ஜெருசலேமிலுள்ள தரித்திரரான கிறீஸ்தவர்களுக்காகத் தர்மப் பணங்களைச் சேகரித்துவைக்கவும், தம்மால் அனுப்பப்பட்ட தீமோத்தேயுவையும் வேறு சிலரையும் நன்றாய்ப் பராமரிக்கவும் கேட்டுக்கொண்டு பற்பல வாழ்த்துதல்களோடு நிருபத்தை முடிக்கிறார்.
1. அர்ச்சிக்கப்பட்டவர்களுக்காக வாங்கப்படும் யாசகத்தைக் குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குள்ளே ஸ்தாபித்த ஒழுங்கின்படி நீங்களும் செய்யுங்கள். (கலாத். 2:10.)
2. நான் வருகிற சமயத்திலே யாசகத்தை வாங்கிச் சேர்த்துக்கொண்டிராதபடி உங்களில் அவனவன் தனக்குப் பிரியமானதை ஒரு உண்டியலில் போட்டு வாரத்தின் முதல் நாள்தோறும் தன்னிடத்தில் துண்டாய் வைத்துக்கொள்ளட்டும். (அப். 20:7.)
3. நான் உங்களிடத்திலே வரும்போது, உங்கள் உபகாரத்தை ஜெருசலேமுக்குக் கொண்டுபோகும்படி நீங்கள் தெரிந்து கொள்ளுகிறவர்களை என் நிருபங்களோடே அனுப்புவேன்.
4. நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னனோடுகூட வருவார்கள்.
5. நான் மக்கேதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கேதோனியாவைக் கடந்தபின்பு உங்களிடம் வருவேன். (அப். 19:21.)
6. நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழி நடத்திக்கொண்டு போகும்படிக்கு உங்களோடே ஒருவேளை சிலகாலம் தங்குவேன் அல்லது மாரிகாலம் முழுவதும் உங்களோடிருப்பேன். (உரோ. 15:24; தீத்து. 3:12.)
7. போகிற போக்கிலே இப்போது உங்களை வந்துபார்க்க எனக்கு மனமில்லை. ஆண்டவருக்குச் சித்தமானால் உங்களிடத்திலே சிலகாலம் தங்கியிருக்க லாமென்று நம்புகிறேன். (அப். 20:2.)
8. ஆகிலும் பெந்தேகோஸ்தே பண் டிகை வரைக்கும் எபேசு பட்டணத்தி லிருப்பேன். (அப். 19:1, 10; 2 கொரி. 2:2.)
9. ஏனெனில் அங்கே எனக்கு அகலமான வாசல் நிச்சயமாய்த் திறந்திருக்கின்றது. விரோதிகளும் அநேகர் உண்டு. (அப். 14:27.)
10. தீமோத்தேயு உங்களிடத்தில் வருவாராகில், அவர் உங்களிடத்திலே அச்சமில்லாமலிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் என்னைப் போல் அவரும் ஆண்டவருடைய வேலையைப் பார்க்கிறார். (அப். 19:22.)
11. ஆதலால் ஒருவனும் அவரைப் புறக்கணியாதிருப்பானாக. அவர் என்னிடத்திலே வரும்படி சமாதானத்தோடே அவரை வழிவிட்டனுப்புங்கள். ஏனெனில் சகோதரர்களுடனே கூட அவருடைய வருகைக்கு எதிர்பார்த்திருக்கிறேன். (1 தீமோ. 4:12.)
12. சகோதரனாகிய அப்பொல் லோவைக் குறித்தோவெனில், அவர் உங்களிடத்திலே சகோதரரோடு வரும்படிக்கு நான் அவரை மிகவும் கேட்டுக்கொண்டேன் என்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஆகிலும் அவருக்கு இப்பொழுது வர மனமில்லை. அவருக்கு சமயங் கிடைக்கும்போது வருவார். (1 கொரி. 1:12; 3:6.)
13. விழிப்பாயிருங்கள்; விசுவாசத் திலே நிலைமையாயிருங்கள்; வீரராய் நடந்துகொள்ளுங்கள், திடமாயிருங்கள்.
14. உங்கள் காரியமெல்லாம் பரம அன்போடு செய்யப்படக்கடவது.
