ஏழு தலைகளும், பத்துக் கொம்புகளுமுள்ள மிருகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற பபிலோன் என்கிற பெரிய வேசியைக் காண்கிறார்.
1. பின்பு ஏழு கலசங்களையுடைய ஏழு தூதர்களில் ஒருவர் வந்து, என்னை நோக்கிச் சொன்னதாவது: நீ வா, திரண்ட தண்ணீர்களின்மேல் உட்கார்ந் திருக்கிற பெரிய வேசிக்கு வரப்போகிற அவல தீர்வையை உனக்குக் காண்பிப்பேன்.
2. இவளோடேதான் பூவுலக இராஜாக்கள் சோரம்போனார்கள். இவளுடைய வேசித்தன மதுவால் பூவுலகவாசிகள் வெறிகொண்டு திரிந்தார்கள் என்று சொல்லி,
* 1-2. இதில் சொல்லப்பட்ட ஸ்திரீ அஞ்ஞான உரோமையருடைய இராச்சியத்தையும், அந்த இராச்சியத்துக்குத் தலைநகரமாகிய உரோமாபுரியையும் குறிப்பதாக வேதபாரகர்கள் உத்தேசிக்கிறார்கள். அந்தப் பட்டணம் செல்வத்திலும் நாகரீகத்திலும் சிறந்திருந்தாலும், அஞ்ஞான மூர்க்கமும் காமவிகார நடத்தையும் மிகுந்ததாயிருந்ததை அந்த மிருகத்தின் வர்ணிப்பில் காண்க.
3. என்னைப் பரவசமாய் ஒரு வனாந்தரத்துக்குக் கொண்டுபோனார். அப்பொழுது ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் உடையதும், தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான ஒரு செந்நிற மிருகத்தின்மேல் ஏறியிருந்த ஓர் ஸ்திரீயைக் கண்டேன்.
4. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும், தூமிர உடையும் தரித்து, பொன்னினாலும், விலையேறப்பெற்ற இரத்தினங்களினாலும், முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டுத் தன்னுடைய வேசித் தனத்தின் அருவருப்புகளாலும் அசுத்தங்களாலும் நிறைந்த பொற்பாத் திரத்தைத் தன் கையில் வைத்திருந்தாள்.
5. மேலும் இரகசியம்: மகா பபிலோன் பூமியிலுள்ள வேசித்தனங்களுக்கும், அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் சேசுநாதருடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதையும் கண்டேன். நான் அவளைக் கண்டு மிகவும் அதி சயித்து ஆச்சரியப்பட்டேன்.
7. அப்பொழுது தூதன் என்னை நோக்கி: நீ ஏன் அதிசயப்படுகிறாய்? அந்த ஸ்திரீயின் இரகசியத்தையும், ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் உடையதாய் அவளைச் சுமக்கிற மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குச் சொல்லுவேன்.
8. நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது; இப்பொழுது இல்லை. இனி அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமாய்ப்போம். உலகாதி முதல் சீவிய புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராத பூலோகவாசிகள் முன் இருந்ததும், இப்பொழுது இராததுமான அந்த மிரு கத்தைக் கண்டு, ஆச்சரியப்படுவார்கள்.
9. ஞானமடங்கிய கருத்து இதில் உண்டு. ஏழு தலைகள் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். அவைகள் ஏழு இராஜாக்களுமாம்.
10. அவர்களில் ஐந்துபேர் விழுந்து போனார்கள். ஒருவன் இருக்கிறான்; மற்றவன் இன்னம் வரவில்லை. வரும் போது அவன் இருக்கவேண்டியது சொற்பக்காலந்தான்.
11. இருந்ததும் (இப்போது) இராததுமான அந்த மிருகம் எட்டாவதாயிருக்கிறது. அது ஏழிலிருந்து உண்டாகி, கெட்டழியப்போகிறது.
12. பின்னும் நீ கண்ட பத்துக் கொம் புகளும் பத்து இராஜாக்களாம். அவர்கள் இன்னம் அரசாட்சி அடையவில்லை. ஆனாலும் மிருகத்தைத் தொடர்ந்து ஒருமணி நேரத்துக்கு அவர்கள் இரா ஜாக்களைப்போல் அதிகாரம் பெற்றுக் கொள்வார்கள்.
13. இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள். இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
14. இவர்கள் செம்மறிப்புருவையானவருடனே யுத்தம் பண்ணுவார்கள். ஆனால் செம்மறிப்புருவையானவர் அவர் களை வெல்லுவார். ஏனெனில் அவர் கர்த்தாதி கர்த்தனும் இராஜாதி இராஜனுமாயிருக்கிறார். அவருடனே கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்க ளும், தெரிந்துகொள்ளப் பட்டவர்களும், பிரமாணிக்கமுள்ளவர்களுமா யிருக்கிறார்கள். (1 தீமோ. 6:15; காட்சி. 19:16.)
15. அவர் மறுபடியும் என்னைப்பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற இடத்தில் தண்ணீர்களைக் கண்டாயே; அந்தத் தண்ணீர்கள் ஜனங்களும், இராச்சியத்தாரும், பாஷைக்காரருமாமே.
16. நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளை நாசமும் நிர்வாணியுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுகிறவர்களாம்.
17. ஏனெனில், சர்வேசுரன் தம்முடைய வாக்கியங்கள் நிறைவேறுமள வும் அவர்கள் தம்முடைய நோக்கத்தின் படி நடந்து, தங்கள் அரசாட்சியை மிருகத்துக்குக் கொடுக்கும்படி அவர் களுடைய இருதயங்களை ஏவினார்.
18. நீ கண்ட ஸ்திரீயோ பூமியின் இராஜாக்கள்மேல் அரசாட்சி பண்ணுகிற பெரிய பட்டணமாம் என்றார்.