கத்தோலிக்க வேதாகமத்திற்கும் பிரிந்த சபையார் வேதாகமத்திற்கும் உள்ள சில வேறுபாடுகள்!

கத்தோலிக்க வேதாகமம் 4 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டது பிரிந்த சபையார் வேதாகமம் 16 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது

கத்தோலிக்க வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்கள் கொண்டதாகும் பிரிந்த சபையாரின் வேதாகமம் 39 புத்தகங்களைக் கொண்டதாகும்

பிரிந்த சபையார் வேண்டாம் என விட்டுவிட்ட பகுதிகள்
1.தொபியாசு ஆகமம்
2.யூதித் ஆகமம்
3.மக்கபேயாகமம் 1
4.மக்கபேயாகமம்2
5.ஞானாகமம்
6.சீராக் ஆகமம்
7.பரூக் ஆகமம்

கத்தோலிக்க வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் டேனியல் ஆகமம் 14 அதிகாரங்கள் கொண்டது பிரிந்த சபையாருடையது 12 அதிகாரங்களைக் கொண்டது

கத்தோலிக்க வேதாகமம் யோவேல் ஆகமம் 4 அதிகாரங்களைக் கொண்டது பிரிந்த சபையாரின் வேதாகமம் 3 அதிகாரங்களைக் கொண்டது

கத்தோலிக்க வேதாகமம் மலாக்கி ஆகமம் 3 அதிகாரங்களைக் கொண்டது பிரிந்த சபையார் வேதாகமம் 4 அதிகாரங்களைக் கொண்டது

கத்தோலிக்க வேதாகமம் வுல்காத்தா புதிய ஏற்பாடு கலா:5:22 பரிசுத்த ஆவியின் கனிகள் 12 பிரிந்த சபையார் வேதாகமத்தில் பரிசுத்த ஆவியின் கனிகள் 9

இச்சையடக்கம்,அடக்கவொடுக்கம்,நிறை கற்பு இம்மூன்றும் விடுபட்டிருக்கும்

கத்தோலிக்க வேதாகமம் புதிய மொழி பெயர்ப்பு பல தப்பறைகளைக் கொண்டுள்ளது அவற்றுள் மேற்குறிப்பிட்ட பரிசுத்த ஆவியின் கனிகள் இச்சையடக்கம் அடக்கவொடுக்கம் நிறை கற்பு விடுபட்டுள்ளது

கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்களைக் கொண்டது பிரிந்த சபையார் வேதாகமம் 66 புத்தகங்களைக் கொண்டது

புனித ஜெரோம் மொழி பெயர்த்த வுல்காத்தா வேதாகமம் மட்டுமே கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வ வேதாகமமாகும்