துவக்க ஜெபம்:
ஆண்டவரே! உமது பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எங்கள் கிரியைகளுக்கு முன் செல்வீராக. உமது வரப்பிரசாத உதவியால் அவைகளை நீரே முற்றுப்பெறச் செய்வீராக. இதனால் எங்களின் சகல ஜெபங்களும் ஞானக் கிரியைகளும் உம்மால் தொடங்கப்பட்டு உம்மாலேயே முடிவடையக்கடவன. எங்கள் ஆண்டவராகிய சேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென்.
தேவ சம்பந்தமான புண்ணியங்களைக் கேட்டு மன்றாடுவோமாக.
விசுவாசம்: என் சர்வேசுரா சுவாமி! திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.
நம்பிக்கை: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் வார்த்தைப்பாடு கொடுத்திருக்கிறபடியினால், சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். ஆமென்.
தேவ சிநேகம்: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் மட்டில்லாத சிநேகத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதினாலே எல்லாவற்றிக்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு சிநேகிக்கிறேன். மேலும் உம்மைப் பற்றி என்னை நான் நேசிக்கிறது போல மற்றெல்லாரையும் நேசிக்கிறேன். ஆமென்.
மாதாவுக்குப் பாத்திமா அர்ப்பண ஜெபம்:
எங்கள் அன்புத் தாயும் அரசியுமான மரியாயே! ரஷ்யாவை மனந்திருப்பி உலக மக்களுக்கு சமாதானம் தருவேனென்று பாத்திமாவில் வாக்களித்தீரே. எங்களுடையவும் உலகத்தினுடையவும் பாவங்களால் உமது மாசற்ற இருதயத்துக்கு நேர்ந்த சகல நிந்தை அவமான துரோகங்களுக்குப் பரிகாரமாக, எங்களுக்கு வருகிற துன்பங்களைப் பரித்தியாகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையை தியானித்துச் சொல்வோம். எங்களை உம்முடைய மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அதன் அடையாளமான கார்மெல் உத்தரியம் அணிகிறோம். இவ்வர்ப்பணத்தை அடிக்கடி விசேஷமாய் சோதனை நேரத்தில் புதுப்பிப்போம் தாயே ஆமென்.
1 அருள் நிறைந்த...
(மாதாவுக்கு நாம் செய்யும் இவ்வர்ப்பணத்தின் அடையாளம் கார்மெல் உத்தரியம் அணிந்திருத்தலாகும். உத்தரிய சாலையில் சேர்ந்து அதை அணிவோமாக)
ஞானஸ்நான வார்த்தைப்பாட்டை புதுப்பித்தல்:
நான் என் ஞானஸ்நானத்தில் அனைவருக்கும் கொடுத்த வார்த்தைப்பாடுகளை அவர் முன்பாக புதுப்பித்துக் கொள்கிறேன்.
பசாசையும் அவன் கிரியைகளையும் அவன் ஆரவாரங்களையும் முழு மனதோடு விட்டுவிடுகிறேன். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் ஏசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தாரென்றும் நமக்காகப் பாடுபட்டார் என்றும் விசுவசிக்கிறேன். பரிசுத்த ஆவியையும், பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபையையும் அர்ச்சிஷ்டவர்களுடைய சமூக பிரயோசனத்தையும் பாவ பொறுத்தலையும், சரீர உத்தானத்தையும், நித்திய சீவியத்தையும் விசுவசிக்கிறேன்.
மாதாவுக்கு அடிமை சாசனம்:
சகல மோட்சவாசிகளுக்கு முன், கடவுளின் கன்னித் தாயான அமலோற்பவ மரியாயே உம்மை என் அன்னையாகவும் ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன். உமது அடிமையாக என் சரீரத்தையும் ஆத்துமத்தையும், என் உள் எண்ணங்களையும் ஐம்புலன்களையும் என் எல்லாவற்றையும் என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்கிரியைகளையும் பலன்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்துக்காக உமது பிரியப்படி நீரே முழு உரிமையுடன் என்னை ஆண்டு நடத்த கையளிக்கிறேன். ஆமென்.
மரியாயின் மாசற்ற இருதயமே என் இரட்சண்யமாயிரும். (மும்முறை)
பரிசுத்த ஆவிக்கு ஜெபம்:
பரிசுத்த ஆவியே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலிருந்து உம்முடைய திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரருடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே! ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே! பேரின்பரசமுள்ள இளைப்பாற்றியே! பிரயாசத்தில் சுகமே, வெயிலிற் குளிர்ச்சியே. அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடு கூடியிருக்கிற பிரகாசமே, உம்முடைய விசுவாசிகளின் இருதயத்தின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்ற மில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிறதைக் குணமாக்கும். வணங்காததை வணங்கப் பண்ணும். குளிரோடிருக் கிறதைக் குளிர் போக்கும். தவறினதைச் செம்மையாய் நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்ச ஆனந்தத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி . ஆமென்.
சமுத்திரத்தின் நட்சத்திரமே:
1. சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க! கடவுளின் கருணையுள்ள தாயே! எப்பொழுதும் கன்னிகையே! மோட்சத்தின் இனிய வாசலே வாழ்க!
2. கபிரியேல் தூதன் உரைத்த, மங்கள் வாழ்த்துரையை ஏற்று, ஏவையின் பெயரை மாற்றிய தாயே! சமாதானத்தில் எங்களை நிலை நிறுத்துவீராக.
3. குற்றவாளிகளின் பாவ விலங்கை அறுப்பீராக. பாவ இருளில் உள்ளோருக்கு ஒளியருள்வீராக. எங்கள் எல்லா தீமைகளையும் நீக்கி நலன் அனைத்திற்காகவும் மன்றாடுவீராக.
4. தாயென்று உம்மைக் காட்டும் எங்களுக்காக உமது மகவாகப் பிறந்த தேவசுதன் உம் மன்றாட்டின் மூலம் எங்கள் வேண்டுதலை ஏற்பாராக.
5. கன்னியருள் சிறந்த கன்னிகையே! அனைவரிலும் மிக சாந்தமுள்ள அன்னையே! எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவியும்; சாந்தமும் கற்பும் உள்ளவர்களாக்கும்.
6. பழுதற்ற வாழ்வை எங்களுக்குத் தாரும். உமது குமாரன் சேசுவை நாங்கள் கண்டு என்றும் மகிழ்ந்திருக்க எங்கள் பாதையை பத்திரமாய்க் காத்தருள்வீராக.
7. தேவ பிதாவுக்கும், துதி உயர் கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியான தேவனுக்கும், திரித்துவரான ஏக கடவுளுக்கும் புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.
மரியாயின் கீதம்: (லூக் 1:47 - 55).
என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது. என் இரட்சண்யமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தனது அடிமையானவளுடைய தாழ்மையைக் கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார் ஆகையால் இதோ இக்கால முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். ஏனெனில் வல்லபமிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார். அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய கிருபையும் தலைமுறை தலைமுறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள் மேல் இருக்கின்றது. அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார். தங்கள் இருதய சிந்தனையில் கர்வமுடையவர்களைச் சிதறடித்தார். வல்லபமுடைத்தானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி தாழ்ந்தவர்களை உயர்த்தினார். பசித்திருக்கிறவர்களை நன்மைகளினால் நிரப்பி செல்வர்களை வெறுமையாய் அனுப்பி விட்டார். தமது கிருபையை நினைவு கூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை ஆதரித்தார். அப்படியே நமது பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஊழியுள்ள காலம் அவர் சந்த்தியாருக்கும் அவர் வாக்குத் தத்தம் பண்ணியிருந்தார்.
இம்முதல் வாரத்தில் தினமும் சொல்ல வேண்டிய ஜெபங்கள்
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனின் பிரார்த்தனை.
சுவாமி கிருபையாயிரும் (2)
கிறிஸ்துவே கிருபையாயிரும் (2)
சுவாமி கிருபையாயிரும் (2)
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலேயிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சிஷ்ட தமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் சுமாமி.
1. பிதாவிடமிருந்தும் சுதனிடமிருந்தும் புறப்படுகிறவரான பரிசுத்த ஆவியே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
2. பிதாவுக்கும் சுதனுக்கும் சரிசமமானவராயிருக்கிற பரிசுத்த ஆவியே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
3. பிதாவின் வாக்குறுதியாக இருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
4. மோட்ச பிரகாசத்தின் கதிரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
5. சகல நன்மைகளுக்கும் காரணமாயிருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
6. பரலோக நீரின் சுனையே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
7. எரித்துப் பட்சிக்கிற நெருப்பாயிருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
8. பற்றியெரியும் சிநேகமாயிருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
9. ஞான அபிஷேகமாயிருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
10. பரம அன்பினுடையவும் சத்தியத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
11. ஞானத்தினுடையவும் அறிவினுடையவும் ஆவியே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
12. ஆலோசனையினுடையவும் திடத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
13. புத்தியினுடையவும் பக்தியினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
14. தெய்வ பயத்தினுடைய ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
15. வரப்பிரசாதத்தினுடையவும் ஜெபத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
16. சமாதானத்தினுடையவும் சாந்தத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி,
17. அடக்கவொடுக்கத்தினுடையவும் மாசற்றதனத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
18. உத்தம ஆறுதலான பரிசுத்த ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
19. எங்களை அர்ச்சிக்கிறவரான பரிசுத்த ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
20. திருச்சபையை ஆளுகிறவரான பரிசுத்த ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
21. உந்ந்த கடவுளின் கொடையாகிய பரிசுத்த ஆவியே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
22. பிரபஞ்சத்தை நிரப்புகிறவரான பரிசுத்த ஆவியே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
23. சர்வேசுரனுடைய பிள்ளைகளின் சுவீகாரமாகிய பரிசுத்த ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
24. பாவத்தின் மட்டில் பயங்கரத்தை பரிசுத்த ஆவியே எங்களிடம் மூட்டியருளும்.
25. இவ்பூவுலகின் முகத்தை பரிசுத்த ஆவியே வந்து புதுப்பித்தருளும்.
26. எங்களுடைய ஆத்துமங்களிலே பரிசுத்த ஆவியே உம்முடைய ஒளியைப் பொழிந்தருளும்
27. எங்களுடைய இருதயங்களிலே பரிசுத்த ஆவியே உம்முடைய நெறியைப் பதிப்பித்தருளும்.
28. உம்முடைய சிநேகத்தின் சுவாலையினால் பரிசுத்த ஆவியே எங்களைப் பற்றியெரியச் செய்தருளும்
29. உம்முடைய வரப்பிரசாதப் பொக்கிஷங்களை பரிசுத்த ஆவியே எங்களுக்குத் திறந்தருளும்.
30. நன்றாக ஜெபிப்பதற்கு பரிசுத்த ஆவியே எங்களுக்குப் படிப்பித்தருளும்.
31. உம்முடைய பரலோக ஏவுதல்களினால் பரிசுத்த ஆவியே எங்களை ஒளிர்வித்தருளும்.
32. இரட்சண்யத்தின் பாதையிலே பரிசுத்த ஆவியே எங்களை நடத்தியருளும்.
33. அவசியமாயிருக்கிற ஒரே ஞானத்தை பரிசுத்த ஆவியே எங்களுக்குத் தந்தருளும்.
34. நன்மை செய்யும் பயிற்சியிலே பரிசுத்த ஆவியே எங்களைத் தூண்டியருளும்.
35. எல்லாப் புண்ணியங்களின் பேறு பலன்களையும் பரிசுத்த ஆவியே எங்களுக்குத் தந்தருளும்.
36. நீதியிலே நிலைத்து நீடித்திருக்கும்படி பரிசுத்த ஆவியே எங்களுக்கு உதவியருளும்.
37. எங்களுடைய நித்திய வெகுமானமாக பரிசுத்த ஆவியே நீரே இருப்பீராக.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே உம்முடைய பரிசுத்த ஆவியை எங்களிடம் அனுப்பியருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே பரிசுத்த ஆவியின் வரங்களை எங்கள் ஆத்துமத்தில்
பொழிந்தருளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே ஞானத்தினுடையவும் பக்தியினுடையவும் ஆவியை எங்களுக்குத் தந்தருளும்.
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளின் இருதயங்களை நிரப்பும், அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும்.
ஜெபிப்போமாக.
இரக்கமுள்ள பிதாவே! உம்முடைய தெய்வீக ஆவியானவர் எங்களைப் பிரகாசப்படுத்தி பற்றி எரியச் செய்து பரிசுத்தப் படுத்தும்படி எங்களுக்கு அருள்வீராக. இதனால் அவருடைய மோட்ச பனிப் பொழிதலினால் எங்களை ஊடுருவி, நாங்கள் நற்கிரியைகளில் மனமுடையவர்களாகச் செய்தருளும். உம்மோடும் அதே பரிசுத்த ஆவியோடும் இராச்சிய பாரம் செய்கிற எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவின் பெயரால் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
தேவ மாதாவின் பிரார்த்தனை.
சுவாமி கிருபையாயிரும் (2)
கிறிஸ்துவே கிருபையாயிரும் (2)
சுவாமி கிருபையாயிரும் (2)
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலேயிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
அர்ச்சிஷ்ட தம திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்ச்சிஷ்ட கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கிறிஸ்துவினுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
திருச்சபையினுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மகா பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னி சுத்தங் கெடாத மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆச்சரியத்துக்குரிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நல்ல ஆலோசனை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சிருஷ்டிகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இரட்சகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மகா புத்தியுடைத்தான கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சக்தியுடையவளாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தயையுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தர்மத்தினுடைய கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஞானத்துக்கு இருப்பிடமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எங்கள் சந்தோஷத்தினுடைய காரணமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஞானப் பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மகிமைக்குரிய பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா என்கிற புஷ்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தாவீது இராஜாவினுடைய உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தந்தமயமாயிருக்கிற உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வாக்குத்தத்தத்தின் பெட்டியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பரலோகத்தினுடைய வாசலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
விடியற்காலத்தின் நட்சத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே ., எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கிறிஸ்தவர்களுடைய சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சம்மனசுக்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பிதாப்பிதாக்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அப்போஸ்தலர்களுடைய இராக்கினயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வேதசாட்சிகளுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஸ்துதியருடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னியர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சகல அர்ச்சிஷ்டவர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மோட்ச ஆரோபணமான இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
திரு ஜெபமாலையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
குருக்களின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சமாதானத்தின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
குடும்பங்களின் ராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களை போக்கியருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
சேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஜெபிப்போமாக.
சுவாமி முழுமனதோடே தண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னிகையான முத்தி பேறு பெற்ற மரியாயுடைய வேண்டுதலினாலே சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுகளை யெல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
இரண்டாம் வாரத்தில் பயனுடன் பல தடவைகள் சொல்லக் கூடிய ஜெபம்.
(அர்ச். லூயிஸ் மோன்போர்ட் செய்தது) மரியாயின் இரகசியம் எண். 68, 69.
மரியாயிக்கு ஜெபம்.
நித்திய பிதாவின் அன்புக்குரிய மகளாகிய மரியாயே வாழ்க!
சுதனின் ஆச்சரியத்துக்குரிய தாயாகிய மரியாயே வாழ்க!
பரிசுத்த ஆவியின் மிகப் பிரமாணிக்கமுள்ள பத்தினியாகிய மரியாயே வாழ்க!
என் அருமைத் தாயும், என் தலைவியும், என் வல்லமையுள்ள அரசியுமாகிய மரியாயே வாழ்க!
என் மகிழ்வே! என் மகிமையே! என் இருதயமே! என் ஆத்துமமே வாழ்க!
ஆனால் நான் இன்னும் போதிய அளவு உங்களுடையவனாயில்லை, ஆதலால் மீண்டும் என்னை முழுவதும் உங்களிடம் ஒப்படைக்கிறேன். எனக்கோ மற்றவர்களுக்கோ எதையும் நான் ஒதுக்கி வைக்கவில்லை.
உங்களுக்குச் சொந்தமாயில்லாத யாதொன்றையும் நீங்கள் என்னிடத்தில் கண்டால் இந்தக் கணத்திலேயே அதை எடுத்துக் கொண்டு, என்னிடத்திலுள்ள சகலத்திற்கும் தாங்களே எஜமானியாக இருந்து கொள்ளுங்கள். என்னிடத்தில் கடவுளுக்குப் பிரியமற்ற எல்லாவற்றையும் அழித்து விடுங்கள். அதை வேருடன் பிடுங்கி இல்லாமல் செய்து விடுங்கள். உங்களுக்கு நல்லதெனத் தெரிகின்ற எல்லாவற்றையும் என்னில் வைத்து, அதை விருத்தி செய்து என்னிடம் வளரச் செய்யுங்கள்.
உங்கள் விசுவாசத்தின் ஒளி என் மன இருளை நீக்குவதாக. உங்கள் ஆழ்ந்த தாழ்ச்சி என் ஆங்காரத்தை அகற்றி, அங்கே இருப்பதாக.
உங்கள் உந்நத தியான காட்சிச் செபம், அலைகிற என் உள் மனதின் பராக்குகளுக்கு ஒரு முடிவைக் கொணர்வதாக, உங்கள் இடையறா கடவுள் தரிசனம் என் ஞாபகத்தை அவருடைய பிரசன்னத்தால் நிரப்புவதாக.
உங்கள் இருதயத்தின் எரியும் சிநேகம் என் இருதயத்தின் வெது வெதுப்பை அனல் பற்றிச் செய்வதாக. உங்கள் புண்ணியங்கள் என் பாவங்களின் இடத்தில் வருவனவாக.
உங்கள் பேறுபலன்கள் கடவுள் முன்னால் என் செல்வமாகவும் ஆபரணங்களாகவும் ஆவனவாக. இறுதியாய் மிகுந்த நேச அருமையுள்ள தாயே! கூடுமானால்,
சேசுவையும் அவருடைய தேவ திருச்சித்தத்தையும் அறிய உங்கள் விருப்பும் தவிர வேறு எதுவும் எனக்கு இல்லாதிருக்கச் செய்யுங்கள்.
ஆண்டவரை வாழ்த்தி மகிமைப்படுத்த உங்கள் ஆன்மாவைத் தவிர வேறு ஆன்மா எனக்கு இல்லாதிருக்கச் செய்யுங்கள்.
கடவுளைப் பரிசுத்தமாயும் ஆர்வத்தோடும் உங்களைப் போல் நேசிக்க உங்கள் இருதயத்தைத் தவிர வேறு இருதயம் எனக்கு இல்லாதிருக்கச் செய்யுங்கள்.
தியான காட்சிகளையும் வெளிப்படுத்தல்களையும் உங்களிடம் நான் கேட்கவில்லை; உணரக் கூடிய பக்தியையும் ஞான இன்பங்களையும் மன்றாடவில்லை.
கடவுளை எந்த இருளின் நிழலுமின்றி தெளிவாய்க் காண்பது உங்களுக்குரிய சலுகையாயிருக்கிறது.
கசப்பில்லாத முழு மகிழ்ச்சியை அவரிடத்தில் கொள்வது உங்களுக்குரிய சலுகையாயிருக்கிறது. மோட்சத்தில், உங்கள் குமாரனுடைய வலது பாரிசத்தில் தாழ்வில்லாமல் மகிமையாய் வெற்றியுடன் திகழ்வதும் சம்மனசுக்கள் மேலும் மனிதர்கள் மேலும் பசாசுக்கள் மேலும் எல்லா வல்லமையும் கொண்டிருப்பதும் உங்களுக்குரிய சலுகையாயிருக்கிறது.
கடவுளுடைய கொடைகளை ஒன்றும் பாக்கியில்லாமல் சுதந்திரமாய் எடுத்து வழங்குவது உங்களுக்குரிய சலுகையாயிருக்கிறது.
ஓ பரிசுத்த மரியாயே! ஆண்டவர் உங்களுக்களித்துள்ள மிக நல்ல பாகம் இதுவாக இருக்கின்றது. அது ஒரு போதும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆதலால் நான் மிகவே அக்களிக்கிறேன். இங்கே இவ்வுலகில் என் பாகமாக உங்களுடைய பாகத்தில்
பங்கு கொண்டிருக்கவே நான் விரும்புகிறேன்:
நான் காணாமலும் சுவைக்காமலும் அப்படியே விசுவசித்து கொள்ள வேண்டும்; மனித ஆறுதலின்றி மகிழ்ச்சியோடு துன்பப்பட வேண்டும்; இளைப்பாற்றியின்றி தினமும் எனக்குத் தானே மரிக்க வேண்டும்;
சுயநலமின்றி சாகும் வரையிலும் உங்கள் அடிமைகளுள் ஈனம் மிக்கவனாய் ஆர்வமுடன் உங்களுக்காக உழைக்க வேண்டும்.
எனக்காக நீங்கள் இரக்கத்துடன் பெற்றுத் தர நான் மன்றாடும் ஒரே வரப்பிரசாதம் எதுவென்றால், என் வாழ்வின் ஒவ் வொரு நாளும், ஒவ்வொரு கணமும், நீங்கள் இவ்வுலகில் செய்து வந்ததுபோல் 'ஆமென் அப்படியே ஆகட்டும்' என்று கூறவும், நீங்கள் மோட்சத்தில் இப்பொழுது செய்வதுபோல் 'ஆமென் அப்படியே ஆகட்டும்' என்று கூறவும் நீங்கள் என் ஆன்மாவில் செய்கிற அனைத்துக்கும் 'ஆமென் அப்படியே ஆகட்டும்' என்று கூறவும். செய்தருள வேண்டுமென்பதே.
இதனால் என்னில் காலத்திலும் நித்தியத்திலும் நீங்களே முழுமையாக சேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவீர்களாக
ஆமென்.
இங்கே தரப்பட்டுள்ள வாசகங்களை வாசிப்பது மட்டும் போதாது. ஒவ்வொரு வாக்கியத்தையும் தியானிக்க வேண்டும். அவற்றில் வைக்கப்பட்டுள்ள வரப்பிரசாதம் நமக்கு முழுவதுமாகக் கிடைக்கும்படி மாதாவிடம் மன்றாட வேண்டும்.
மரியாயின் மீது உண்மைப்பக்தி எண் : 12.38.
