94 கார்மல் அன்னை ஆலயம், கார்மல்நகர், போத்தனூர்


புனித கார்மல் அன்னை ஆலயம்

இடம் : கார்மல்நகர், போத்தனூர்.

மாவட்டம் : கோயம்பத்தூர் (கோவை)
மறை மாவட்டம் : கோயம்பத்தூர் (கோவை).

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு தாமஸ் அக்குயினாஸ் லெப்போன்ஸ்

பங்குத்தந்தை : அருட்பணி பீட்டர் ஜூலியன் (OCD)
இணை பங்குத்தந்தை : அருட்பணி சைமன் ராஜ்.

குடும்பங்கள் :600 + 200 ஆங்கிலோ இந்தியன்ஸ்
அன்பியங்கள்: 31

ஞாயிறு திருப்பலி :
காலை 06.30 மணி (ஆங்கிலம்)
காலை 08.15 மணி (தமிழ்)
மாலை 05.30 மணி (தமிழ்)

திருவிழா : ஜூலை மாதத்தில் ஏழு நாட்கள் நடைபெறும்.

சிறப்புக்கள் :

கோவை மறை மாவட்டத்தில் போத்தனூர், மேட்டூர் என்னுமிடத்தில் 1948 ம் ஆண்டு தடம் பதித்த கார்மெல் துறவிகள் அன்னைக்கு ஆலயம் எழுப்பி மறைப்பணி ஆற்றத் துவங்கினர். கார்மெல் அன்னையின் புதுமையால் இவ்விடம் "கார்மெல்நகர்" என அழைக்கப் படுகிறது. இத்தகைய புகழும் புதுமையும் நிறைந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 05.30 மணிக்கு சிறப்பு நவநாள் திருப்பலியும் குணமளிக்கும் நற்கருணை வழிபாடும், புனித உத்தரிய ஆசீரும் சிறப்பாக நடைபெறுகிறது. 'உத்தரிய மகிமை உலகின் வலிமை' என்ற அன்னையின் வாக்கை மக்கள் ஏற்று அன்னைக்கு சாட்சிகளாய் அருள் பெற்று வாழ்வதே இப்பங்கின் தனிச்சிறப்பு.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 05.30 மணிக்கு ஜெபமாலை புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி மற்றும் தேர்பவனி. மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஜெபமாலை திருப்பலி திவ்யநற்கருணை ஆசீர். மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை மாலை கார்மெல் அன்னையின் சிறப்பு தேர்பவனி நடைபெறுகிறது.