நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்தி மார்க்குஸ் அவ்ரேலியுஸ்.
காலம் : கி.பி.161 - 180.
17 ஆண்டுகளாக மார்க்குஸ் அவ்ரேலியுஸ் என்ற உரோமை அரசனின் ஆட்சியில் கிறிஸ்தவர்கள் வதைக்கப்பட்டார்கள். இந்த 4ம் வேத கலகத்தில் அவன் கிறிஸ்தவர்களைச் சித்திரவதை செய்தான். அவர்களுடைய சொத்து, உடமைகளைப் பறிமுதல் செய்தான். உரோமை சாம்ராஜ்யம் பரவியிருந்த மற்ற இடங்களிலும், இந்தக் கொடுமைகள் நடத்தப் பட்டன.
காவுல், லயன்ஸ் போன்ற இடங்களிலும் வேத கலாபனை நிகழ்ந்தது. கிறிஸ்தவன் என்று தெரிந்து விட்டால் அவர்களுக்குப் பொது இடங்களில் நடமாடும் உரிமைகூட மறுக்கப்பட்டது. பொதுச் சந்தைகளில் வாங்க விற்க விடமாட்டார்கள். கடைகளில் ஜாமான் கொடுக்க மாட்டார்கள். தெருக்களில் நடமாடக் கூட கிறீஸ்தவர்களால் முடியாது. ஜனக்கூட்டம் அவர்களைத் திட்டி நிந்திக்கும். அடியும் விழும். கல்லெறியும் கிடைக்கும்.
வேட்டையாடச் செல் பவர்கள் வேட்டையைக் கண்டுவிட்டால் நாய்களை ஏவி சுற்றி வளைத்து கவ்விப் பிடிப்பது போல் கிறீஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டார்கள்! இப்படிப்பட்ட நிர்ப்பாக்கியங்களையும் கிறீஸ்துநாதரின் நாமத்துக்காக அவர்கள் ஏற்றுக்கொண் டார்கள். அது மட்டுமல்ல, அவர்களுடைய எண்ணிக்கையும் பெருகியது! மேலும் தங்களைப் பகைத்துத் துன்புறுத்தியவர்களுக்குப் பிறர் சிநேகத் தோடு உதவிகளையும் அவர்கள் செய்து வந்தார்கள்.
அதற்கொரு உதாரணம் இது: அப்போது மார்க்கஸ் அவ்ரேலியுஸ் ஜெர்மன் இனத்தாருடன் கடும் போரில் ஈடுபட்டிருந்தான். கோடை காலம். படைகளுக்கும், படைக் குதிரைகளுக்கும் குடிப் பதற்கே கூட தண்ணீர் அகப்படவில்லை. இதைக்கண்ட கிறீஸ்தவ சிப்பாய்கள் துணிந்து ஒன்று கூடினார்கள். முழங்காலிட்டு ஜெபித்தார்கள். மற்ற படைவீரர்கள் இவர்களை நிந்தித்துக் கேலி செய்தார்கள்.
ஆனால் ஆண்டவர் இவர்களின் மன்றாட்டைக் கேட்டார். எதிர்பாராத முறையில் பலத்த மழை பெய்தது. வீரர்களும் மிருகங்களும் தாகசாந்தி செய்து கொண்டனர். எதிர்ப்படைகள் மீது புயலும் ஆலங்கட்டி மழையும் தாக்க, அவர்கள் ஓட்ட மெடுத்தார்கள். உரோமைப்படை பாதுகாக்கப்பட்டது. இந்த அதிசயங்களைக் கண்ட சக்கரவர்த்தி கிறீஸ்த வர்கள் வணங்கும் தெய்வத்தின் உதவியால் இது நடந்தது என நம்பி, அவர்களை இனி வதைக்க வேண்டாம் என உத்தரவிட்டான்.
ஆனால் மிகக் கொஞ்சக் காலமே இந்த உத்தரவு அமலில் இருந்தது. மூன்று ஆண்டு முடியுமுன்பே மன்னன் மனம் மாறியது - அல்லது மாற்றப்பட்டது. திரும்பவும் கிறிஸ்தவர்கள் கொடுமைக்கு ஆளாகினர்.
லயன்ஸ் நகரில் அது தீ போலப் பரவியது. சந்தேகப்பட்டவர்களைப் பிடித்து கேள்வி கேட் டார்கள். அவர்களோ தைரியமாகத் தாங்கள் கிறீஸ் தவர்கள் என ஒப்புக்கொண்டார்கள். அதிகாரி வரும் வரை அவர்களைக் காவலில் வைத்தார்கள். அதிகாரி வந்தான். கிறீஸ்தவன் என்று அறியப்படாத எபாகாத்துஸ் என்ற இளைஞன் கிறிஸ்தவர்களை இப்படி நீதியின்றிக் கொல்வதும் தண்டிப்பதும் தவறு; நான் அவர்கள் நிரபராதிகள் என்று எண்பிப் பேன் என்றான்!
நீ கிறீஸ்தவனா - கிறிஸ்தவர்களின் வக்கீலா? என்று கேட்டான் அதிகாரி. 'நான் கிறீஸ் தவன்" என்றான் எபாகாத்துஸ் ! அத்துடன் அவனும் மற்றக் கிறீஸ்தவர்களுடன் வதைத்துக் கொல்லப் பட்டான்.
போதினுஸ் என்ற லயன்ஸ் மேற்றிராணியார் வெறி பிடித்த கூட்டத்தின் நடுவில் விடப்பட்டார். அவர்கள் அவரை உதைத்து, கல்லால் எறிந்தார்கள். பின் சிறையில் தள்ளினார்கள். அங்கு அவர் உயிர் துறந்தார்.
சாங்த்துஸ் என்ற தியாக்கோன் ஆடை உரியப் பட்டு சிவக்கப் பழுத்த செம்புப் பட்டைகளால் உடல் முழுவதும் சுடப்பட்டார். முழு நேரமும் அவர் கூறியது: "நான் ஒரு கிறிஸ்தவன்' என்பதே.
உடல் முழுவதும் ஒரே புண்ணாயிற்று. பழுக்கச் சிவந்த செம்புப் பட்டைகளை அவர் உடலில் வைத்த போது தேவ அருளால் பழைய காயங்கள் அனைத்தையும் அது குணமாக்கிற்று!
பிளாந்தினா என்ற மென்மையான பெண்ணைக் குரூர கலாபனைக்காரர் ஒருநாள் முழுவதும் சித்திர வதைப்படுத்தினார்கள். பலவீனமான பெண் எனக் கருதப்பட்டவள் அத்தனை கொடுமைகளையும் தாங்கியபடி, "நான் ஒரு கிறீஸ்தவள், நாங்கள் தீமை எதையும் செய்வதில்லை'' என்று கூறிக்கொண்டே யிருந்தாள்!
வதைக்கப்படும் வேதசாட்சிகளிடம், "நீங்கள் வேத சாட்சிகளாய் சேசுக்கிறிஸ்துவுக்கு சாட்சி சொல் கிறீர்கள்'' என்று யாரும் கூறினால், ''நாங்கள் பாவிகள். அந்தப் பட்டம் சேசுவுடன் மகிமையடைந்த வர்களுக்கே உரியது. தயவுசெய்து அப்படி எங்களை அழைக்காதீர்கள்" என்றே கூறி வந்தார்கள்!