இறைவனது சொந்த மக்களின் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் கிறிஸ்தவ கு டு ம் ப ம் செயற்பட வேண்டுமென்ற பெரிய உண்மையை பெற்றோர் உணர் தல் அவசியம். ''இந்தத் திருவருட் சாதனத்தின் வல் லமையால் தங்களது திருமண வாழ்விலும், பிள்ளைக் ளைப் பெற்றெடுப்பதிலும், வளர்த்து உருவாக்குவதி லும், புனிதமடைய ஒருவருக்கொருவர் உதவுகின்றனர், இதனால் தங்கள் வாழ்க்கை நிலையிலும், பதவியிலும் இறை மக்களுள் இவர்கள் தமக்குரிய நன்கொடையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
ஏனெனில் திருமண இணைப்பால் உருவாகிறது குடும்பம்; இக்குடும்பத்தில் தான் மனித சமுதாயத்தின் புதுக் குடிமக்கள் பிறக் கின்றனர். காலங்களின் முடிவு வரை இறை மக்கள் குலம் நிலைத்து நிற்பதற்காக இவர்கள் பரிசுத்த ஆவி யின் அருளால் ஞானஸ்நானத்தின் மூலமாக இறைவ னின் பிள்ளைகளாக்கபடுகின்றனர். ஒரு வகையில் இல்லத் திருச்சபை என்று அழைக்கப் பெறக் கூடிய குடும் பத்தில் பெற்றோர் தமது சொல்லாலும் முன் மாதிரி யாலும் தங்கள் பிள்ளைகளுக்கு முதன் முதலில் விசு வாசத்தைப் போதிப்பவர்களாக இருப்பார்களாக. இன்னும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரித்தான அழைத் தலை அவர்கள் பேணிக்காக்க வேண்டும்.; தேவ அழைத் தலாக இருந்தால் அவர்கள் தனிப்பட்ட அக்கறையு டன் அதைப் பேணி வளர்க்க வேண்டும்.''
(திருச்சபை இல 11) (பொது நிலையினரின் அப் போஸ்தலத்துவம் இல 11 ஐயும் பார்க்கவும்)
தம் குடும்ப எல்லையைத் தாண்டி, உலகம் திருச் சபை ஆகிய சமூகங்களுக்குத் தம் உள்ளத்தைத் திறந்து வைக்குமாறு பிள்ளைகளைப் பயிற்றுவிக்க வேண்டும். இறைமக்களின் உயிருள்ள, செயற்படும் உறுப்பினராய் உள்ளனர் என்று உணரும் அளவுக்கு பங்கு எனும் சமூகத்தில் இவர்களும் ஏற்றுக் கொள்ளப்படுவார்களாக''
' (பொது நிலை அப். இல. 30)
"குடும்ப வாழ்வில் கணவன் மனைவியர் ஒருவ ரொருவர் முன்னிலையிலும், தம் மக்கள் முன்னிலையிலும் கிறிஸ்துவின் அன்பிற்கும் அவர் மேலுள்ள விசுவாசத் திற்கும் சாட்சிகளாக நின்று தமக்கேயுரிய அழைத்த லுக்கேற்ப வாழ்கின்றனர். கிறிஸ்தவக் குடும்பம் இறை யரசின் இன்றைய பண்புகளையும், வரவிருக்கும் இன்ப வாழ்வின் மேலுள்ள நம்பிக்கையையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது''
(சங்க ஏடு: திருச்சபை இல. 35)