வேத இரகசியங்களை வெளிப்படுத்துதலி லாவது, நான் அறிந்தவைகளிலாவது, தீர்க்கதரிசனங்களிலாவது, போதகங்களி லாவது உங்களுக்கு உபதேசிக்காமல் உங்களிடத்தில் வந்து, பாஷைகளைப் பேசுவதால் உங்களுக்கு என்னாலே என்ன பிரயோசனம்? (1 கொரி. 12:8.)
7. உயிரற்ற வாத்தியங்களாகிய சுரமண்டல முதலியவைகள் சப்திக்கும்போது, விபரீதத்தொனிகளைக் கொடுத் தாலொழிய, குழலால் பாடப்படுகிற தும், சுரமண்டலத்தால் வாசிக்கப்படுகி றதும் இன்னதென்று எப்படித்தெரியும்?
8. அவ்வண்ணமே எக்காளமும் விளங்காத சத்தமிட்டால், எவன் யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுவான்.
9. அதுபோலவே நீங்களும் உங்கள் நாவினால் வெளிப்படையானவாக்கியங்களைப் பேசாவிட்டால், சொல்லுகிறதென்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களா யிருப்பீர்கள்.
10. அப்படியே இவ்வுலகத்தில் எத் தனையோவகைப் பாஷைகள் உண்டு. ஆயினும் அவைகளில் அர்த்தசப்தமில் லாதது ஒன்றுமில்லை.
11. ஆதலால் சப்தத்தின் சாரத்தை நான் அறியாதிருந்தால், எவனோடு பேசுகிறேனோ, அவனுக்கு நான் அன்னி யனாயிருப்பேன். என்னோடு பேசுகிற வனும் எனக்கு அன்னியனாயிருப்பான்.
12. அப்படியே நீங்களும் ஞான வரங் களை ஆவலாய்த் தேடுகிறவர்களான தால், திருச்சபையின் நல்விர்த்திக்காக அவைகளை ஏராளமாய்ப் பெற்றுக் கொள்ளும்படி தேடுங்கள். (1 கொரி. 14:1-4)
13. இதனிமித்தம் பாஷையிலே பேசுகிறவன் அதற்கு வியாக்கியானஞ் செய்யும் வரத்தைக் கேட்டுக்கொள்ளுவானாக. (1 கொரி. 12:10.)
14. ஏனெனில் நான் பாஷையிலே ஜெபித்தால் என் ஆத்துமம் ஜெபிக்கிறது. என் புத்தியோ பலனற்றதாயிருக்கிறது.
15. ஆகையால் செய்யவேண்டிய தென்ன? நான் ஆத்துமத்தோடும் வேண் டிக்கொள்ளுவேன்; புத்தியோடும் வேண் டிக்கொள்ளுவேன்; ஆத்துமத்தோடும் பாடுவேன், புத்தியோடும் பாடுவேன். (எபே. 5:19.)
16. மேலும் நீ ஆத்துமத்தோடு மாத்திரம் சர்வேசுரனை ஸ்துதித்தால் கல்லாத ஜனத்திடமாயிருக்கிறவன் நீ சொல்லுகிறதைக் கண்டுபிடியாதிருக்க, உன் ஸ்துதிக்கு எப்படி ஆமென் என்று சொல்லுவான்?
17. நீ நன்றாய்த் தோத்திரம்பண்ணுகிறாயென்பது மெய்யே. ஆனாலும் (கல்லாத) அவன் அதினாலே நல்விர்த்தி யடையான்.
18. உங்களில் எல்லோருடைய பாஷையையும் நான் பேசுகிறேனென்பதைப்பற்றி என் சர்வேசுரனுக்குத் தோத்திரம்பண்ணுகிறேன்.
* 18. கிரேக்கப் பிரதியில் உங்களெல்லோரையும்விட நான் அதிக பாஷைகளில் பேசுகிறேன் என்றிருக்கிறது. பற்பல ஜாதி ஜனங்களுக்குப் போதிக்கவேண்டிய அப்போஸ்தலருக்குப் பற்பல பாஷை வரம் அவசியமே.
19. ஆகையால் கூடின திருச்சபையிலே அறியாத பாஷையிலே பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதை விட, மற்றவர்களுக்கு நான் போதிக்கும்படிக்கு என் அறிவோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுவது எனக்குப் பிரியமாயிருக்கிறது.
20. சகோதரரே, அறிவிலே நீங்கள் குழந்தைகளாகாதேயுங்கள்; துர்க்குண விஷயத்திலேதான் குழந்தைகளாயிருங் கள். அறிவின் விஷயத்திலோ தேர்ந்தவர் களாயிருங்கள். (மத். 18:3; உரோ. 16:19.)
21. வெவ்வேறு நாவினாலும் வெவ்வேறு உதடுகளாலும் இந்த ஜனத்துடன் பேசுவேன். அவர்கள் என்னைக் கேட்டு இணங்கமாட்டார்களென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்திலே வரைந்திருக்கின்றது. (இசை. 28:11.)
