நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்தி தியோக் கிளேஷியன்.
காலம் : கி.பி. 284 - 286.
உரோமை சாம்ராஜ்யத்தின் கீழ்ப்பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் இந்த வேதகலாபனை வெகு கொடூரமாயிருந்தது. ஆலயங்கள் இடிக்கப்பட்டன. வேதாகமங்கள் அழிக்கப்பட்டன. இதுவரையிலும் அறிந்திராத கொடிய சித்திரவதைகள் செய்யப்பட்டன. யுசேபியுஸ் என்பவர் சிலவற்றைக் கூறியுள்ளார்.
கிறீஸ்தவர்கள் சிறு தீயின் மேல் தலைகீழாய்த் தொங்க விடப்பட்டனர். கூரிய வேல்களால் ஒரு காலை ஊடுருவக் கூத்தி அந்நிலையில் சாகும் வரை விடப்பட்டனர். நகக் கண்களில் கூர்மையான ஊசி ஏற்றப்பட்டனர். ஓட்டுத் துண்டுகளால் எலும்பு தெரிய சதை கிழிக்கப்பட்டனர். அந்தக் காயங்களில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்பட்டனர்.
ஃப்ரீஜியாவில் ஒரு கிறிஸ்தவப் பட்டணமே கொளுத்தப்பட்டு ஆண் பெண் குழந்தைகள் அனை வரும் நெருப்புக்கு இரையாக்கப்பட்டார்கள். ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவின் நாமத்தைக் கூவி அழைத்தவாறே அம்மக்கள் வேதசாட்சிகள் ஆனார்கள். கிழக்கு முதல் மேற்கு வரை நாடு முழுவதும் இரத்தத் தால் தோய்ந்திருந்தது என்று லாக்தான்ஸியுஸ் என்பவர் எழுதியுள்ளார். நினைக்கவே நடுங்கும் உபாதைகளை வேதவிரோதிகளான மூர்க்கர் கிறீஸ்தவர்களுக்குச் செய்தார்கள். நம் வேதசாட்சிகளோ ஒரு வார்த்தை பேசாமல் அத்தகைய கொடிய வாதைகளையும் தாங்கி வீர வேதசாட்சிகள் ஆனார்கள்!
இந்த வேதகலகத்தில்தான் அர்ச். பிலோமினம் மாள், அர்ச். ஆக்னஸம்மாள் வேதசாட்சி முடி பெற் றார்கள். அர்ச். செபஸ்தியாரும் 14 வயதுச் சிறுவ னான அர்ச். பங்றாசும் வேதசாட்சிகளானதும் இப்போதுதான். வேதசாட்சியான அர்ச். குயின்டீன் என்பவர் எலும்பு மூட்டுகள் பிசகும் வரை இழுப்பு இயந்திரத்தில் வதைக்கப்பட்டார். பின் இரும்புச் சங்கிலிகளால் அடிபட்டார். எண்ணெயும் தார் எண்ணெயும், கிரீஸம் கொதிக்கிற நிலையில் உடல்மேல் ஊற்றப்பட்டார். அதன்பின் நெருப்பால் சுடப்பட்டு, அதன்பிறகு தலை வெட்டப்பட்டார்.
முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குள் இவ்வாறு திருச்சபை பத்து வேதகலாபனைகளைச் சந்தித்தது! அவற்றுள் மிகக் கொடிய கலாபனை கடைசியாக நடைபெற்ற இப்பத்தாம் கலாபனையே! 305-ம் ஆண்டில் இது தியோக்ளேஷியன் மரணத்தோடு குறைந்தாலும் முழுவதும் நிற்கவில்லை . 313-ம் ஆண்டில் மிலான் பட்டணத்து சாசனம் (Edict of Milan) வரையிலும் அது நீடித்தது. ஏழு தலையுள்ள சிவந்த பறவை நாகத்தின் பத்துக் கொம்புகளைப் போல் காட்சி. 12:3) இப்பத்து வேதகலாபனைகளும் சாத்தானின் தாக்குதல்களாக இருந்தன. ஆனால் அதனால் திருச்சபையை அழிக்க இயலவில்லை . "நரகத்தின் வாசல்கள் அதை மேற் கொள்ள மாட்டாமல்" (மத்.16:18) போயிற்று.
உரோமை சாம்ராஜ்யத்தில் மட்டுமல்ல, இங்கி லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, மெக்ஸிகோ போன்ற இடங்களிலும் பல வேதகலாபனைகள் நடந் துள்ளன. இந்த நூற்றாண்டில் மார்க்ஸிய நாஸ்திகம் பரவிய இடங்களில் எல்லாம் மிகப் பயங்கரமான வேத கலகங்கள் நடந்தன. இன்றும் நடந்து வருகின்றன. முற்காலங்களைப் போன்ற முரட்டுத்தன்மை சற்றும் குறையாமலும், விஞ்ஞான முறையான நூதன சித்திர வதைகளும் இப்பொழுது கையாளப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, நாடார்ந்த அளவில் வேதகலாபனை நடைபெறவில்லை. இதனால் தானோ என்னவோ இந்நாட்டில் வேதம் ஒன்றரை சதவீதத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. நம் மத்தியில் வேதகலாபனை வந்தால் நம் விசுவாசம் தாக்குப் பிடிக்குமா?
மாதாவின் மக்களாகிய நம்முடைய விசுவாசம் வேதசாட்சிய அளவுக்கு பலப்படுத்தப்படும்படி யாக, நம்மையும் நம் நாட்டையும் மரியாயின் மாசற்ற இருதயத்திடம் முழு நம்பிக்கையுடனும் மிகுந்த மன உருக்கத்துடனும் ஒப்படைப்போம்.