15. சகோதரரே, நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறதென்னவென்றால்: ஸ்தேவான், போர்த்துனாத்து, அக்காயுக்கு என்பவர்களுடைய வீட்டார் அக்காயா நாட்டிலே முதற்பலனானவர்களென்றும், அர்ச்சிக்கப்பட்டவர்களுக்கு ஊழியஞ் செய்யும்படிக் குத் தங்களை ஒப்புக்கொடுத்திருக் கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே. (1 கொரி. 1:16; உரோ. 16:5.)
16. அவர்களுக்கும் அவர்களைப்போலே உழைத்துப் பிரயாசைப்படுகிறவர்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள். (பிலிப். 2:29.)
17. ஸ்தேவான், போர்த்துனாத்து, அக்காயுக்கு என்பவர்கள் என்னிடத்திலே வந்திருக்கிறதைப்பற்றிச் சந்தோஷமா யிருக்கிறேன். ஏனெனில் (நீங்கள் செய் யக்கூடாததினால்) உங்களுக்குக் குறை வாயிருந்ததை அவர்கள் தீர்த்து,
18. எனக்கும் உங்களுக்கும் மனம்குளிரப் பண்ணினார்கள். இப்படிப்பட்டவர்களுடைய ஞாபகம் உங்களிடத்திலிருக்கட்டும். (1 தெச. 5:12.)
19. ஆசியாவிலுள்ள சபைகள் உங்க ளுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். எனக்கு விடுதி கொடுத்துவருகிற அக்கில்லாவும் பிரிசில்லாளும் தங்கள் வீட்டிலுள்ள சபையோடு ஆண்டவ ரிடத்தில் உங்களுக்கு மிகுந்த வாழ்த் துதல் சொல்லுகிறார்கள். (அப். 18:2; 18:26: உரோ.16:3, 5.)
20. சகோதரர் எல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையயாருவர் பரிசுத்த முத்தமிட்டு வாழ்த்துங்கள். (உரோ.16:6; 2 கொரி.13:12; 1 இரா. 5:14.)
21. சின்னப்பனாகிய நான் என் கையெழுத்தால் உங்களுக்கு மங்களஞ் சொல்லுகிறேன். (2 தெச. 3:17.)
22. ஒருவன் நம்முடைய ஆண்டவ ராகிய சேசுக்கிறீஸ்துநாதரைச் சிநேகி யாதிருப்பானாகில் சபிக்கப்பட்டவ னாயிருக்கக்கடவான்! மாரன் அத்த. (அதாவது) கர்த்தர் வருகிறார்.
* 22. மாரன் அத்த என்பது நம்முடைய ஆண்டவர் வருகிறாரென்று அர்த்தங் கொள்ளுகிற எபிரேய பாஷையின் வார்த்தைகளாம். அது அந்தப் பாஷையில் வழங்கிய ஒரு சாபமாம். ஓ! கிறீஸ்தவனே, நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதரைச் சிநேகியாதவன் சபிக்கப்பட்டவனென்று அர்ச். சின்னப்பர் தொனிக்கிற இடிமுழக்கத்தைக் கேட்டாயா? இந்தப் பயங்கரமான சாபத்துக்கு நீ ஆளாய்ப் போகாதபடிக்கு நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரை மெய்யாகவே நேசித்துக்கொண்டிரு. ஆனால் அவரை மெய்யாகவே நேசிக்கிறவன் அவருடைய கற்பனையையும் நேசித்து அநுசரிப்பான். அவரை மெய்யாகவே நேசிக்கிறவன் அவருயை சுவிசேஷத்தில் அடங்கிய சத்தியங்களை எல்லாம் விசுவசித்து நேசிப்பான். அவரை மெய்யாகவே நேசிக்கிறவன் அவருடைய அவயவங்களாகிய தரித்திரர்களையும் நேசித்து அவர்களுக்கு இரங்குவான். அவரை மெய்யாகவே நேசிக்கிறவன் அவருடைய திருச்சிலுவையையும் நேசித்து அணைத்துக்கொள்ளுவான். அவரை மெய்யாகவே நேசிக்கிறவன் அவருடைய ஞான சரீரமாகிய திருச்சபையையும் நேசித்து அதற்குக் கீழ்ப்படிவான் என்றறிக.
23. நம்முடைய ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய இஷ்டப்பிர சாதம் உங்களோடுகூட இருப்பதாக.
24. என் அன்பு கிறீஸ்துநாதரிடத்தில் உங்கள் எல்லோரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
கொரிந்தியர் முதல் நிருபம் முற்றிற்று.