22. ஆதலால் பாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசமில்லாதவர்களுக்கு அடையாளமாயிருக்கின்றது. தீர்க்கதரிசனமோ விசுவாசமில்லாதவர்களுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கின்றது.
23. அப்படியிருக்க திருச்சபை ஒன் றாய்க் கூடியிருக்கையிலே எல்லோரும் பற்பல பாஷைகளைப் பேசுவார்களா கில், கல்லாதவர்கள் அல்லது விசுவாச மில்லாதவர்கள் உள்ளே வந்தால், பைத் தியங் கொண்டிருக்கிறீர்களென்று சொல் லுவார்களல்லவோ? (அப். 2:13-15.)
24. ஆனால் எல்லோரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்களாகில், ஒரு அவிசுவாசி அல்லது கல்லாதவன் உள்ளே வந்தால், அவன் எல்லோராலும் உண்மையில் உணர்த்தப்பட்டு, எல்லோராலும் நிதானிக்கப்படுவான். (அப். 4:13.)
25. அவன் இருதயத்தில் மறைந்தி ருக்கிறவைகள் வெளியரங்கமாகும். அப்போது சர்வேசுரன் மெய்யாகவே உங்களுக்குள் இருக்கிறாரென்று அவன் உச்சரித்து, முகங்குப்புற விழுந்து சர்வே சுரனைத் தொழுவான். (சக். 8:23.)
26. அப்படியிருக்க சகோதரரே, செய்யவேண்டியதென்ன? நீங்கள் சபை யில் கூடிவரும்போது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் உபதே சிக்கிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் பாஷை பேசுகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். இதெல்லாம் நல்விர்த்திக் கேதுவாக நடக்கக்கடவது. (எபே. 4:12.)
27. யாராவது அன்னிய பாஷை பேசுகிறதானால், இரண்டுபேர், மிஞ்சினால் மூன்றுபேர் முறைமுறையாய்ப் பேசக்கடவார்கள். ஒருவன் அதற்கு வியாக்கியானஞ் சொல்லக்கடவான்.
28. வியாக்கியானஞ் சொல்லுகிறவன் இல்லாத பட்சத்தில் சபைக்கூட்டத்தில் அவன் பேசாதிருந்து தன்னோடும் சர் வேசுரனோடும் பேசிக்கொள்ளட்டும்.
29. தீர்க்கதரிசிகள் இருவர் அல்லது மூவர் பேசட்டும்; மற்றவர்கள் ஆராய்ந்து பார்ப்பார்களாக. (1 தெச. 5:21.)
30. அங்கே உட்கார்ந்திருக்கிறவர்களுக்குள் யாதொருவனுக்கு ஏதேனும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசி னவன் பேசாதிருக்கக்கடவான்.
31. ஏனெனில் எல்லோரும் கற்றுக்கொள்வதற்கும், எல்லோரும் தேறுதலடைவதற்கும் ஏதுவாக நீங்கள் அனைவரும் முறைமுறையாய்த் தீர்க்க தரிசனஞ் சொல்லலாம்.
32. தீர்க்கதரிசிகளுடைய இஸ்பிரீத் தானது தீர்க்கதரிசிகளுக்கு அடங்கி யிருக்கின்றது.
33. ஏனெனில் அர்ச்சிக்கப்பட்டவர்களுடைய சகல சபைகளிலும் நான் போதித்துவருகிறபடியே, சர்வேசுரன் கலாபத்துக்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்.
34. சபைகளிலே ஸ்திரீகள் மவுனமாயிருக்கக்கடவார்கள். ஏனெனில் பேசுவதற்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அடங்கியிருக்கக்கடவார்கள்; நியாயப்பிரமாணமும் அப்படியே சொல்லுகிறது. (ஆதி. 3:16; தீத்து. 2:5.)
35. அவர்கள் ஏதாகிலும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டிலே தங்கள் புருஷர்களிடத்தில் வினாவிக் கேட்டுக் கொள்ளட்டும். ஏனெனில் ஸ்திரீகள் சபையிலே பேசுவது வெட்கத்துக்குரிய தாயிருக்கும்.
36. தேவ வாக்கியம் உங்களிடத்திலிருந்தோ புறப்பட்டது? அல்லது உங்களுக்கு மாத்திரமோ வந்தது?
37. உங்களில் யாதொருவன் தீர்க்க தரிசியாய் அல்லது ஞான வரமுள்ளவ னாய்த் தோன்றினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் ஆண்டவருடைய கற் பனைகளென்று அறிந்து கொள்ளக் கடவான். (அரு. 4:6.)
38. இதை யாதொருவன் அறியா திருப்பானாகில், அவன் அறியப்படாத வனாயிருப்பான்.
39. ஆகையால் சகோதரரே, தீர்க்க தரிசனஞ் சொல்ல ஆவலாயிருங்கள். ஆகிலும் பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதேயுங்கள்.
40. ஆனால் சகலமும் ஒழுக்கத்தோடும், கிரமத்தோடும் நடக்கக்கடவது.