ஜீவ ஜலமும், ஜீவ விருட்சமும், சர்வேசுரன் தாம் தெரிந்துகொண்டவர்களோடு நித்தியமாய் அரசாளுவதும் வருமாறு.
1. பின்பு, பளிங்கைப்போல் தெளிந்த ஜீவ ஜலமுள்ள ஒரு நதி சர்வேசுரனும் செம்மறிப்புருவையானவரும் இருக்கிற சிங்காசனத்தினின்று புறப்பட்டு வரு கிறதை எனக்குக் காண்பித்தார். (எசே. 47:7.)
* 1. இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டவைகளைப் பழைய ஏற்பாட்டில் எசேக்கியேல் ஆகமம் 47-ம் அதிகாரத்தோடு ஒத்துப்பார்க்கவும். ஜீவ ஜல நதி:- சர்வேசுரன் மோட்சத்தில் நீதிமான்களுடைய உள்ளத்தில் இஸ்பிரீத்துவானவர் வழியாய்ப் பொழியும் பேரானந்த பாக்கியமாம்.
2. அந்த நகரத்து வீதியின் மத்தியி லும், நதியின் இருபுறத்திலும் பன்னி ரண்டு கனிகளைத் தரும் ஜீவ விருட்சம் இருந்தது. அது மாதந்தோறும் தன் கனியைத் தரும். அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்களுக்கு ஆரோக்கியத் தைத் தரக்கூடியவைகள். (எசே. 47:7.)
3. இனி எவ்வித சாபமும் இராது. சர்வேசுரனும் செம்மறிப்புருவையானவரும் வீற்றிருக்கிற சிம்மாசனம் அதில் இருக்கும். அவருடைய ஊழியரும் அவருக்கு ஊழியஞ்செய்து,
4. அவருடைய சமுகத்தைத் தரிசிப் பார்கள். அவருடைய நாமம் அவர்க ளுடைய நெற்றிகளில் இருக்கும்.
5. அங்கே இராக்காலம் இராது; விளக்கு வெளிச்சமும், சூரியனுடைய பிரகாசமும் அவர்களுக்கு வேண்டியதில்லை. ஏனெனில் கர்த்தராகிய தேவனே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்களும் அநவரதகாலம் அரசாளு வார்கள். (இசை. 60:20.)
6. பின்பு அவர் என்னை நோக்கி: இந்த வார்த்தைகள் மகா பிரமாணிக்கமும், உண்மையுமானவைகள். சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியருக்குக் காண்பிக்கும்பொருட்டுத் தீர்க்கதரிசிகளின் மனதை ஏவுகிற கர்த்தாவாகிய சர்வேசுரன் தம்முடைய தூதனை அனுப்பியிருக்கிறார்.
7. இதோ, வேகமாய் வருகிறேன். இந்தப் புஸ்தகத்தில் அடங்கிய தீர்க்கதரிசன வாக்கியங்களைக் காக்கிறவன் பாக்கியவான்.
8. அருளப்பனாகிய நானே இவைகளைக் கேட்டேன்; நானே இவைகளைக் கண்டேன். நான் கேட்டு, கண்டபோது இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை நமஸ்கரிக்கும்படி அவருடைய பாதத்தில் விழுந்தேன்.
9. அவர் என்னை நோக்கி: பத்திரம், அப்படிச் செய்யாதே; உன்னோடும், உன் சகோதரர்களாகிய தீர்க்கதரிசிகளோ டும், இந்தப் புஸ்தகத்தில் அடங்கிய தீர்க்க தரிசன வாக்கியங்களைக் கைக் கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியன்தான். சர்வேசுரனை நமஸ்கரி என்றார்.
10. மீளவும் அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரி சன வாக்கியங்களுக்கு முத்திரை யிடாதே. ஏனெனில் காலம் சமீப மாயிருக்கின்றது.
* 10. முத்திரையிடாதே:- அதாவது, இத்தீர்க்கதரிசனங்களை இரகசியமாய் வைத்துக்கொள்ளாமல் எல்லாருக்கும் பிரசித்தப்படுத்து என்பதாம்.
11. தின்மை செய்கிறவன் இன்னும் தின்மை செய்யட்டும்; அசுத்தங்களி லிருக்கிறவன் இன்னும் அசுத்தமா கட்டும்; நீதிமான் இன்னும் நீதிமா னாகட்டும்; பரிசுத்தவான் இன்னும் பரிசுத்தவானாகட்டும்.
* 11. இன்னும் தின்மை செய்யட்டும்:- இதனால் தின்மை செய்வதற்கு உத்தாரங் கொடுக்கப்படுகிறதென்று எண்ணத்தக்கதல்ல. ஆனால் தீர்க்கதரிசியானவர் சொல்லுகிறதை எவனாவது கவனியாதிருந்தால், அவன்மேல் விழுகிற தண்டனை அவனுடைய குற்றத்தினால் வருகிறதென்றும், சர்வேசுரன்பேரில் முறையிட இடமிராதென்றும் அர்த்தமாம்.
12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுக்குத் தன் தன் கிரியைகளுக் கேற்றபடி நான் அளிக்கும் பலன் என்னுடனே இருக்கிறது.
13. நானே அல்பாவும் ஒமேகாவும், முந்தினவரும் பிந்தினவரும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். (காட்சி. 21:6.)
14. ஜீவ விருட்சத்துக்குச் சுதந்தரமுள்ளவர்களாய் வாசல்களின் வழியாய் நகரத்துக்குள் பிரவேசிக்கும்படி செம்மறிப்புருவையின் இரத்தத்தில் தங்கள் வஸ்திரங்களைக் கழுவுகிறவர்கள் பாக்கியவான்கள்.
15. நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யானதை விரும்புகிறவனும், அதைச் செய்கிறவனும் புறம்பே நிற்பார்கள்.
* 15. நாய்கள்: - தின்மைசெய்த துஷ்டர்கள். இவர்கள் தங்கள் துஷ்டக் கிரியைகளால் மற்றவர்களைக் கடிக்கிறதுபோல் இருப்பதால் நாய்களென்னப்படுகிறார்கள். 16. சேசுநாதர்சுவாமி சர்வேசுரனாகியமட்டும் தாவீதைச் சிருஷ்டித்ததினால் அவருக்கு வேர் என்று சொல்லப்பட்டபோதிலும், மனுஷ சுபாவத்தில் அவருடைய வம்சத்தில் பிறந்ததால், அவர் பிதிர்வழி எனப்படுகிறார்.
16. சேசுவாகிய நான் சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
17. அப்போது இஸ்பிரீத்தும், மண வாளியும்: வாரும் என்கிறார்கள். கேட்கிறவனும்: வாரும் என்பானாக. தாகமாயிருக்கிறவன் வரக்கடவான். விருப்பமுள்ளவன் ஜீவஜலத்தை இல வசமாய் வாங்கிக்கொள்வானாக. (காட்சி. 21:9; இசை. 55:1.)
18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்க தரிசன வாக்கியங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாய் அறிவிக்கிறதென்னவென்றால்: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வார்த்தைகளைச் சர்வேசுரன் அவன்மேல் கூட்டிவைப்பார்.
19. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசனப் புஸ்தகத்தின் வாக்கியங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்தும் பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும் சர்வேசுரன் அவனுடைய பங்கை எடுத்துப் போடுவார்.
20. இவைகளுக்குச் சாட்சி சொல்லு கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய்; வருகிறேன் என்கிறார். ஆமென்; ஆண்டவராகிய சேசுவே, வாரும்.
21. நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின் வரப்பிரசாதம் உங்க ளனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
அருளப்பர் காட்சி ஆகமம் முற்றிற்று.