தந்தை பியோவும் பாவசங்கீர்த்தனமும் 4

ஒரு முறை தாம் கேட்ட பாவசங்கீர்த்தனங்களின் அளவு பற்றியும், அதைத் தம்மால் எப்படி செய்ய முடிந்தது என்பது பற்றியும் பாத்ரே பியோ விளக்கினார்:

“இடைவெளி எதுவுமின்றி தொடர்ந்து பதினெட்டு மணி நேரம் நான் பாவசங்கீர்த்தனம் கேட்ட நாட்கள் இருந்திருக்கின்றன. அந்த நாட்களில் எனக்கென ஒரு நிமிடம் கூட ஒதுக்க என்னால் முடிந்ததில்லை. ஆனால் என் ஊழியத்தில் கடவுள் எப்போதும் என்னைத் திடப்படுத்துகிறார்; எனக்கு உதவுகிறார். ஆன்மாக்கள் சேசுவிடம் வந்து அவரை நேசிக்க ஒரு கருவியாக என்னால் இருக்க முடியும் வரை, என் அடிப்படைத் தேவைகளையும் கூட வெறுக்க ஒதுக்க அவர் எனக்கு பலம் தருவதாக நான் உணர்கிறேன்.

ஃப்ரெட்டெரிக் என்பவர் பாத்ரே பியோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்தபின் உண்மையாகவே மனந்திருப்பட்டவர்களில் ஒருவர். தமது அதிசயத்திற்குரிய மனந்திரும்புதலின் வரலாற்றில் சில காரியங்களை அவர் பின் வருமாறு விளக்கினார்:

“ 1928 நவம்பரில் நான் பாத்ரே பியோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்தேன். நான் ப்ரொட்டஸ்டான்ட் சபையிலிருந்து கத்தோலிக்கத் திருச்சபைக்கு மதம் மாறியவன். ஆனால் விசுவாசத்தால் அல்ல. ஓர் இத்தாலியக் கத்தோலிக்கப் பெண்ணை திருமணம் செய்வதற்காகவும், சில சமூக நன்மைகளுக்காகவுமே நான் மதம் மாறியிருந்தேன், உண்மையில் என்னிடம் விசுவாசமே இருக்கவில்லை. ப்ரொட்டஸ்டாண்ட் சபையினரின் தவறுகள், தப்பறைகளில் வெகுகாலமாக ஊறியிருந்த எனக்கு உண்மையான விசுவாசத்தைத் தர ஓர் அவசரமான ஞான உபதேசம் போதுமானதாக இருக்கவில்லை.

இரகசியமான, மர்மமான காரியங்களில் நான் எப்போதும் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். ஆவியுலக மர்மங்களுக்குள் என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பனை நான் கண்டுபிடித்தேன். ஆயினும் விரைவிலேயே கல்லறைக்கு அப்பாலிருந்து வந்த அந்த ஆவியுலகச் செய்திகளின் தெளிவற்ற, உறுதியற்ற தன்மை என்னை சோர்வடையச் செய்துவிட்டது. அதன்பின் பில்லி சூனியம், மந்திரவாதம், சித்து விளையாட்டுக்கள் போன்ற எல்லாத் துறைகளுக்குள்ளும் நான் ஆர்வத்தோடு அறிமுகமானேன். மறுபிறவி, பிரம்மா, மாயா போன்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தத் தொடங்கினேன். எதோ பெரிய, புதியதொரு நிதர்சனத்தை நான் கண்டுபிடிக்கப்போகிறேன் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தேன். இவ்வாறு கடவுளின் காரியங்களில் என்னையே நான் ஏமாற்றிக்கொண்டிருந்தேன்.

இவ்வளவுக்கும் இடையில், என் மனைவியின் திருப்திக்காக திருச்சபையின் தேவத்திரவிய அனுமானங்களிலும் நான் பங்கு பெற்றேன். அந்த கப்புச்சின் துறவற குரு பற்றி கேள்விப்பட்ட போது, என் ஆன்மா இருந்த கேவலமான நிலை இதுதான்.

அவர் ஒரு உயிருள்ள பாடுபட்ட சுரூபம் என்றும், தொடர்ச்சியாக அற்புதங்களைச் செய்பவர் என்றும் நான் அறிந்தேன். ஆகவே வினோதமான ஆவலுக்கு உள்ளாகி இதை என் சொந்தக்கண்களால் காண நான் முடிவு செய்து கொண்டேன்.

தந்தை பியோவும் பாவசங்கீர்த்தனமும் 4 : நேற்றைய தொடர்ச்சி-

அவர் ஒரு உயிருள்ள பாடுபட்ட சுரூபம் என்றும், தொடர்ச்சியாக அற்புதங்களைச் செய்பவர் என்றும் நான் அறிந்தேன். ஆகவே வினோதமான ஆவலுக்கு உள்ளாகி இதை என் சொந்தக்கண்களால் காண நான் முடிவு செய்து கொண்டேன்.

பாவசங்கீர்த்தனத் தொட்டியருகில் முழந்தாளிட்டு, நான் பாத்ரே பியோவிடம், “ தந்தாய், நான் பாவசங்கீர்த்தனத்தை ஒரு நல்ல சமூக மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடு என்று மட்டுமே நினைத்தேன். அது தெய்வீகமானது என்று நான் ஒருபோதும் நம்பியதில்லை “. என்றேன். பாத்ரே பியோ மிகுந்த துயர பாவனைகளோடு, “ தப்பறை! அப்படியானால் நீ தேவத் துரோகமான முறையிலேயே திவ்ய நன்மைகள் வாங்கியிருக்கிறாய்…. நீ ஒரு பொதுப்பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். உன் மனச்சான்றை நன்கு பரிசோதித்துப்பார். நீ கடைசியாக நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து எவ்வளவு காலமாயிற்று என்பதை நினைவுக்குக் கொண்டு வா. சேசு நாதர் யூதாஸுக்குக் காட்டிய இரக்கத்தை விட அதிகமாக உன்மீது இரக்கமுள்ளவராக இருந்திருக்கிறார் “ என்றார்.

அதன்பின் அவர் என் தலைக்கு மேலாக, நிலைத்த பார்வையோடு எதையோ பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பலமான குரலில் “ சேசுவும் மாமரியும் போற்றப்படுவார்களாக ! “ என்றார்.

அதன்பின் அவர் எழுந்து பெண்களின் பாவசங்கீர்தனங்களை கேட்பதற்காக சாக்றிஸ்திலிருந்து கோவிலுக்கு சென்றார். நான் சாக்றிஸ்திலேயே இருந்தேன். நான் முழுவதும் அசைக்கப்பட்டும், நெகிழ்சியடைந்தும் இருந்தேன். எனக்குத் தலை சுற்றிக்கொண்டிருந்தது. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. “ நீ கடைசியாக நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து எவ்வளவு காலமாயிற்று என்பதை நினைவுக்குக் கொண்டு வா “ என்ற பாத்ரே பியோவின் வார்த்தைகள் என் காதில் ரிங்காரமிட்டுக் கொண்டே இருந்தன. அவற்றிலிருந்து என் கவனத்தைத் திருப்ப என்னால் இயலவில்லை.

மிகுந்த சிரமத்திற்குப் பின் நான் பின்வரும் தீர்மானங்களை எடுத்தேன்: நான் ஒரு ப்ரொட்டஸ்டாண்ட் சபையினராக இருந்தேன். அதை விட்டு விலகி, ( நிபந்தனைக்குட்பட்டு) மீண்டும் ஞானஸ்நானம் பெற்றேன். அதன்பின் என் கடந்த கால வாழ்வில் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டன. என்றாலும் என் முழு அமைதிக்காக, என் குழந்தைப் பருவம் முதல் நான் செய்த எல்லாப் பாவங்களையும் சொல்ல நான் முடிவு செய்தேன்.

தந்தையவர்கள் திரும்பி வந்த போது, அவர் அதே கேள்வியை மீண்டும் கேட்டார். நான் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னேன். ஆனால் பாத்ரே பியோ என்னை இடைமறித்து, “ நீ உன் தேன் நிலவில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, கடைசியாக நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தாய், ஆகவே நாம் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு அதிலிருந்து தொடங்குவோம்” என்றார்.

நான் ஆடிப்போனேன். வாயடைத்துப் போனவனாக, தெய்வீகமான ஒன்றோடு இப்போது நான் தொடர்பு கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். என் கடந்த காலம் முழுவதும் தமக்குத் தெறியும் என்பதை அவர் என்னிடமிருந்து மறைத்துவிட்டு என்னிடம் பல கேள்விகள் கேட்டுக்கொண்டே என் எல்லாப் பாவங்களையும் தெளிவாகவும், துல்லியமாகவும் நான் விவரித்துச் சொல்ல எனக்கு உதவி செய்தார். என் சாவான பாவங்கள் அனைத்தையும் இவ்வாறு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தபின் அந்தப் பாவங்களின் கொடூரத் தன்மையை நான் புரிந்து கொள்ளச் செய்தார். அதன் பின் என்றுமே நான் மறக்க முடியாத ஒரு குரலில்:

“ சேசு நாதர் தமது அளவற்ற அன்பில் உன்னை மனந்திருப்புவதற்காகத் தவித்துக் கொண்டிருந்த அதே வேளையில், நீயோ சாத்தானுக்குத் துதிப்பாடல் பாடிக்கொண்டிருந்திருக்கிறாய் “ என்றார்.

அதன்பின் அவர் எனக்கு அபராதம் விதித்து விட்டு எனக்கு பாவ மன்னிப்பளித்தார். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இப்போது நான் கத்தோலிக்கத் திருச்சபையின் சத்தியங்களில் மட்டுமல்ல, மாறாக, அதன் மிகச் சிறிய வழிபாட்டுச் சடங்குகளிலும் கூட முழுமையான விசுவாசம் கொண்டிருக்கிறேன். என் உயிரே போவதாக இருந்தாலும் என் ஆண்டவரையும், என் விசுவாசத்தையும் நான் மறுதலிக்க மாட்டேன்! “

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

தொடரும்….

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !