I. முதல் சனி அதிகாலையில் கண்விழிக்கும் போதே, அந்நாளை சேசுவுக்கும் மாதாவுக்கும் பரிகாரமாக ஒப்புக் கொடுக்க வேண்டும். "என் தேவனே...'' என்ற பாத்திமா பரிகார ஜெபத்தையும், தொடர்ந்து, "சேசுவே, உமதன்பிற் காகவும்” என்ற ஜெபத்தையும் சொல்லலாம்.
அதன்பின் காலை உணவுக்கு முன் சந்தோஷ தேவ இரகசிய ஜெபமாலை சொல்லவும்.
II. காலை 9 மணிக்கு மேல் மத்தியானத்திற்குள் பின்வரும் எட்டு அருள் நிறை மந்திரம் கொண்ட பரிகார ஜெபத்தைச் சொல்ல வேண்டும். மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகார ஆறுதலாக இது சொல்லப்பட வேண்டும்.
பாத்திமா காட்சிகளின்படி முதல் சனி பக்திக்கருத்துக்கள் ஐந்து:
1. மாதா ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த சத்தியம் மறுக்கப்படும் துரோகத்திற்குப் பரிகாரமாக, 1 அருள்.
2. மாதா கடவுளின் தாய் என்ற சத்தியம் மறுக்கப்படும் நிந்தைக்குப் பரிகாரமாக, 1 அருள்.
3. மாதா என்றும் கன்னிகை என்னும் சத்தியம் மறுக்கப் படும் நிந்தைக்குப் பரிகாரமாக, 1 அருள்.
4. ஆன்மாக்களில் குறிப்பாக இளம் உள்ளங்களில் மாதாவின் மீது பகையையும் வெறுப்பையும் மூட்டும் துரோகத்திற்குப் பரிகாரமாக, 1 அருள்.
5. மாதாவின் பக்திப் பொருட்களில் அவர்களைப் பழித்து நிந்திக்கும் பாவங்களுக்குப் பரிகாரமாக, 1 அருள்.