ஜெபமாலைப்போர் உங்களுக்குத் தெரியும். அது என்ன சிலுவைப் போர்..?
நமக்கு வாழ்க்கையில் வருகின்ற கஷ்ட்டங்கள், இடையூறுகள், துன்பங்கள, வேதனைகள், கவலைகள், நோய்கள்; நமக்கு பிடிக்காத நிகழ்வுகள், பிடிக்காத உணவுகள்; பிடிக்காதவர்களுடன் பேசும் சூழ்நிலைகள், வெயில், மழை, குளிர் என்று இப்படி எந்த சிலுவைகள் வந்தாலும் அவற்றை அமைந்த மனதுடன் ஏற்று நம் இயேசு சுவாமியின் அன்புக்காகவும், பாவிகள் மனம் திருந்தவும் (நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாகவும்), மாதாவின் மாசில்லா இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் நிந்தை அவமானங்களுக்கு பரிகாரமாகவும் ஒப்புக்கொடுக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபமாலைகள் ஜெபிக்க வேண்டும்..
நம்முடைய சொந்த சிலுவைகளும், ஜெபமாலைகளும் இப்போது கண்டிப்பாக தேவை.இவைகள் நம்முடைய ஆன்மாவுக்கு எதிராகவும், பிறரின் ஆன்மாக்களுக்கு எதிராக சாத்தான் நடத்திவரும் பாவ சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், வாய்ப்புகளுக்கு எதிரான போர் தளவாடக்கருவிகள்.. ஏற்கனவே பாவம் மற்றும் சாவான பாவங்களில் சிக்கித்தவிக்கும் எண்ணற்ற மக்களை மீட்கப்பயன்படும் ஆயுதங்களும் இவைகளே...
ஆக, இன்றைய சூழ்நிலைகளில் ஜெபமாலைப்போரும், சிலுவைப்போரும் கட்டாயம் தேவை...
திவ்யபலிபூசையில் தகுதியான உள்ளத்தோடு நற்கருணை நாதரான நம் சேசு சுவாமியிடம் ஐக்கியமாகி,எப்போதும் ஜெபமாலைப்போரிலும், சிலுவைப்போரிலும் ஈடுபட்டு வந்தால் நம் ஆன்மாவையும் மீட்டு எண்ணற்ற ஆன்மாக்களையும் மீட்டு வெற்றி முழக்கங்களோடு மோட்சம் சேரலாம் நமதன்னையின் துணையில்.!