தகுதியான உள்ளத்தோடு நற்கருணை இயேசுவை பெற்றுக்கொள்ள மூன்று வழிகள்.
1. பரிசுத்தம் : நற்கருணையின் நிறம் வெண்மை. நற்கருணையின் நிறத்தைப்போல வெள்ளை மனதுடையர்களாக பாவமில்லாத மனநிலையோடு அவரை வாங்க வேண்டும். அதாவது நம்மை நன்றாக தயாரித்து பாவசங்கீர்த்தனம் செய்து பரிசுத்த உள்ளத்தோடு பரிசுத்தரை வாங்க வேண்டும்.
2. நன்மை : திவ்ய நற்கருணைக்கு இன்னொரு பெயர் ‘ நன்மை “. “ நீங்க இன்று நன்மை வாங்கீனீர்களா?” உங்க பையன் புது நன்மை வாங்கிட்டானா? “ என்று கேட்பதுண்டு. ஆக நாம் நன்மை வாங்க வேண்டுமானால், நமக்குள் நன்மை இருக்க வேண்டும். நான் நல்லதையே சிந்திக்க வேண்டும்; நல்லதையே பேச வேண்டும். நமக்குள் சமாதானம் இருக்க வேண்டும். மற்றவரை மன்னிக்க வேண்டும். பிறரைப்பற்றி அவதூறு பேசக்கூடாது. ஆக நாம் தீமையை விலக்கி நன்மை அணிந்து ‘ நன்மை ‘ வாங்க வேண்டும்.
3. நன்றி : தன்னையே உடைத்து உணவாக வருபவருக்கு நன்றி சொல்ல வேண்டும் “ ஆகவே, அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி அதைப்பிட்டு தன் சீடர்களுக்கு கூறியதாவது.. “ என்று பார்க்கிறோம். நற்கருணை ஆண்டவரை வாங்கியவுடன் அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நம்மை படைத்தவருக்கு நன்றி. நம்மைக் காப்பாற்றி வழி நடத்தி வருபவருக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்படி ஆண்டவர் தன்னையே பகிர்ந்து உணவாக கொடுத்தாரோ அதுபோல் நாமும் நம்மிடம் உள்ளவைகளைப் பகிர்ந்து பிறருக்கு உதவி செய்து வாழவேண்டும். அதற்கான வரங்களையும் நற்கருணை ஆண்டவரிடம் கேட்க வேண்டும். உதவி செய்யும் வேளையில் வரும் இடையூறுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி : சென்னை, முடிச்சூர், பரிசுத்த திருக்குடும்ப ஆலயம பங்குத்தந்தை…
சிந்தனை : பரிசுத்த உள்ளத்தோடு, நன்மைகள் நிறைந்த நெஞ்சோடு ஆண்டவருக்கு நன்றி செலுத்தி திவ்ய நற்கருணை ஆண்டவரைப் பெற்றுக்கொள்வோம்...ஆண்டவர் தன்னை உடைத்தார். நாமும் பிறருக்காக நம்மை கொஞ்சம் உடைப்போம்… அதாவது உடைத்தல் என்றால் மற்றவர்களுக்காக நாம் கொஞ்சம் கஷ்ட்டப்படுதல் அவர்கள் சிலுவைகளை கொஞ்சம் Share செய்தல் அதனால் வரும் வலிகளைப் பொருத்துக் கொள்ளுதல். நம்முடைய சிலுவைகளையும் இன்முகத்தோடு தாங்குதல்; அவற்றை ஒப்புக்கொடுத்தல்.. நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களொடு சிறிதாவது பகிர்தலும் ‘ உடைத்தலில் ‘ அடங்கும்..
திவ்ய நற்கருணை ஆண்டவரை பாவமில்லாத மனதோடு; தகுந்த தயாரிப்போடு தாழ்ச்சியோடு முழங்காலில் நின்று நாவில் பெற்றுக்கொள்வோம்…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !