“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ; பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது. மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன் பணக்காரன் விண்ணரசில் நுழைவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது “ மத்தேயு 19 : 23-24
“எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஏனெனில் ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான். அல்லது ஒருவனைச் சார்ந்து கொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது “ மத்தேயு 6 : 24
மேலே உள்ள நம் ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகள் பணத்தையும், பணக்காரர்களையும் பற்றி பேசுகிறது.. ஒருவர் பணக்காரர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆலயத்திலும், திருப்பலியிலும் அவருக்கு முன்னுரிமை கிடைக்குமா?
விசேஷ திருப்பலிகளிலோ அல்லது அவர்களின் அருட்சாதன திருப்பலிகளிலோ அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை அதே நேரத்தில் அவர்களால் நம் ஆண்டவருக்கு அவசங்கை வராமல் காப்பது குருக்களின் கடமை… அவர்களால் என்னென்ன பிரச்சனை வருகிறது…
1. திருப்பலி ஆரம்பித்த பின்பு எப்போது வேண்டுமானாலும் நுழைகிறார்கள்..
2. ஆடம்பரமான ஆடை மற்றும் அளவுக்கு மிஞ்சிய தங்க ஆபரனங்களோடும் உதட்டில் சாயங்களோடும் வருகிறார்கள்…
3. சிலர் ஆபாச ஆடைகளோடு உடலில் எந்த கூச்ச உணர்வின்றி திருப்பலிக்கு வருகிறார்கள்.
4. முன் பகுதியில் பக்தியில்லாமல் அமர்கிறார்கள்..
5. சில பெண்கள் தலைக்கு முக்காடிடாமல் முதுகின் பின்புறத்தை காட்டிக்கொண்டு முன்னால் அமர்கிறார்கள்
6. இடையிடையே பேசிக்கொள்கிறார்கள்.. ஆண்களும் பெண்களும்..
7. ‘சூ’ காலோடு கூச்சமின்றி வாசக ஸ்டான்ட் ஏறி ஆண்களும் பெண்களும் ஆண்டவருடைய உயிருள்ள வார்த்தைகளை வாசிக்கிறார்கள்..
8. இளம் பெண்கள் கழுத்தில்லாத டீ சர்ட் முதலாய் அணிந்து கொண்டு தைரியமாக வாசக ஸ்டான்ட் ஏறி வாசகம் வாசிக்கிறார்கள்..பதிலுக்கு ஆண்களும் கழுத்தில்லாத கலர் பனியன்களோடு வாசகம் வாசிக்கிறார்கள்..
9. எந்த அருட்சாதனங்கள் அவர்கள் வாங்கினாலும் பக்தியற்ற முறையிலேயே சர்வ சாதாரணமாக அவர்கள் பங்கேற்கிறார்கள்..( அவர்களுக்கு சரியான முறையான அந்த குறித்து வகுப்பு எடுக்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறி)
10. திருப்பலியில் அவர்களைப்பற்றிய புகழ்பாடல்கள் வேறு ( சில இடங்களில்..)
11. திருப்பலி முழுவதுமாக முடியும் முன்பே அருட் தந்தையர்களோடும் (பூசை உடுப்பை கழற்றாமலே) அருட்சகோதரிகளோடும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.
12. திருப்பலி பூசை முடியும் முன்பே அவர்களே தங்கள் சொந்த அறிவிப்பையும் அறிவிக்க அருட்தந்தையர்களால் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது…
பணக்காரர்களே ! செல்வந்தர்களே ! கோடீஸ்வரர்களே ! இது போன்ற எந்த உங்களை அழைத்தாலும் நம் மூவொரு கடவுள் முன்னால் உங்கள் செல்வச்செழிப்பு பூஜ்ஜியம் என்பதை மறவாதீர்கள்.. கடவுள் உங்களை விட தேர்ந்தவர் அல்ல. ஆயிரம் மடங்கு… பத்தாயிரம் மடங்கு உயர்ந்தவர் செல்வந்தர் ( மூவுலகத்தையும் ஆளும் அரசர்.. உங்கள் உலக செல்வர் எந்த மூலை அவருக்கு) நம் என்பதை மறவாதீர்கள்..
நம் ஆண்டவருக்கு முன் நீங்களும் ஒன்றுதான்… ஒரு சாதரண ஏழையும் ஒன்றுதான் என்பதை மறவாதீர்கள்… உங்களுக்கு யார் வேண்டுமானாலும் முன்னுரிமை கொடுக்கலாம்… ஆனால் நம் ஆண்டவர் விண்ணகச் செல்வத்தை தவிர வேறு எதுக்கும் ஒரு பைசா அளவுக்குக் கூட மரியாதையோ..முன்னுரிமையோ கொடுக்கமாட்டார் என்று உங்களுக்குத் தெறியாதா? உங்கள் பணம், பகட்டு உங்கள் கல்லறை தூரம் கூட வராது என்பது தெறியாதா??
நடப்பது ஒரு கல்வாரிப்பலி… ஒரு உண்ணதப் பலி என்ற உணர்வு கூட உங்களுக்கு இல்லையென்றால்.. நீங்கள் கிறிஸ்தவர்களாகத்தான் இருந்து என்ன பயன்? உங்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவம் தழைக்கத் துவங்கியபோது இருந்த பணக்கார கிறிஸ்தவர்கள் மற்றும் மன்னர்கள் எப்படி இருந்தார்கள் ? எப்படி வாழ்ந்தார்கள் ? என்ற வரலாறு தெறியுமா??? இருப்பதை பகிர்ந்து துறந்து ஏழ்மையில் வாழ்ந்தார்கள்… உங்களை அப்படி வாழ்ச்சொல்ல உங்களை அழைக்கவில்லை..
உங்கள் பணம் பகட்டை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் வீட்டில் நடைபெறும் விசேசங்களில் வைத்துக் கொள்ளுங்கள்… அதை ஆலயம் வரை எடுத்து வந்து கடவுளை அசிங்கப்படுத்தாதீர்கள்… உங்கள் செல்வத்தையும், பகட்டையும் பூச்சியும் புழுவும்தான் அரிக்கப்போகிறது..
திருப்பலியில் ஏழையும், பணக்காரரும் ஒன்றாகவே கடவுளால் பார்க்கப்படுகிறார்கள்..
பணக்காரர்கள் இப்படி நடந்து கொள்வது தவறுதான் என்று தெறிந்தாலும் அவர்களுக்கு முகத்தாட்சண்யம் பார்த்துக்கொண்டு எதையும் சொல்லாமல் கண்டு கொள்ளமல் இருக்கும் அருட்தந்தையர்களே… நாளைக்கு நம் ஆண்டவர் உங்களிடம் கணக்கு கேட்காமல் விடமாட்டார் (அதிகமாக) என்பதை மறவாதீர்கள்…
குறைந்த பட்சம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அட்லீஸ்ட் வழியாவது காட்டலாம்..அதையும் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்…
செல்வந்தர்களே ! கோடீஸ்வரர்களே ! உங்களை நீங்கள் திருத்தாவிட்டால் ஆண்டவர் கூறிய மெல்லிய ஆடை அணிந்த பணக்காரனுக்கு ( பணக்காரன்- லாசர்) நேர்ந்த கதிதான் உங்களுக்கும் நேரும் என்பதை மறவாதீர்கள்..
குறிப்பு : இது எல்லா பணக்காரர்களுக்கும் அல்ல.. பணத்தையும்…பகட்டையும்…ஆலயத்திலும்…திருப்பலிகளிலும் ஆலய வழிபாடுகளிலும் காட்டும் செருக்கு உள்ள செல்வந்தர்களுக்கே இந்த எச்சரிக்கை கட்டுரை..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !