நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்தி டிராஜன்.
காலம் : கி.பி. 98 - 117.
பத்தொன்பது ஆண்டுகளாக இம்மூன்றாம் வேத கலாபனை நடந்தது! அதற்கு முதல் பலியானது வேத சாட்சியான கிளமெண்ட் பாப்பரசர்! அந்நாட்களில் பாப்பரசராயிருப்பது வேதசாட்சியாகக் கொல்லப் படுவதன் நிச்சயமான காரணமாயிருந்தது.
பித்தீனியா நாட்டின் கவர்னராக இருந்த இளைய பிளினி என்பவன் கிறீஸ்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று டிராஜனிடம் எழுதிக் கேட்டிருந் தான்.
''கிறீஸ்தவர்கள் சில குறிப்பிட்ட நாட்களில் சூரிய உதயத்திற்கு முன்பாகக் கூடி தாங்கள் கடவுள் என்று வழிபடும் கிறிஸ்துவுக்குப் பாடல்கள் பாடுகிறார்கள். களவு, விபச்சாரம், வாக்குமீறல் மற்றும் தீய செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று வாக்குறுதி எடுத்து அவ்வாறே நடந்து வருகிறார்கள்...'' என்றும், எளிய முறையில் வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுவிட்டு, ''இவர்களது மூட நம்பிக்கை" எல்லா இடங்களிலும் வேகமாகப் பரவி வருவதால் நாட்டுத் தெய்வங்களுடைய கோவில்கள் வெறுமை யாகி வருகின்றன என்றும் எழுதியிருந்தான் பிளினி.
இதற்கு டிராஜன் பதில் எழுதும்போது, கிறீஸ்தவர்களை மெனக்கெட்டு தேடி அலைய வேண்டாம்; ஆனால் யாராவது கிறீஸ்தவன் என்று குற்றஞ்சாட்டப்பட்டால், அவன் நம் நேச தெய்வங் களுக்குத் தூபம் காட்டும்படியும், தான் கிறிஸ்தவன் என்பதை மறுதலிக்கும்படியும் கேட்க வேண்டும். அவன் அதைச் செய்ய மறுத்தால், சட்ட விரோத மான மதத்தைச் சார்ந்தவன் என்றும், சக்கரவர்த்தியின் ஆணையை அவமதித்தவன் என்றும் குற்றம் சாட்டி அவனைக் கொலை செய்து விட வேண்டும் என்றும் எழுதினான்.
இம்மூன்றாம் வேதகலாபனையில் முந்திய இரு வேதகலாபனைகளிலும் கொல்லப்பட்டவர்களை விட பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் அதிகமாக வதைத்துக் கொலை செய்யப்பட்டார்கள். அதில் 120 வயதுடைய அர்ச். சிமையோன் என்னும் ஜெருச லேம் மேற்றிராணியாரும் ஒருவர்! அவர் உரைக்க இயலாத கொடிய உபாதைகளுக்குப் பின் நமதாண்டவரைப் போல் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.
அர்ச். அந்தியோக்கியா இஞ்ஞாசியாரும் இந்த 3-ம் வேதகலாபனையில்தான் தம் ஆச்சரியமான வேதசாட்சிய முடியைப் பெற்றார். டிராஜன் சக்கரவர்த்தி அந்தியோக்கியா வழியாகப் பயணம் வந்தபோது, அவ்விடத்தின் மேற்றிராணியாரான இஞ்ஞாசியாரை அழைப்பித்தான்.
"தீய பசாசைப் போல் என் கட்டளைக்குப் பணி யாமல் மக்களை அழிவுக்கு இட்டுச் செல்பவன் நீதானா?" என்று கேட்டான்.
''அரசே! யாரும் என்னைத் தீய பசாசு என்று அழைத்ததில்லை. கடவுளின் ஊழியர்கள் யாரும் எவ்வளவு தூரம் பசாசுக்களிடமிருந்து அகன்றிருக் கிறார்கள் என்றால், அப்பசாசுகள் அவர்கள் முன்னிலையில் நிற்கக் கூடாமல் ஓலமிட்டுக் கொண்டு ஓடி ஒழிகின்றன."
''தியோபோரஸ் என்னும் இது யார்?'' (அர்ச். இஞ்ஞாசியாரின் இன்னொரு பெயர் தியோ போரோஸ் என்பது. கடவுளைக் கொண்டிருப்பவன் என்பது அதன் பொருள்.)
"அது நானே . நான் மட்டுமல்ல, சேசுகிறிஸ்துவை உள்ளத்தில் கொண்டிருக்கும் யாரும் தியோ போரோஸ்தான்."
''அப்போ , எங்கள் உள்ளத்தில் நாங்கள் தெய்வங் களைக் கொண்டிருக்கவில்லை என்று நினைக் கிறாயோ? அவர்கள் எங்களுக்காக சண்டையிடு கிறார்களோ !'' தெய்வங்களா! அவைகள் பசாசுக்களே .
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த கடவுள் ஒரே ஒருவர்தான். அவருடைய ஏக சுதன் சேசு கிறீஸ்துவையே , இவருடைய இராச் சி யத்தையே நான் தேடுகிறேன்.''
பி லாத் து சிலுவையில் அறைந்தானே அந்த சேசுவையா?''
"பாவத்தையும், அதனை இயற்றியவனையும் சேசுக்கிறிஸ்து சிலுவையில் அறைந்தார் என்று சொல்ல வேண்டும்...''
''அப்போ நீ கிறீஸ்துவை உனக்குள் கொண்டிருக் கிறாயோ ?'' "ஆம். அதில் சந்தேகமே இல்லை ..." ''ஹா! கிறீஸ்துவைக் கொண்டிருப்பதாகப் பெருமைப்படும் இஞ்ஞாசி விலங்கிடப்பட்டு உரோமைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு விலங்குகளுக்குப் போடப்படுவானாக'' என்று டிராஜன் தீர்ப்பெழுதினான்.
நீண்ட கடற்பயணம் செய்தார் இஞ்ஞாசியார். உரோமையிலுள்ள கிறிஸ்தவர்கள் தமக்கு விடுதலை பெற்றுத் தர முயற்சித்து தம் வேதசாட்சிய வாய்ப் பைக் கெடுத்து விடக்கூடாது என்று அவர்களுக்கு முன்கூட்டியே செய்தி அனுப்பினார். அவர் மீது இரண்டு பசித்த சிங்கங்களை ஏவி விட்டார்கள்.
அப்போது அவர், "நான் ஆண்டவரின் கோதுமை. அவருடைய புனித மாவாக ஆகும்படி சிங்கங்களின் பற்களால் நான் அரைக்கப்பட வேண்டும்" என்று கூறி சேசுவின் திருநாமத்தை உச்சரித்தபடியே சிங்கங்களால் கடித்து விழுங்கப்பட்டார்.
அவரிடம் மிஞ்சிய எலும்புகளை விசுவாசிகள் சேகரித்து அந்தியோக்கியாவுக்கு அனுப்பினார்கள்.