கடைசியில் நாம் அப்போஸ்தலருடன் சேர்ந்து ஆச்சரியத்துடன் இவ்வாறுதான் உரைக்க வேண்டும். வரப்பிரசாத முறையிலும் இயற்கையின் தன்மையிலும் மகிமையின் முறையிலும் அற்புதங்களின் அற்புதமாக இருக்கும் அன்னை மாமரியின் அழகு என்னவென்றும் பெருமை என்னவென்றும் உயர்வுகள் என்னென்ன வென்றும் ''கண்கண்டதுமில்லை; காது கேட்டது மில்லை, மனித இதயத்திற்கு அது எட்டியதுமில்லை" ஒரு புனிதர் (புனித யூகாரியுஸ்) கூறுகின்றார், நீ தாயைக் கண்டுணர விரும்பினால் குமாரனைக் கண்டுணர்ந்து கொள் என்று. மாமரி இறைவனின் தகுதியுள்ள தாய். இங்கு எல்லா நாவும் மௌனமாகக் கடவன (Hic taceat Omnis Lingua).
சேசு கிறிஸ்து தம் சுபாவப்படியும் தம் வெற்றியிமினித்தமும் ஆன்மாக்களின் அரசாயிருப்பதுபோல, மாமரி வரப்பிரசாதத்தினால் பரலோக பூலோக அரசியாயிருக்கிறார்கள். "கடவுளின் அரசு உங்களுக்குள்ளேயே இருக்கின்றது'' என்ற வார்த்தைகளுக்கொப்ப சேசு கிறிஸ்துவின் இராச்சியம் முக்கியமாக மனிதனின் இருதயத்தில் அல்லது அவனுடைய அந்தரங்கத்தில் இருப்பது போலவே மாமரியின் இராச்சியம் மனிதனின் அந்தரங்கத்திலேயே - அதாவது அவன் ஆன்மாவிலே உள்ளது. காணப்படும் சிருஷ்டிகளில் மகிமையடைவதைவிட மாமரி ஆன்மாக்களில் தான் முக்கியமாகவும் அதிகமாகவும் தன் திருக்குமாரனுடன் மகிமையடைகிறார்கள். இதனால் புனிதர்கள் அழைப்பதுபோல் நாமும் மாமரியை நம் இருதயங்களின் அரசி என அழைக்கலாம்.
முடிவு ஜெபங்கள்:
சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சாரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்வதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாய் இருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். ஆமென்.
ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை மரியாளுக்கும் மன்றாட்டு:
கிறிஸ்துவின் ஆத்துமமே , என்னைப் புனிதப்படுத்தும்.
மரியாயின் மாசற்ற இருதயமே, எனக்கு உதவும்.
கிறிஸ்துவின் திருவுடலே, என்னைக் காப்பாற்றும்.
என் ஆன்மாவின் அன்னையே, என்னை மனந்திருப்பும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை மகிழ்வியும்.
மரியாயின் துயரங்களே, என்னை ஊடுருவும்.
கிறிஸ்துவிலாவிலிருந்து வழியும் திருநீரே. என்னைக் கழுவும்.
மரியாயின் கண்ணிரே , என்னைத் தூய்மையாக்கும்.
கிறிஸ்துவின் பாடுகளே, என்னை ஆறுதல் படுத்தும்.
மரியாயின் தனிமையே, என்னை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடும்.
ஓ! என் நல்ல இயேசுவே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒ! மரியாயின் மென்மையே, என்னைக் கண்ணோக்கும்.
ஓ! இயேசுவே, உமது திருக்காயங்களில் என்னை மறைத்துக் கொள்ளும்.
ஓ! மரியே உமது ஆன்மாவின் ஆழத்தில், என்னை பற்றி எரியச் செய்யும்.
ஓ! இயேசுவே, தீமையிலிருந்து என்னை தப்புவியும்.
ஒ! மரியே நான் சாகும்போது, என்னை உம் அன்புகரத்தில் தாங்கிக் கொள்ளும்.
ஓ! இயேசுவே, உமது சம்மனசுக்கள் புனிதர்களுடைய குழுவில் என்னை சேர்த்துக் கொள்ளும்.
ஒ! மரியே விண்ணகத்தில் உம்மைக் கண்டடைய எனக்குக் கட்டளையிடும்.
ஆமென்.